search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிரியா"

    • சிரியா வான்பகுதியில் அடிக்கடி ரஷிய விமானங்கள் இடைமறிக்கின்றன
    • இரண்டு வாரங்களுக்கு முன் ஆளில்லா விமானத்தை இடைமறித்து அச்சுறுத்தியது

    சிரியா வான்பகுதியில் அடிக்கடி ரஷிய போர் விமானங்கள் அமெரிக்க விமானங்களை வழிமறித்து மிரட்டும் சம்பவம் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே, ஆளில்லா விமானத்தை அச்சுறுத்தும் வகையில் ரஷிய போர் விமானம் பறந்த நிலையில், தற்போது MC-12 என்ற இரண்டு என்ஜின் கொண்ட போர் விமானத்தின் அருகில் பறந்து அச்சுறுத்தியுள்ளது. இந்த விமானம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

    அமெரிக்க போர் விமானத்தில் 4 பேர் இருந்துள்ளனர். ரஷிய போர் விமானம் நெருங்கி பறந்தபோது, திடீரென அமெரிக்க விமானம் குலுங்கியதாக தகவல் உள்ளாகியுள்ளது. இருந்தாலும், விமானம் விபத்தில் இருந்து தப்பியது.

    இந்த விவரங்களை மட்டுமே தெரிவித்த அமெரிக்கா, மேற்கொண்டு இதுகுறித்து ஏதும் தெரிவிக்கவில்லை. ஈரான், சிரியா அரசுகளுடன் ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பை வளர்த்துக் கொண்டு வரும் ரஷியா, கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சிரியா எல்லையில் தனது அதிகாரித்தை அதிகரித்துள்ளது.

    ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதாக சிரியாவில் சுமார் 900 அமெரிக்க வீரர்கள் முகாமிட்டுள்ளனர். அவர்கள் ஆளில்லா மற்றும் போர் விமானங்கள் மூலம் பயங்கரவாதிகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    சிரியாவில் உள்நாட்டு போர் வெடித்தபோது, ரஷியா அரசுக்கும் அமெரிக்கா கிளர்ச்சியாளர்களுக்கும் ஆதரவாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • எண்ணெய் கப்பல்களை கைப்பற்றும் முயற்சியில் ஈரான் அடிக்கடி தாக்குதல்
    • ஈரான், சிரியா, ரஷியா ஆகிய நாடுகள் அமெரிக்காவை எதிர்க்க முடிவு எனத் தகவல்

    பாரசீக வளைகுடாவிற்கும் ஓமன் வளைகுடாவிற்கும் இடையில் உள்ளது ஹார்முஸ் ஜலசந்தி. பாரசீக வளைகுடாவின் பல துறைமுகங்களிலிருந்து எண்ணெய் கொண்டு செல்லும் மிகப்பெரிய கப்பல்கள் இந்த ஜலசந்தி வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் முக்கியமான பாதையாக கருதப்படுகிறது.

    இப்பகுதியில் தன் அதிகாரத்தை நிலைநாட்ட ஈரான் முயற்சி செய்து வருகிறது. ஆனால் இதனை அமெரிக்கா தீவிரமாக எதிர்த்து வருகிறது. ஈரான், எண்ணெய் கப்பல்களை கைப்பற்றுவதையோ சேதம் விளைவிப்பதையோ தடுக்க ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றி போர் விமானங்களை அனுப்பி அமெரிக்கா பாதுகாத்து வருகிறது.

    கடந்த வாரம் இந்த ஜலசந்தி அருகே 2 எண்ணெய் கப்பல்களை ஈரான் கைப்பற்ற முயன்றது. ஒரு கப்பலின் மீது துப்பாக்கி சூடும் நடத்தியது. 

    தற்போது வளைகுடா பகுதியில் ஒரு வாரத்திற்கும் மேலாக ஏ-10 (A-10) ரக தாக்குதல் விமானங்கள் ரோந்து வருகின்றன. இவற்றிற்கு வலு சேர்க்கும் விதமாக இவ்வார இறுதியில் எஃப்-16 (F-16) ரக ஜெட் விமானங்களையும் அமெரிக்கா அனுப்பவுள்ளது. எஃப்-16 விமானங்கள் ஈரானின் முயற்சிகளுக்கு தடையாக, நீர்வழி பாதையில் செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். மேலும், அப்பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் பலமிக்க தோற்றத்தை உருவாக்கும் என அமெரிக்கா நம்புகிறது.

