search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி திருமணம்"

    • 15 வயதில் முதல் திருமணமும், 17 வயதில் 2-வது திருமணமும் சிறுமிக்கு நடந்ததது தெரியவந்தது.
    • முதல் கணவரான பிரகாஷ் மற்றும் அவரது பெற்றோர்கள், சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் 2-வது திருமணம் செய்த கணவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகில் உள்ள மட்டப்பாறையை சேர்ந்த பிரசாத் என்பவருக்கும், திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்த சாமிநாதனின் 15 வயது மகளுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்படவே சிறுமி கணவரை விட்டு பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

    அதன்பிறகு திண்டுக்கல் மாவட்டம் பஞ்சம்பட்டியை சேர்ந்த அழகர்சாமி என்பவருடன் சிறுமிக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது. இந்த சிறுமிக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. அதன்பிறகு அழகர்சாமியுடனும் கருத்துவேறுபாடு ஏற்படவே குழந்தையுடன் அவரை வீட்டைவிட்டு விரட்டி விட்டனர்.

    சம்பவத்தன்று திருப்பூர் ரெயில்நிலையத்தில் அழுதபடி கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்த சிறுமியிடம் விசாரித்தபோது நடந்த விபரங்களை கூறியுள்ளார். இதனைதொடர்ந்து திருப்பூர் மாநகர போலீசார் வழக்குபதிவு செய்து இந்த வழக்கை நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு அனுப்பி வைத்தனர்.

    இன்ஸ்பெக்டர் பேபி விசாரணை மேற்கொண்டதில் 15 வயதில் முதல் திருமணமும், 17 வயதில் 2-வது திருமணமும் சிறுமிக்கு நடந்ததது தெரியவந்தது. முதல் கணவரான பிரகாஷ் மற்றும் அவரது பெற்றோர்கள், சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் 2-வது திருமணம் செய்த கணவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எம்.புதுப்பாக்கம் கிராமத்திற்கு சென்று சிறுமியின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர்.
    • விசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடைபெற இருப்பது உண்மை என தெரியவந்தது.

    மரக்காணம்:

    மதுராந்தகம் அருகே உள்ள தென்னலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மகன் வீரபாண்டி (வயது (26)). இவருக்கும் மரக்காணம் அருகே எம்.புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இரு வீட்டாரின் சம்மதத்தோடு இன்று மதுராந்தகம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக சைல்ட் லைனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி மரக்காணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயரங்கன், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் தலைமை காவலர், சமூக நலத்துறை அலுவலர்கள், வருவாய் துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேற்று இரவு எம்.புதுப்பாக்கம் கிராமத்திற்கு சென்று சிறுமியின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடைபெற இருப்பது உண்மை என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். அதன் பின்னர் சிறுமியை மீட்டு விழுப்புரத்தில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 16 வயது சிறுமியை திருமணம் செய்த 47 வயது தொழிலாளி ஏற்கனவே திருமணம் ஆனவர்.
    • தொழிலாளிக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி பகுதியில் உள்ள மலை கிராமத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக குழந்தைகள் நல குழும அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் இடுக்கி சென்றனர். அங்கு அவர்கள் விசாரணை நடத்திய போது இடமலையார் பகுதியில் குழந்தை திருமணம் நடந்து இருப்பது தெரியவந்தது.

    அதிகாரிகள் உடனே அந்த கிராமத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு 16 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 47 வயது தொழிலாளி திருமணம் செய்து இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    16 வயது சிறுமியை திருமணம் செய்த 47 வயது தொழிலாளி ஏற்கனவே திருமணம் ஆனவர். அவருக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். இருந்தும் 16 வயது சிறுமியை அவர் திருமணம் செய்துள்ளார். இதுபற்றி குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் 16 வயது சிறுமியை திருமணம் செய்த நபரை பிடிக்க அவர் தங்கியிருந்த கிராமத்துக்கு சென்றனர்.

    போலீசார் தேடுவதை அறிந்த அவர், சிறுமியுடன் தலைமறைவாகி விட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

    • சிறுமிக்கு குழந்தை இறந்து பிறந்தது குறித்த புகாரின் பேரில் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
    • சிறுமியை திருமணம் செய்த பழனிசாமி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலமலை ஊராட்சி பாலி கிராமம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 28) கூலிதொழிலாளி. இவர் ராமன்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இந்த சிறுமிக்கு பழனிசாமி தாய்மாமா உறவாகும்.

    இந்த நிலையில் கர்ப்பமான சிறுமிக்கு கடந்த மாதம் ஈரோடு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது.

