search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    கிரிக்கெட் சூதாட்ட புகாரில் இலங்கை முன்னாள் வீரர் கைது
    X

    கிரிக்கெட் சூதாட்ட புகாரில் இலங்கை முன்னாள் வீரர் கைது

    • லங்கா பிரிமீயர் லீக் கிரிக்கெட்டின் போது சூதாட்டத்தில் (மேட்ச் பிக்சிங்) ஈடுபட 2 வீரர்களை அணுகியதாக குற்றம்சாட்டப்பட்டது.
    • இவர் இலங்கை அணிக்காக ஒரு டெஸ்ட், 49 ஒருநாள் மற்றும் 24 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான சசித்ரா செனநாயகே கடந்த 2020-ம் ஆண்டு லங்கா பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் (மேட்ச் பிக்சிங்) ஈடுபட 2 வீரர்களை அணுகியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த சூதாட்ட புகார் குறித்து விசாரித்த கொழும்பு தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு செனநாயகே 3 மாதத்துக்கு வெளிநாடு செல்ல தடை விதித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் செனநாயகே விளையாட்டு ஊழல் தடுப்பு புலனாய்வு பிரிவினர் முன்னிலையில் நேற்று காலை சரண் அடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    38 வயதான சசித்ரா செனநாயகே இலங்கை அணிக்காக ஒரு டெஸ்ட், 49 ஒருநாள் மற்றும் 24 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

    Next Story
    ×