search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுவாச பிரச்சனை"

    • கடல் நீரின் தன்மையை அறிய தண்ணீரை பரிசோதனைக்கும் அனுப்பி உள்ளனர்.
    • எண்ணெய் கழிவுகள் சேகரிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

    பொன்னேரி:

    மிச்சாங் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது எண்ணூர் கடல் பகுதியில் எண்ணெய் கழிவு பரவியது. கடலில் மிதந்து வரும் இந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணி இன்னும் நீடித்து வருகிறது.

    இதற்கிடையே இந்த எண்ணெய் கழிவு பழவேற்காடு மீனவர் குப்பம் பகுதிகளான அரங்கம்குப்பம், வைர வன்குப்பம், கோரை குப்பம், கருங்காலி, பள்ளப்பாடு ஆகிய பகுதிகளில் உள்ள கடலோரப் பகுதிகளுக்கும் பரவியது.

    ஏராளமான மீன்களும் இறந்து கரை ஒதுங்கின. இதுபற்றி அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து கடலில் மிதந்து வரும் எண்ணெய் கழிவு குறித்து ஆய்வு செய்தனர். மேலும் கடல் நீரின் தன்மையை அறிய தண்ணீரை பரிசோதனைக்கும் அனுப்பி உள்ளனர்.

    இதற்கிடையே திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி லிவிங்ஸ்டன் மற்றும் வருவாய்த்துறை, மீன்வளத்துறை அலுவலர்கள் நேரடியாக வந்து பழவேற்காடு கடல் பகுதி, பக்கிங்காம் கால்வாய் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது துரை. சந்திரசேகர் எம்.எல்.ஏ., மீஞ்சூர் ஒன்றியக் குழு சேர்மன்ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

    ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் பிரபு சங்கர் கூறும்போது, பழவேற்காடு கடல்பகுதியில் ஒதுங்கிய எண்ணெய் கழிவுகள் சேகரிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது இங்குள்ள மீன்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதன் முடிவு வந்த பின்னர் மீனவர்கள் மீன் பிடிப்பது குறித்து அறிக்கை வெளியிடப்படும் என்றார்.

    ஆய்வின் போது பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கெத் பல்வந்த், வட்டாட்சியர் மதிவாணன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன், ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மிச்சாங் புயல் எச்சரிக்கையில் இருந்தே கடந்த 20 நாட்களுக்கு மேலாக பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனர். இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    • எண்ணெய் கழிவுகள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து பொருட்களை நாசப்படுத்தியது.
    • நவீன எந்திரங்கள் மூலமாகவும் கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சென்னை:

    எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடல் பகுதியில் மிச்சாங் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எண்ணெய் கழிவுகள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து பொருட்களை நாசப்படுத்தியது. பின்னர் எண்ணூர் முகத்துவார பகுதியில் போய் கடலில் கலந்தது.

    இந்த எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி கடந்த 10-ந் தேதியில் இருந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 75 படகுகளில் சென்று மீனவர்கள் எண்ணெய் கழிவுகளை அகற்றி வருகிறார்கள். நவீன எந்திரங்கள் மூலமாகவும் கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் எண்ணூர் முகத்துவார பகுதியில் எண்ணெய் கழிவுகள் அகற்றப்படும் இடத்தை அமைச்சர் உதயநிதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் மெய்யநாதன், கலாநிதி வீராசாமி எம்.பி., கே.பி.சங்கர் எம்.எல்.ஏ., சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, கமிஷனர் ராதாகிருஷ்ணன், மண்டலக் குழு தலைவர் தனியரசு மற்றும் அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


    எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் எப்படி நடைபெற்று வருகிறது? பணிகள் முடிய இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என்பது பற்றி உதயநிதி, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். எண்ணெய் கழிவுகளால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் மீனவர்கள் அமைச்சர் உதயநிதியிடம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் பாதிப்புகள் பற்றி எடுத்துக் கூறி முறையிட்டனர்.

    எண்ணெய் கழிவுகளால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புகளை விரைந்து சரி செய்து விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் என்றும் மீனவர்கள் முறையிட்டனர். கோரிக்கை மனுக்களையும் வழங்கினார்கள்.

    மீனவர்களின் குறைகளை கவனமுடன் கேட்டுக் கொண்ட அமைச்சர் உதயநிதி அரசு நிச்சயம் உரிய உதவிகளை செய்யும் என்று உறுதி அளித்தார்.

    • ஒரு வாலிபர் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த தீபக் என்ற வாலிபரை காணவில்லை.