    சிரியாவை விட்டு வெளியேறுமாறு அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து ரஷியா, ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. இது ரஷியா, ஈரான் மற்றும் சிரியா ஆகிய 3 நாடுகளிற்கு இடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பு மூலம் சாத்தியமாகிறது. மத்திய கிழக்கு பகுதியில் ஈரான், ரஷியா மற்றும் சிரியா கைகோர்ப்பதை அமெரிக்கா எதிர்த்து வருகிறது.

    ஆனால் ஈரான் லெபனானின் ஹெஸ்பொல்லா அமைப்புக்கு பயங்கர ஆயுத உதவிகளை செய்து அதன் மூலம் இஸ்ரேலுக்கு நெருக்கடி கொடுக்க விரும்புகிறது. இதன் முயற்சிகளுக்கு சிரியாவில் உள்ள அமெரிக்கா ராணுவ துருப்புகள் பெரும் தடையாக உள்ளது. தனியாக அமெரிக்காவை எதிர்ப்பதை விட ரஷியாவோடு இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள ஈரான் விரும்புகிறது. எனவே ரஷிய-உக்ரைன் போரில் ரஷியாவிற்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

    இந்த பின்னணியில் ரஷிய மற்றும் ஈரானிய குத்ஸ் (Quds) படைத்தலைவர்களுக்கு இடையே அதிக ஒத்துழைப்பு, திட்டமிடல் மற்றும் உளவுத்தகவல்கள் பகிர்வு நடப்பதாகவும், இதன் மூலம் சிரியாவில் இருந்து அமெரிக்க துருப்புக்களை வெளியேற்ற அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்க இந்த கூட்டணி முயல்வதாகவும் அமெரிக்கா கருதுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தன்னை அமெரிக்கா தயார்படுத்தி கொண்டு வருகிறது.

    சிரியாவில் சுமார் 900 அமெரிக்க வீரர்கள் உள்ளனர். தவிர ஐஎஸ்ஐஎஸ் (ISIS) போராளிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த மேலும் துருப்புகள் அமெரிக்காவிலிருந்து அவ்வப்போது அந்நாட்டிற்குள் வந்து போகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    வரப் போகும் நாட்களில் வளைகுடா பகுதியில் அமைதி நிலவுமா? இல்லை சச்சரவு வெடிக்குமா? என நிபுணர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

    • சிரியா தலைநகர் டமாஸ்கரை குறி வைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
    • தாக்குதலில் ஒரு சிரியா வீரர் காயம் அடைந்தார் என்று தெரிவித்து உள்ளது.

    சிரியாவில் 2011-ம் ஆண்டு உள்நாட்டு போர் தொடங்கியதில் இருந்தே அதன் அரசுப் படைகள் மற்றும் அதற்கு ஆதரவாக சண்டையிடும் ஈரான் ஆதரவு படைகளுக்கு எதிராக இஸ்ரேல் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் சிரியா தலைநகர் டமாஸ்கரை குறி வைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

    அந்த நகரை நோக்கி ஏவுகணைகள் வீசப்பட்டன. இதுகுறித்து சிரியா ராணுவ வட்டாரம் கூறும்போது, இன்று அதிகாலை இஸ்ரேல் ராணுவம், சிரியா தலைநகர் டமாஸ்கர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. கோவன் குன்றுகளில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளில் சிலவற்றை சிரியாவின் பாதுகாப்பு படையினர் இடைமறித்து சுட்டு வீழ்த்தினர்.

    இந்த தாக்குதலில் ஒரு சிரியா வீரர் காயம் அடைந்தார் என்று தெரிவித்து உள்ளது.

    • பூங்காவில் குழந்தைகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டு இருந்தனர்.
    • போலீசார் அங்கு விரைந்து வந்து மர்மநபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கே ஆல்ப்ஸ் பிராந்தியத்தில் அன்னெசி நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு பூங்காவிற்கு குழந்தைகள் சுற்றுலா அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக சிலர் உடன் வந்திருந்தனர்.

    பூங்காவில் குழந்தைகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவன் கையில் கத்தியுடன் பூங்காவிற்குள் நுழைந்தான். திடீரென அவன் அங்கிருந்த சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை சரமாரியாக கத்தியால் குத்த தொடங்கினான்.

    இதில் கத்திக்குத்து விழுந்த குழந்தைகள் வலி பொறுக்க முடியாமல் அலறி துடித்தனர். இந்த தாக்குதலில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 22 மாத குழந்தை, 5 வயதுக்குட்பட்ட 5 சிறுவர்கள், 2 பெரியவர்கள் அடங்குவார்கள்.

    இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து மர்மநபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    கத்திக்குத்தில் காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் காயமடைந்த சிறுவர்களில் 2 பேர் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    போலீசில் சிக்கியவர் சிரியா நாட்டை சேர்ந்த அகதியாவார். அவர் சட்ட விரோதமாக பிரான்ஸ் நாட்டில் நுழைந்தது தெரியவந்தது. அவர் எதற்காக குழந்தைகளை மட்டும் குறி வைத்து இந்த தாக்குதலில் ஈடுபட்டார் என தெரியவில்லை. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவாரா? அல்லது சைக்கோவா? என்பது தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் பிடிபட்ட வாலிபர் குழந்தைகளை கத்தியால் குத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அந்த நபர் பூங்காவில் சர்வ சாதாரணமாக வலம் வருகிறார்.

    திடீரென தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை கையில் எடுத்து கண்ணில் பட்ட குழந்தைகளை குத்துகிறார். அந்த சமயம் ஒரு பெண் இதனை தடுக்க முயல்கிறார். உடனே அந்த பெண்ணை நோக்கி அவன் செல்கிறான். கத்தியால் குத்த முயன்ற போது அந்த பெண் வாலிபருடன் போராடுகிறார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தான் தற்போது வைரலாகிறது.

    • அமெரிக்க படையினர் ஹெலிகாப்டரில் சென்று தாக்குதல் நடத்தினர்.
    • ஐ.எஸ். தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    சிரியாவின் வடக்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவராக அப்த்-அல் ஹாடி மக்மூத் அல்-ஹாஜி அலி பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்குள்ள அமெரிக்க படையினர் ஹெலிகாப்டரில் சென்று தாக்குதல் நடத்தினர்.

    இதில் ஐ.எஸ். தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இவர் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பியாவில் பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிடுவதற்கு தலைவராக செயல்பட்டு வந்தார் என்று அமெரிக்க மத்திய படைப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிகாரிகளை ஐஎஸ் அமைப்பினர் கடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்ததைத் தொடர்ந்து நேற்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஐஎஸ் தலைவருடன் அந்த அமைப்பைச் சேர்ந்த மேலும் இரண்டு நபர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

    • இது மிக மோசமான படுகொலை என்று மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தகவல்.
    • அண்மையில் துருக்கி ராணுவம் நடத்திய தாக்குதலில் சிரியா ராணுவ வீரர்கள் 11 பேர் பலியாகினர்.

    பெய்ரூட்:

    சிரியா நாட்டில் அரசுக்கு எதிரான துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வடக்கு சிரியாவில் குர்து இன போராளிகள் வசம் உள்ள நகரில் துருக்கி ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிரியா ராணுவ வீரர்கள் 11 பேர் பலியாகினர்.

    இந்நிலையில் வடக்கு சிரியாவின் அல்-பாப் நகரில் மக்கள் கூட்டம் நிறைந்திருந்த சந்தை பகுதியில் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.12 பேர்காயமடைந்தனர். இந்த தாக்குதல் மிக மோசமான படுகொலை என்ற மனித உரிமைகள் கண்காணிப்பு மைய தலைவர் ரமி அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

    இதனிடையே அமெரிக்க ஆதரவு பெற்ற சிரியாவின் குர்து இன போராளிகள் படை வெளியிட்ட அறிக்கையில், அல்-பாப் நகரம் மீது தங்கள் போராளிகள் ராக்கெட் தாக்குதல் நிகழ்த்தவில்லை என்று தெரிவித்துள்ளது.இந்த தாக்குதல் குறித்து சிரிய அரசு தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    சிரியாவின் கடைசி பகுதியை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டெடுப்பதற்கு, அவர்களுடன் அமெரிக்க கூட்டுப்படைகள் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளன.
    டமாஸ்கஸ்:

    உலகையே அச்சுறுத்தி வந்தவர்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகள். அமெரிக்க நகரங்களில் விமானங்களை மோதி தாக்குதல்களை நடத்தி உலகையே பதற வைத்த அல்கொய்தா பயங்கரவாதிகளை விட ஐ.எஸ். பயங்கரவாதிகள் மோசமானவர்கள் என்று அமெரிக்காவே ஒப்புக்கொண்டது.

