சுரண்டை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

வயிற்றுவலி காரணமாக அய்யம்மாளுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அய்யம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சுரண்டை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை
Published on

நெல்லை:

சுரண்டையை அடுத்த குலசேகரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமணன். இவரது மனைவி அய்யம்மாள் (வயது 32). இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளார்.

சமீபத்தில் வயிற்றுவலி காரணமாக அய்யம்மாளுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஆனால் தொடர்ந்து அவருக்கு வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வாழ்வில் வெறுப்படைந்த அய்யம்மாள் கடந்த 7-ந்தேதி அதிகாலை வீட்டில் இருந்த மண்எண்ணையை தலையில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com