என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டபோதுஎடுத்தபடம்.
சுரண்டை அருகே சிமெண்ட் சாலை அமைக்கும் பணி - சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்
- சீவலசமுத்திரம் கிராமத்தில் 9.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.
- சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
சுரண்டை:
தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் வடக்கு ஒன்றியம்,மருக்கலாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சீவலசமுத்திரம் கிராமத்தில் 9.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். தென்காசி பழனி நாடார் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார்.
புதிய சாலை அமைக்கும் பணியை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் வீராணம் சேக் முகமது, மாவட்ட கவுன்சிலர் முத்துலட்சுமி அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் வள்ளியம்மாள் முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர் மருதநாச்சியார் வெள்ளைத்துரை, நிர்வாகி கள் விஜயகுமார், விஜயராஜ், முருகையா, படித்துரை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