    சிறுமிக்கு குழந்தை இறந்து பிறந்தது குறித்த புகாரின் பேரில் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், சிறுமியை திருமணம் செய்த பழனிசாமி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    • வாலிபருக்கு 6-ம் வகுப்பு மாணவியை 2-வது திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.
    • மாணவிக்கும் வாலிபருக்கும் வீட்டில் வைத்து திருமணம் நடந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த குப்பம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 11 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமியின் கிராமத்தின் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 25 வயது வாலிபர். இவருக்கு திருமணமாகி மனைவி இறந்து விட்டார்.

    இந்த நிலையில் வாலிபருக்கு 6-ம் வகுப்பு மாணவியை 2-வது திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி மாணவிக்கும் வாலிபருக்கும் அவரது வீட்டில் வைத்து திருமணம் நடந்தது.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமணம் நடந்ததாக திருப்பதியில் உள்ள குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    குழந்தைகள் நல அலுவலர் அருணாஸ்ரீ மற்றும் குப்பம் போலீசார் மணமகன் வீட்டிற்கு சென்று அங்கிருந்த சிறுமியை மீட்டு திருப்பதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து குழந்தைகள் நல அலுவலர் அருணாஸ்ரீ குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த சிறுமியின் பெற்றோர் மற்றும் மணமகன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவியின் பெற்றோர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
    • பிரவீனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    போரூர்:

    திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் பகுதியை சேர்ந்த தம்பதிகளின் 17வயது மகள் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

    மாணவிக்கு திருநின்றவூர் பகுதியை சேர்ந்த ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் வாலிபர் பிரவீன் (வயது20) என்பவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து இருவரும் நெருங்கி பழகி காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மகளின் காதல் விவகாரம் பற்றி தெரிந்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மாணவியை மதுரவாயல் சீமாத்தம்மன் நகர் பகுதியில் உள்ள அவரது மாமா வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் தனது காதலி மதுரவாயலில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பது தெரிந்து நேற்று காலை அங்கு சென்ற பிரவீன் மாணவியை வலுக்கட்டாயமாக தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி அழைத்து சென்று திருவேற்காடு கோவிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து பிரவீனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாணவிக்கு கடந்த 20-ந் தேதி திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
    • சிறுமியை அவரது உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    கோவை:

    கோவையை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்தார்.

    அப்போது சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் பத்ரிநாத் (வயது 19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இந்தநிலையில் பத்ரிநாத் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந் தேதி மருதமலை அடிவாரத்தில் வைத்து திருமணம் செய்தார். பின்னர் அவர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு இருந்த தனது தாயிடம் பத்ரிநாத் மாணவிக்கு 18-வயது கடந்து விட்டதாகவும், 2 பேரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

    இதனை உண்மை என நம்பிய அவர் 2 பேரையும் வீட்டில் தங்க அனுமதித்தார். அப்போது பத்ரிநாத் மாணவியை பலமுறை பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி கர்ப்பமானார். அவரை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தார்.

    நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாணவிக்கு கடந்த 20-ந் தேதி திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அவரது உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் சிறுமியின் ஆதார் அட்டையை வாங்கி பார்த்த போது மாணவி 18 வயதிற்கு முன்பே கர்ப்பமானது தெரிய வந்தது.

    இது குறித்து டாக்டர்கள் பேரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் 16 வயது மாணவியை திருமணம் செய்து பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் பத்ரிநாத்தை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • 3 மாதம் கர்ப்பமாக இருக்கும் அந்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார்.
    • சிறுமிக்கு 18 வயது நிரம்பவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த சீதபற்பநல்லூரை சேர்ந்தவர் கணபதி(வயது 22). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்த இவர் 15 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு 2 பேரின் பெற்றோரும் அவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு கடந்த மே மாதம் 26-ந்தேதி திருமணம் நடந்துள்ளது.

    இந்நிலையில் அந்த சிறுமி கர்ப்பமாகி உள்ளார். தற்போது 3 மாதம் கர்ப்பமாக இருக்கும் அந்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு 18 வயது நிரம்பவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விசாரணை நடத்தி சீதபற்பநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் கணபதி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், திருமணத்திற்கு உடந்தையாக இருந்த 2 பேரின் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி தண்டபாணி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டு பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார்.
    • அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக தண்டபாணி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்திருந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு முத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 32 ). இவர் ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது அந்த ஓட்டலுக்கு 16 வயது சிறுமி அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியிடம் தண்டபாணி பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு நெருங்கி பழகி உள்ளார்.

    இந்நிலையில் அந்த சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி தண்டபாணி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டு பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். பின்னர் அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக தண்டபாணி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்திருந்தார். சிறுமியின் வயதில் சந்தேகம் அடைந்த டாக்டர்கள் இது குறித்து அந்த சிறுமிடம் கேட்டபோது நடந்த சம்பவத்தை அவர் கூறினார்.

    இது குறித்து ஈரோடு அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தண்டபாணியை பிடித்து விசாரித்த போது சிறுமிக்கு 16 வயதே ஆவது தெரியவந்தது.

