search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுரண்டை"

    • கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார்.
    • நகராட்சி பகுதியில் செல்போன் டவர் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என கவுன்சிலர் வசந்தன் கோரிக்கை வைத்தார்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர் மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சங்கராதேவி முருகேசன், ஆணையாளர் முகமது சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கவுன்சிலர்கள் மாரியப்பன் மற்றும் ராஜேஷ் ஆகியோர் சுரண்டை பஸ் நிலைய விரிவாக்கத்திற்கு இடம் கொடுத்தவரும், சுரண்டை நகரில் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவருமான எஸ்.வேலாயுத நாடார் பெயரில் நுழைவு வாயில் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் சுரண்டை பஸ் நிலையத்தில் கலைஞர் படிப்பகம், பொன்ரா மருத்துவமனை அருகில் கலைஞர் நூற்றாண்டு நுழைவு வாயில் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். கவுன்சிலர் வசந்தன் பேசு கையில், சுரண்டை 6-வது வார்டு மற்றும் சுரண்டை நகராட்சி பகுதியில் மக்களை பாதிக்கும் வகையில் செல்போன் டவர் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என கோரிக்கை வைத்தார்.கவுன்சிலர் அமுதா சந்திரன் பேசுகையில், கட்டிட அனுமதி நிலுவை இல்லாமல் விரைந்து வழங்க வேண்டும் என்றார்.கவுன்சிலர் வேல்முத்து பேசுகையில், சுரண்டை காமராஜர் மார்க்கெட் அருகில் காமராஜர் பெயரில் நுழைவு வாயில் அமைக்க வேண்டும் மற்றும் கடைகளு க்கான உரிம கட்டணங்களை அபராதம் இல்லாமல் வசூலிக்க வேண்டும் அதற்கு இந்த மன்றம் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    தொடர்ந்து பேசிய நகராட்சி தலைவர் வள்ளி முருகன் மேற்கண்ட கோரிக்கைகள் மன்றத்தில் விவாதத்திற்கு விடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    • பள்ளி முதல்வர் பொன்மனோன்யா குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
    • சிறப்பு விருந்தினராக ட்ரஷர் ஐலண்ட் பள்ளி முதல்வர் சமீமா பர்வின் கலந்து கொண்டார்.

    சுரண்டை:

    சுரண்டை ராஜேந்திரா விஸ்டம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் 12-வது ஆண்டு விழா மற்றும் மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழ்ச்செல்வி அம்மா, பள்ளியின் முதல்வர் பொன்மனோன்யா குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனர் சிவ பபிஸ்ராம், செயலர் சிவ டிப்ஜினிஸ்ராம் நிகழ்ச்சியை வழி நடத்தினர். தலைமையாசிரியர் முருகராஜ் விழாவை பொறுப்பேற்று நடத்தினார். மாணவி ஜெசிகா வரவேற்று பேசினார். வில்லுப்பாட்டு, வரவேற்பு நடனமாக சிவ தாண்டவம், மாறுவேடப்போட்டி, விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாடகம், பட்டிமன்றம் மற்றும் நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறப்பு விருந்தினராக ட்ரஷர் ஐலண்ட் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வின் கலந்து கொண்டு கடந்த ஆண்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்தினார். மாணவன் ஜெகதீஷ் நன்றி கூறினான். மாணவிகள் ஆதர்சனா மற்றும் அஸ்விதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். ஆசிரியைகள் பிரதீபா மற்றும் ஈஸ்வரி விழாவை ஒருங்கிணைத்தனர்.