    2 ஆண்டுகளுக்கு முன்னர் சிரியா, ஈராக் நாடுகளின் முக்கிய நகரங்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர். அவர்களை ஒழித்துக்கட்டுவது என்பது உள்நாட்டுப்படைகளுக்கு கடினமான காரியம் என்பதை அமெரிக்கா உணர்ந்தது.

    இதனால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்க கூட்டுப்படைகள் இவ்விரு நாடுகளிலும் களம் இறங்கின. உள்நாட்டுப்படைகளுடன் கரம் கோர்த்து நடத்திய தாக்குதல்களில் பெரிய அளவுக்கு அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு வெற்றியும் கிடைத்தது.

    அவை, பல முக்கிய நகரங்களை ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்டெடுத்து விட்டன. இது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு பின்னடைவாக அமைந்தது.

    இருப்பினும் இவ்விரு நாடுகளிலும் இன்னும் 14 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருப்பதாக ஐ.நா. சபை புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

    சிரியாவைப் பொறுத்தமட்டில், கடந்த சில மாதங்களாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த வட கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நகரங்கள், கிராமங்களில் அமெரிக்க கூட்டுப்படைகள், உள்நாட்டு படைகளுடன் கடும் தாக்குதல் நடத்தின.

    அங்கிருந்து ஐ.எஸ் பயங்கரவாதிகளை விரட்டியடித்தன.

    இதையடுத்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை முற்றிலும் ஒழித்து விட்டதாக கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். சிரியாவில் இருந்து அமெரிக்க படை வீரர்கள் 2 ஆயிரம் பேரையும் திரும்பப்பெறுவதாகவும் அவர் அறிவிப்பு வெளியிட்டார்.

    இருப்பினும் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை முற்றிலும் ஒடுக்க வில்லை என்பதை இப்போது உணர்ந்த டிரம்ப், ஐ.எஸ். பயங்கரவாதிகளை முழுமையாக ஒழித்துக்கட்டி விட்டோம் என்ற அறிவிப்பை அடுத்த வாரம் வெளியிடுவோம் என கடந்த 6-ந் தேதி அறிவித்தார்.

    இந்த நிலையில் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள கடைசி பகுதி, ஈராக் எல்லையில் அமைந்துள்ள டெயிர் அல் ஜோர் மாகாணத்தின் பாகுஸ் கிராமம் என தெரிய வந்தது.

    அங்கு கடுமையான தாக்குதல்களை நடத்தி, முழுமையான வெற்றி பெற அமெரிக்கா திட்டம் தீட்டியது. இந்த தாக்குதல்கள் நடத்துவதற்கு முன்னதாக அப்பாவி உள்ளூர் மக்கள் 20 ஆயிரம் பேரையும் அங்கிருந்து பத்திரமாக வெளியேறச்செய்ய வேண்டும் என விரும்பியது. அதற்கு ஒரு வார கால அவகாசம் தரப்பட்டது. அதன்படி அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்.

    இதையடுத்து அந்த பகுதியில் அமெரிக்க கூட்டுப்படைகள், ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் உக்கிரமாக சண்டை போட்டு வருகின்றன.

    இதுபற்றி சிரியா படை செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில், “ தாங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிற கடைசி பகுதியில், அனுபவம் வாய்ந்த பயங்கரவாதிகள் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர்” என குறிப்பிட்டார்.

    இந்த சண்டையின் முடிவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரியாவில் இருந்து முழுமையாக ஒடுக்கப்பட்டு விடுவர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
    சிரியாவில் உள்ள ஈரான் ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலை நடுவானிலேயே சிரியா இடைமறித்து தாக்கி அழித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. #SyriaStrikes
    டமாஸ்கஸ்:

    அரபுநாடான சிரியாவில் 2012-ம் ஆண்டில் இருந்து உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு புரட்சி படையினர் மற்றும் மதவாத அமைப்பினர் ஒன்று சேர்ந்து அரசுக்கு எதிராக போராடி வருகிறார்கள்.

    புரட்சி படையினருக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் அரசுக்கு ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் ஆதரவாக உள்ளன.

    இந்நிலையில், சிரியாவில் உள்ள ஈரான் ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் செலுத்திய ஏவுகணைகளை நடுவானிலேயே சிரியா ராணுவம் இடைமறித்து தாக்கி அழித்துள்ளது.