    இதை அடுத்து தண்டபாணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    • வீடியோவை வெளியிட்ட கோவிலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த பாலாஜிகணேசன் என்பவரை கைது செய்தனர்.
    • கைதான மாணவர் பண்ருட்டி சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் பஸ் நிலையத்தில் மாணவி ஒருவருக்கு மாணவர் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து சிதம்பரம் டவுன், அனைத்து மகளிர் நிலைய போலீசார் மாணவி, மாணவரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மாணவி சிதம்பரம் அருகே உள்ள வெங்காயதளமேடு கிராமத்தை சேர்ந்தவர் என்றும், இவர் சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தது தெரியவந்தது. மாணவிக்கு தாலி கட்டிய மாணவர் புவனகிரி அருகே உள்ள வடகறிராஜபுறத்தை சேர்ந்தவர் என்றும் இவர் கீரப்பாளையத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதன்பின்னர் மாணவி கடலூரில் உள்ள காப்பகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்ட நபர் மீது மாணவியின் பெற்றோர் சிதம்பரம் டவுன் போலீசில் புகார் செய்தனர்.

    அதன் அடிப்படையில் வீடியோவை வெளியிட்ட கோவிலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த பாலாஜிகணேசன் என்பவரை கைது செய்தனர். இவர் சமூக அவலங்களை வீடியோ எடுத்து பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதைத்தொடர்ந்து மாணவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. இவர் மீது குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். கைதான மாணவர் பண்ருட்டி சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து கடலூர் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள மாணவியிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவருக்கு சமூகநலத்துறை அதிகாரிகள் கவுன்சிலிங் வழங்கி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிதம்பரம் டவுன் போலீசார் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவ, மாணவியிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
    • மாணவனை பண்ருட்டி சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    கடலூர்:

    சிதம்பரம் பஸ் நிலையத்தில் மாணவி ஒருவருக்கு கல்லூரி மாணவர் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து சிதம்பரம் டவுன் போலீசார் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவ, மாணவியிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த மாணவி சிதம்பரம் அருகே வெங்காயதலமேடு கிராமத்தை சேர்ந்தவர் என்றும், அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது.

    தாலி கட்டிய மாணவர் சிதம்பரம் அருகே வடகரிராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் என்றும், கீரப்பாளையம் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தது தெரிய வந்தது.

    இவர்கள் 2 பேரிடமும் கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் முகுந்தன் மற்றும் ரம்யா ஆகியோர் விசாரணை நடத்தினர். அதோடு 2 பேருக்கும் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாணவி கடலூரில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மாணவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் பாலிடெக்னிக் மாணவனிடம் 2-வது நாளாக 7 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார், மாணவனை குழந்தை திருமண தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    இதனை தொடர்ந்து மாணவனை பண்ருட்டி சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    • குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தும் வகையில் சமூக நலத்துறையினா் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனா்.
    • ஊராட்சிகள் அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கோவை:

    தமிழகத்தில் குழந்தை திருமணங்களை கட்டுப்படுத்தும் வகையில் சமூக நலத்துறை சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    குறிப்பாக உயா்கல்வி படிக்கும் பெண்களுக்கு உதவித் தொகை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், தொடா்ந்து குழந்தைத் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன.

    குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தும் வகையில் சமூக நலத்துறையினா் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனா். ஊராட்சிகள் அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இருந்தும் குழந்தைத் திருமணங்கள் தொடா்ந்து பதிவாகி வருகின்றன. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பா் வரை 74 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. குழந்தைத் திருமணத்துக்கு காரணமாக இருந்த 39 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட சமூக நல அலுவலா் தங்கமணி கூறியதாவது:-

    நாடு முழுவதும் திருமணம் செய்துகொள்ள பெண்களுக்கு 18 வயது, ஆண்களுக்கு 21 வயது தகுதியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒருசில இடங்களில் குடும்ப பொருளாதார சூழல், காதல், குடும்ப கவுரவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குழந்தைத் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன.

    இதில் குறிப்பாக பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பே அதிக அளவில் திருமணம் நடைபெற்று வருகிறது. 18 வயதுக்குட்பட்ட பெண்கள் அல்லது 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு நடைபெறும் திருமணம் குழந்தைத் திருமணமாக பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 74 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதில் 43 திருமணங்கள் திருமணம் நடைபெற்ற பின்பும், 31 திருமணங்கள் திருமணத்துக்கு முன்னும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதில் திருமணத்துக்கு காரணமாக இருந்த 39 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பள்ளி, கல்லூரிகளில் குழந்தைத் திருமணம் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், குழந்தைத் திருமணம் தொடா்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. பெற்றோா்கள் விழிப்புணா்வுடன் இருந்தால் மட்டுமே குழந்தைத் திருமணத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×