    சென்னை:

    சென்னை கிண்டி 5 பர்லாங் சாலை- வேளச்சேரி சாலை இணைப்பு சந்திப்பில் 7 மாடி கட்டிடம் கட்டுவதற்காக 40 அடியில் தோண்டப்பட்ட பெரிய பள்ளத்தில் விழுந்த 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. கடந்த 5 நாட்களாக பள்ளத்தில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ராட்சத மோட்டார்கள் மூலமாக மழைநீர் வெளியேற்றப்பட்ட போதிலும் கிண்டி ரேஸ் கோர்சில் இருந்து தொடர்ந்து வெள்ளம் வந்து கொண்டே இருந்ததால் மீட்புப் படையினர் கடும் சிரமத்தோடு பணியில் ஈடுபட்டனர்.

    கட்டுமான பணி நடைபெற்ற இடத்திற்கு அருகே செயல்பட்டு வந்த கியாஸ் நிரப்பும் நிலையத்தில் இருந்த 4 பேரும், கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த இடத்தில் கண்டெய்னரில் அமர்ந்திருந்த சிவில் என்ஜினீயர் ஜெயசீலனும் 40 அடி பள்ளத்தில் விழுந்தனர். இந்த 5 பேரில் 3 பேர் உடனடியாக மீட்கப்பட்டனர்.

    2 பேர் மட்டும் 40 அடி பள்ளத்தில் விழுந்து மூழ்கினார்கள். என்ஜினீயர் ஜெயசீலன் மற்றும் நரேஷ் என்ற வாலிபர் ஆகிய இருவரும் வெள்ளத்தில் மூழ்கி பலியானார்கள்.

    இருவரது உடல்களும் மீட்கப்பட்டன. இத்துடன் மீட்பு பணிகள் முடிந்து விட்டதாகவும் கருதப்பட்டது. இந்த நிலையில் 2 பேரின் உயிரை பலி வாங்கிய 40 அடி பள்ளத்தில் மேலும் ஒரு வாலிபர் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

    7 மாடி கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த தீபக் என்ற வாலிபரை காணவில்லை. எனவே அவரும் 40 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இதையடுத்து நேற்று இரவு விடிய விடிய பேரிடர் மீட்பு படையினர் 40 அடி பள்ளத்தில் தேடினர். இன்றும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக போலீசார் கூறும்போது, 'தமிழகத்தை சேர்ந்த 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் வெள்ளத்தில் சிக்கி பலியாகி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    • மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மிச்சாங் புயல் காரணமாக பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியில் கனமழை பெய்தது. இதனால் ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் ஆரணி ஆறு உடைந்தது. புயல் காற்று மழையால் பழவேற்காடு பகுதியில் உள்ள மீனவர்கள் சுற்று வட்டார பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு நிவாரண உதவிகள் மாவட்ட நிர்வாகத்தின் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மூர்த்தி ஆகியோர் மீனவர்களுக்கு நிவாரண உதவிகளான அரிசி, பருப்பு, போர்வை ஆகியவற்றை வழங்கினர். பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மீனவ மக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறியுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியதன் பேரில் பழவேற்காட்டில் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. 53 மீனவ கிராமங்களிலும் மீன்வளத்துறை அதிகாரிகள் சென்று கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. எண்ணூரில் எண்ணெய் கசிவு தொடர்பாக துறை அமைச்சர் ஆய்வு செய்வார். அது தொடர்பாக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார்.


    புயலால் சேதமடைந்த படகுகள், வலைகள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் இன்று முடிவடையும். இது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிவாரணம் குறித்து அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அமைச்சர் மூர்த்தி கூறுகையில், மிச்சாங் புயலை முன்னிட்டு தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முன் எச்சரிக்கை நடவடிக்கையால் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்றார்.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திர சேகர், டிஜே.கோவிந்த ராஜன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • வீட்டுக்குள் தண்ணீர் நின்ற பகுதியில் இருந்த பொருட்கள் மீதும் எண்ணெய் கழிவுகள் படிந்து காணப்பட்டது.
    • எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் மழைநீரோடு எண்ணெய் கழிவுகள் கலந்து வந்ததால் மீன்பிடி படகுகள் மற்றும் வலைகளில் ஒட்டிக்கொண்டன.

    திருவொற்றியூர்:

    சென்னையில் புயல் மற்றும் பலத்த மழை காரணமாக திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இங்குள்ள வீடுகளில் சுமார் 6 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அங்கு வசித்த பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் வெள்ளம் வடிந்ததால் பொதுமக்கள் தங்களின் வீடுகளை சுத்தம் செய்தவற்காக சென்றனர். அப்போது வீடுகளின் சுவர்களில் எண்ணெய் கழிவுகள் கறை போல படிந்து காணப்பட்டது. மேலும் வீட்டுக்குள் தண்ணீர் நின்ற பகுதியில் இருந்த பொருட்கள் மீதும் எண்ணெய் கழிவுகள் படிந்து காணப்பட்டது. இதனால் வீட்டில் இருந்த ஏராளமான பொருட்கள் சேதம் அடைந்தன.