    • வயிற்றுவலி காரணமாக அய்யம்மாளுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
    • ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அய்யம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    நெல்லை:

    சுரண்டையை அடுத்த குலசேகரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமணன். இவரது மனைவி அய்யம்மாள் (வயது 32). இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    சமீபத்தில் வயிற்றுவலி காரணமாக அய்யம்மாளுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஆனால் தொடர்ந்து அவருக்கு வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வாழ்வில் வெறுப்படைந்த அய்யம்மாள் கடந்த 7-ந்தேதி அதிகாலை வீட்டில் இருந்த மண்எண்ணையை தலையில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விழிப்புணர்வு கூட்டம் நகராட்சி ஆணையாளர் முகமது சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்தல் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சியில் மண்டல இயக்குனர் அறிவுரை யின்படி ஆணையாளர் முகமது சம்சுதீன் தலைமையில் கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்தல் மற்றும் பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    இதில் சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்யும் வாகன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சுகாதார ஆய்வாளர் உரிமம் பெறுதல் தொடர்பான விவரங்கள் மற்றும் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்தல் குறித்த அறிவுரைகளை வழங்கினார்.

    • பொங்கல் பண்டிகையை சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் கொண்டாட பொது மக்களுக்கு நகராட்சி தலைவர், கமிஷனர் வலியுறுத்தியுள்ளனர்.
    • பொதுமக்கள் டயர், துணி, பிளாஸ்டிக்குகள் போன்ற பொருட்களை போகி பண்டிகையின்போது எரிக்க கூடாது

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சி பகுதியில் பொங்கல் பண்டிகையை சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் கொண்டாட பொது மக்களுக்கு நகராட்சி தலைவர் வள்ளிமுருகன், கமிஷனர் முகமது சம்சுதீன் ஆகியோர் வலி யுறுத்தியுள்ளனர்.

    இதுதொடர்பாக கமிஷனர் முகமது சம்சுதீன் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    சுரண்டை நகராட்சி பகுதியில் பொங்கல் பண்டிகை யையொட்டி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சுத்தம் செய்யப்பட்டு அகற்றப்படும் மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பை களை சாலைகளிலும், வாறுகால்க ளிலும் கொட்டாமல் நகராட்சி பணியாளர்களிடம் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    அதன்படி வார்டு எண் 6 இந்து நாடார் மண்டபம் அருகில், வார்டு எண் 10 வாடியூர் ரோடு, வார்டு எண் 14 சி.எஸ்.ஐ. தேவாலயம் அருகில், வார்டு 18 வரகுணராமபுரம், வார்டு எண்21 நகராட்சி அலுவலகம் பின்புறம் ஆகிய இடங்களில் குப்பைகளை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் குப்பைகளை சாலைகளில் கொட்டாமல் மேற்கண்ட இடங்களில் வழங்க கேட்டுக் கொள்ளப் படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மேலும் பொதுமக்கள் டயர், துணி, பிளாஸ்டிக்குகள் போன்ற எந்த பொருட்களையும் போகி பண்டிகையின்போது எரிக்க கூடாது என வலியுறுத்தப்பட்டு இது தொடர்பாக சுகாதார ஆய்வாளர் கருப்பசாமியால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ராமர், ஜெயபிரகாஷ், சுகாதார மேற்பார்வையாளர்கள், பணியாளர்களால் கண்காணிக்கப்பட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    • ஆலங்குளத்தில் இருந்து சுரண்டைக்கு சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தடம் எண் 18 என்ற பஸ் இயக்கப்பட்டு வந்தது.
    • இந்த பஸ் மூலம் அனைத்து தரப்பினரும் ஆலங்குளம் மற்றும் சுரண்டைக்கு சென்று வந்தனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளத்தில் இருந்து குருவன்கோட்டை, குறிப்பன்குளம், கிடாரக்குளம், அகரம், வீராணம், கருவந்தா, பரன்குன்றாபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக சுரண்டைக்கு சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தடம் எண் 18 என்ற பஸ் இயக்கப்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு இது, தடம் எண் 42 ஏ ஆக மாற்றப்பட்டு, இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் மூலம் வழியோர கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் ஆலங்குளம் மற்றும் சுரண்டைக்கு சென்று வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இந்த பஸ் இயக்கப்படவில்லை. இந்த தடத்தில் வேறு பஸ்களும் இயக்கப்படாத காரணத்தால் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். கிராம மக்கள், மாணவ, மாணவிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சுரண்டை நகராட்சி கமிஷனர் ஆக பணியாற்றிய லெனின் கடந்த ஜூன் மாதம் இடமாற்றம் செய்யப்பட்டார்.
    • சுரண்டை நகராட்சி புதிய கமிஷனராக முகம்மது சம்சுதீன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சி கமிஷனர் ஆக பணியாற்றிய லெனின் கடந்த ஜூன் மாதம் பத்மநாதபுரம் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து தென்காசி கமிஷனர் பாரி ஜான் பொறுப்பு கமிஷனராக பணியாற்றினார்.இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம்,திருமுருகன் பூண்டியில் கமிஷனர் ஆக பணியாற்றிய முகம்மது சம்சுதீன் சுரண்டை நகராட்சி கமிஷனராக இடம் மாற்றம் செய்யப்பட்டார். நேற்று முகமது சம்சுதீன் கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    அவருக்கு சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன், சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், அன்னப்பிரகாசம், சங்கரநயினார், கோமதிநாயகம், நகர் மன்ற உறுப்பினர்கள் சாந்தி தேவேந்திரன், அமுதா சந்திரன், உஷா பிரபு, வேல்முருகன், பரமசிவன், சிவசண்முக ஞானலட்சுமி,செல்வி, கல்பனா அண்ணபிரகாசம், ராமலட்சுமி கணேசன்,அந்தோணி சுதா ஜேம்ஸ், தி.மு.க. நகர இளைஞரணி முல்லை கண்ணன் ராஜா, டான் கணேசன்,சமூக ஆர்வலர் கார்த்திக் மற்றும் தொழிலதிபர்கள் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • முத்து இன்று காலை வாடியூர் பகுதியில் உள்ள ஒரு தொழுவத்தில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.
    • முத்து தற்கொலை செய்த கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுரண்டை:

    சுரண்டை அருகே உள்ள வரகுணராமபுரத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் முத்து ( வயது 19). கூலித்தொழிலாளி. இவர் இன்று காலை வாடியூர் பகுதியில் உள்ள ஒரு தொழுவத்தில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

    தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் தற்கொலை செய்த கொண்டாரா? அல்லது யாரேனும் அடித்து தொங்க விட்டார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலை,மாலை நேரங்களில் பள்ளி வாகனங்கள் வரும் பொழுது போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது.
    • சரக்கு லாரிகளை கண்காணிக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

    சுரண்டை:

    தென்காசி மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் வர்த்தக நகரமாகவும், தென்காசி மாவட்டத்தின் இதயமாகவும் சுரண்டை திகழ்கிறது.

    சுரண்டையை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பள்ளி,கல்லூரி செல்வதற்காகவும், தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காகவும், மருத்துவ தேவைகளுக்காக வும் சுரண்டைக்கு தினமும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

    சுரண்டை பஸ் நிலை யத்திற்கு ஒரு வழி பாதையில் வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் வாகனங்களால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி வாகனங்கள் வரும் பொழுது போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகமாகிறது. மேலும் அண்ணா சிலை பகுதியில் வாகனங்கள் திரும்புவதற்கு சிரமமாக இருப்பதால் சங்கரன்கோவில் ரோட்டில் வரும் வாகனங்கள் சாந்தி நர்சிங் ஹோம் முன்பு உள்ள ஒரு வழி பாதையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வருகிறது.

    இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது அதிர்ஷ்டவசமாக இதுவரை உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. நேற்று காலையில் ஒரு வழி பாதையில் வந்த தனியார் பஸ் மோதியதில் சுரண்டை காவல் நிலைய ஆர்ச்(வளைவு) மீது மோதியதால் ஆர்ச் கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.எனவே சுரண்டை பஸ் நிலையம் மற்றும் அண்ணா சிலை அருகிலும் நிரந்தரமாக போலீசாரை நிறுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும், சுரண்டை பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் வரும் சரக்கு லாரிகளை கண்காணிக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மேலும் நகராட்சி நிர்வாகமும், காவல்துறையும், வியாபாரிகளும் இணைந்து இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சீவலசமுத்திரம் கிராமத்தில் 9.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.
    • சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

    சுரண்டை:

    தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் வடக்கு ஒன்றியம்,மருக்கலாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சீவலசமுத்திரம் கிராமத்தில் 9.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். தென்காசி பழனி நாடார் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார்.

    புதிய சாலை அமைக்கும் பணியை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் வீராணம் சேக் முகமது, மாவட்ட கவுன்சிலர் முத்துலட்சுமி அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் வள்ளியம்மாள் முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர் மருதநாச்சியார் வெள்ளைத்துரை, நிர்வாகி கள் விஜயகுமார், விஜயராஜ், முருகையா, படித்துரை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அய்யனார் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசாரை கண்டதும் அய்யனார் தப்பியோட முயன்றுள்ளார்.

    நெல்லை:

    சுரண்டையை அடுத்த வேலப்ப நாடாரூர் கிருஷ்ணன்கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யனார்(வயது 32). இவர் நேற்று சேர்ந்தமரத்தில் உள்ள பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    உடனடியாக சேர்ந்தமரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அய்யனார், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றுள்ளார். ஆனால் அவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 18 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    • முப்பிடாறிஅம்பாள் கோவில் புரட்டாசி திருவிழா 8 நாட்கள் நடைபெற்றது.
    • 2-ம் நாள் திருவிழாவில் சக்தி வழிபாடு ஆன்மீக சொற்பொழிவு நடந்தது.

    சுரண்டை:

    சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார் உறவின்முறை மகிமை கமிட்டி டிரஸ்டுக்கு பாத்தியப்பட்ட முப்பிடாறிஅம்பாள் கோவில் புரட்டாசி திருவிழா 8 நாட்கள் நடைபெற்றது. ஊர் நாட்டாமை தங்கையா நாடார் தலைமை தாங்கினார்.

    இந்து நாடார் மகிமை கமிட்டி டிரஸ்ட் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகிமை கமிட்டி சார்பில் நடைபெற்றது. கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கப்பட்டது. அன்று முப்பிடாறிஅம்பாள் வழிபாட்டு குழுவினரின் பஜனை நடைபெற்றது.

    2-ம் நாள் திருவிழாவில் சக்தி வழிபாடு ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. 3-ம் நாள் திருவிழாவில் ஆன்மீக சொற்பொழிவும், 4-ம் நாள் திருவிழாவில் திருவிளக்கு பூஜை, வினோதினி நவீன வில்லிசையும் நடைபெற்றது. 5-ம் நாள் திருவிழாவில் எப். எம். புகழ் பிச்சுமணி பட்டிமன்றம் நடைபெற்றது. 6-ம் நாள் திருவிழாவில் திருவனந்தபுரம் சங்கீத மேகாலயாவின் இன்னிசை கச்சேரி, 7-ம் நாள் திருவிழாவில் ராமலிங்கம் குழுவினரின் பாட்டு கச்சேரி நடைபெற்றது. இரவு 1 மணி அளவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வானவேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க சப்ரத்தில் முப்பிடாறி அம்பாள் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். சப்பரத்தில் முன்பு சுரண்டை காமராஜர் சிலம்பாட்ட குழுவினரின் சிலம்பாட்டம் நடைபெற்றது.

    இன்று 8-ம் நாள் திருநாளை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, இரவு சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. செந்தில்குமாரின் வில்லிசை, சாமி ஆட்டம், அம்மனுக்கு பொங்கல் இடுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    ×