search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிதம்பரம் பஸ் நிலையத்தில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் மீது போக்சோ வழக்கு
    X

    சிதம்பரம் பஸ் நிலையத்தில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் மீது போக்சோ வழக்கு

    • வீடியோவை வெளியிட்ட கோவிலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த பாலாஜிகணேசன் என்பவரை கைது செய்தனர்.
    • கைதான மாணவர் பண்ருட்டி சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் பஸ் நிலையத்தில் மாணவி ஒருவருக்கு மாணவர் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து சிதம்பரம் டவுன், அனைத்து மகளிர் நிலைய போலீசார் மாணவி, மாணவரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மாணவி சிதம்பரம் அருகே உள்ள வெங்காயதளமேடு கிராமத்தை சேர்ந்தவர் என்றும், இவர் சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தது தெரியவந்தது. மாணவிக்கு தாலி கட்டிய மாணவர் புவனகிரி அருகே உள்ள வடகறிராஜபுறத்தை சேர்ந்தவர் என்றும் இவர் கீரப்பாளையத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதன்பின்னர் மாணவி கடலூரில் உள்ள காப்பகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்ட நபர் மீது மாணவியின் பெற்றோர் சிதம்பரம் டவுன் போலீசில் புகார் செய்தனர்.

    அதன் அடிப்படையில் வீடியோவை வெளியிட்ட கோவிலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த பாலாஜிகணேசன் என்பவரை கைது செய்தனர். இவர் சமூக அவலங்களை வீடியோ எடுத்து பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதைத்தொடர்ந்து மாணவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. இவர் மீது குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். கைதான மாணவர் பண்ருட்டி சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து கடலூர் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள மாணவியிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவருக்கு சமூகநலத்துறை அதிகாரிகள் கவுன்சிலிங் வழங்கி வருகிறார்கள்.

    Next Story
    ×