    எண்ணூர், மணலி, திருவொற்றியூர் பகுதிகளில் உள்ள சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் இந்த எண்ணெய் கழிவு படிந்துள்ளது. திருவொற்றியூரில் உள்ள ஜோதி நகர், கலைஞர் நகர், சடையங்குப்பம், பர்மா நகர், சரஸ்வதி நகர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் இந்த எண்ணெய் கழிவுகள் படர்ந்துள்ளன. இதனால் இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். சுவர்கள் மற்றும் வீட்டில் உள்ள பொருட்களில் படிந்த எண்ணெய் கழிவுகளை துடைத்து எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த எண்ணெய் கழிவுகள் பொருட்களின் மீது நன்றாக படிந்துள்ளதால் அதை துடைத்து எடுக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். எண்ணெய் கழிவுகள் படிந்த துணிமணிகள், புத்தகங்களை பயன்படுத்த முடியாததால் அதை வீடுகளுக்கு வெளியே குவித்து வருகிறார்கள். மேலும் வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்களிலும் எண்ணெய் கழிவுகள் படிந்துள்ளன. எண்ணெய் கழிவுகள் வாகனங்களில் உள்ள பேட்டரிகளில் முழுவதும் படிந்திருப்பதால் வாகனங்களில் பழுது ஏற்பட்டுள்ளன. இதனால் ஏராளமான வாகனங்கள் பழுது பார்ப்பதற்காக கடைகளில் குவிக்கப்பட்டுள்ளன.

    சாத்தாங்காடு பகுதியில் உள்ள ஸ்டீல் யார்டில் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த லாரிகளிலும் எண்ணெய் கழிவுகள் படிந்துள்ளதால் அவை பழுதடைந்துள்ளன. மேலும் அந்த பகுதிகளில் உள்ள நகைக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் எண்ணெய் கழிவுகள் படிந்துள்ளன. இதனால் அங்குள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.

    இந்த எண்ணெய் கழிவுகள் சாலையில் படிந்துள்ளதால் நடக்கும்போது கால்களில் ஒட்டிக் கொள்கின்றன. சில நேரங்களில் வழுக்கியும் விடுகின்றன. இதனால் சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

    எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் மழைநீரோடு எண்ணெய் கழிவுகள் கலந்து வந்ததால் மீன்பிடி படகுகள் மற்றும் வலைகளில் ஒட்டிக்கொண்டன. இதனால் மீனவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சடையங்குப்பம் முதல் எண்ணூர் முகத்துவாரம் வரை உபரிநீர் கால்வாயில் 5 கி.மீ. தூரத்துக்கு எண்ணெய் கழிவுகள் கலந்து இருப்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

    இந்த நிலையில் எண்ணெய் கழிவுகள் படர்ந்திருப்பதால் திருவொற்றியூர், எண்ணூர், மணலி ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தோல் அரிப்பு, தலை சுற்றல், சுவாச பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் துர்நாற்றமும் வீசத் தொடங்கியுள்ளது. துர்நாற்றம் மூக்கை துளைப்பதால் கடந்த 4 நாட்களாகவே பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    எண்ணூர், திருவொற்றியூர், மணலி பகுதிகளில் ஏராளமான எண்ணெய் தொழிற்சாலைகள் உள்ளன. இங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்தே எண்ணெய் கழிவுகள் கசிந்து கொசஸ்தலை ஆற்றில் கலந்துள்ளது. மேலும் மழைநீருடன் இந்த எண்ணெய் கழிவுகள் கலந்ததால் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்திருப்பது தெரியவந்தது. கொசஸ்தலை ஆற்றில் கலந்த எண்ணெய் கழிவுகள் பக்கிங்காம் கால்வாய், எண்ணூர் பகுதியில் உள்ள சிற்றோடையிலும் கலந்துள்ளது. எண்ணூர் முகத்துவாரத்திலும் எண்ணெய் கழிவுகள் கலந்ததால் அவை மீன்களின் தலையில் ஒட்டிக்கொள்கின்றன. எனவே கொசஸ்தலை ஆற்று மீனை சாப்பிட்டால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எண்ணெய் கழிவுகள் கசிந்ததாக கூறப்பட்ட தொழிற்சாலைகளில் ஆய்வு செய்தனர். ஆனால் அந்த தொழிற்சாலைகளில் உள்ள குழாய்களில் எண்ணெய் கழிவுகள் கசியவில்லை என்று அதன் நிர்வாகத்தினர் கூறி விட்டனர். எனவே எண்ணெய் கழிவுகள் கசிந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். இதற்கிடையே எண்ணெய் கழிவுகள் படர்ந்துள்ள வீடியோ காட்சிகளை அங்குள்ள பொதுமக்கள் சமூக வலைதளம் மூலம் பரப்பி மத்திய மந்திரி ஹர்தீப்சிங் பூரியின் கவனத்துக்கு கொண்டு சென்று புகார் அளித்துள்ளனர்.

    ×