search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுரண்டை சிவகுருநாதபுரம் முப்பிடாறிஅம்பாள் கோவில் புரட்டாசி திருவிழா

    • முப்பிடாறிஅம்பாள் கோவில் புரட்டாசி திருவிழா 8 நாட்கள் நடைபெற்றது.
    • 2-ம் நாள் திருவிழாவில் சக்தி வழிபாடு ஆன்மீக சொற்பொழிவு நடந்தது.

    சுரண்டை:

    சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார் உறவின்முறை மகிமை கமிட்டி டிரஸ்டுக்கு பாத்தியப்பட்ட முப்பிடாறிஅம்பாள் கோவில் புரட்டாசி திருவிழா 8 நாட்கள் நடைபெற்றது. ஊர் நாட்டாமை தங்கையா நாடார் தலைமை தாங்கினார்.

    இந்து நாடார் மகிமை கமிட்டி டிரஸ்ட் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகிமை கமிட்டி சார்பில் நடைபெற்றது. கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கப்பட்டது. அன்று முப்பிடாறிஅம்பாள் வழிபாட்டு குழுவினரின் பஜனை நடைபெற்றது.

    2-ம் நாள் திருவிழாவில் சக்தி வழிபாடு ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. 3-ம் நாள் திருவிழாவில் ஆன்மீக சொற்பொழிவும், 4-ம் நாள் திருவிழாவில் திருவிளக்கு பூஜை, வினோதினி நவீன வில்லிசையும் நடைபெற்றது. 5-ம் நாள் திருவிழாவில் எப். எம். புகழ் பிச்சுமணி பட்டிமன்றம் நடைபெற்றது. 6-ம் நாள் திருவிழாவில் திருவனந்தபுரம் சங்கீத மேகாலயாவின் இன்னிசை கச்சேரி, 7-ம் நாள் திருவிழாவில் ராமலிங்கம் குழுவினரின் பாட்டு கச்சேரி நடைபெற்றது. இரவு 1 மணி அளவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வானவேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க சப்ரத்தில் முப்பிடாறி அம்பாள் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். சப்பரத்தில் முன்பு சுரண்டை காமராஜர் சிலம்பாட்ட குழுவினரின் சிலம்பாட்டம் நடைபெற்றது.

    இன்று 8-ம் நாள் திருநாளை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, இரவு சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. செந்தில்குமாரின் வில்லிசை, சாமி ஆட்டம், அம்மனுக்கு பொங்கல் இடுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    Next Story
    ×