    டார்டோஸ் மற்றும் ஹமா பகுதிகளில் உள்ள ஈரானுக்கு சொந்தமான ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் திடீர் என ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

    அதில் 5 ஏவுகணைகள் நடுவானிலேயே ஏவுகணை எதிர்ப்பு சிஸ்டம் மூலமாக இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டுவிட்டது. ஹமா பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அருகே இரண்டு ஏவுகணைகள் வெடித்தது என சிரியா ராணுவம் நேற்று அறிவித்துள்ளது.

    இந்த தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் பலியானதாகவும், மேலும், ஈரானை சேர்ந்த 9 வீரர்களும் சிரியாவை சேர்ந்த 14 ராணுவ  வீரர்கள் என மொத்தம் 23 வீரர்கள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    ஆனால், தங்களது ராணுவம் எவ்வித தாக்குதலிலும் ஈடுபடவில்லை என இஸ்ரேல் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. 

    அரபு நாடுகள் பலவும் இஸ்ரேலுக்கு எதிரி நாடுகளாக உள்ளன. இந்த பட்டியலில் சிரியாவும இடம்பெற்றுள்ளது. இஸ்ரேலின் எல்லையில் சிரியா அமைந்துள்ளது. இதனால் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடப்பது உண்டு.

    இதற்கு முன்னதாக கடந்த 18 மாதங்களில் மட்டும்  சிரியாவில் 200-க்கும் மேற்பட்ட  வான் தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது. அப்போதெல்லாம் சிரியாவில் உள்ள ஈரான் கூட்டுப்படைகள் மற்றும் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா குழுக்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் காரணங்களை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. #SyriaStrikes
    சமீப காலமாக ஐஎஸ் இயக்கம் சந்தித்து வரும் தோல்விகள் இறைவன் அளித்த சோதனை என்று அவ்வமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி தெரிவித்துள்ளார். #ISIS #AlBaghdadi
    டமாஸ்கஸ்:

    சில ஆண்டுகளுக்கு முன்னர் உலகை நடுங்க வைத்த ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் தற்போது பலத்த பின்னடவை சந்தித்து இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது. இந்த இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி ரஷிய தாக்குதலில் இறந்து விட்டதாக இரண்டு முறை கூறப்பட்டது. 

    எனினும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அல் பக்தாதி உயிரோடு இருப்பதாக கூறின. கடந்த ஓராண்டாக அவரை பற்றிய செய்திகள் எதுவும் வெளியாகமல் இருந்த நிலையில், தற்போது அவர் பேசியதாக ஆடியோ வெளியாகியுள்ளது. 

    அதில் அவர் பேசுவதாவது, "ஐஎஸ் சமீபத்தில் பல தோல்விகளை சந்தித்துள்ளது. கடவுள் நம்மை சோதிக்கும் காலம் தான் இது. இந்தக் காலகட்டத்தை பொறுமையுடன் கையாள வேண்டும். பொறுமையோடு இருந்தால் இறைவன் நிச்சயம் நற்செய்தியை அறிவிப்பார். நமது இயக்கத்தினர் பசியுடனும் அச்சத்துடனும் தற்போது வாழ்கின்றனர். இது கடவுள் வகுக்கும் சோதனைக் காலம்'' என்று கூறியுள்ளார். 

    எனினும், இந்த ஆடியோவில் உள்ள குரல் அவருடையதுதானா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. 
    உள்நாட்டு போரால் சீர்குலைந்த சிரியாவை மறுகட்டமைப்பு செய்யவும், அங்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும் ஆயிரம் கோடி டாலர் நிதியுதவி செய்ய உள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. #Syria #SaudiArabia
    ஜெட்டா:

    வளைகுடா நாடான சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு யுத்தம் நடந்து வருகிறது. இதுதவிர, வடகிழக்கு பகுதிகளில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக நடந்த ஐ.எஸ்.க்கு எதிரான சண்டையில் அவர்கள் வசமிருந்த அனைத்து பகுதிகளையும் அமெரிக்கா தலைமையிலான படை கட்டுக்குள் கொண்டு வந்தது.

    இந்நிலையில், அமெரிக்கா தலைமையிலான படையின் வசம் இருக்கும் ரக்கா நகரை சுற்றியுள்ள பல பகுதிகளை மறு கட்டமைப்பு செய்யவும், விவசாயம், கல்வி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யவும் ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் நிதியுதவி செய்யப்போவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

    சிரிய அதிபர் ஆசாத்தை கடுமையாக எதிர்க்கும் சவுதி, அமெரிக்காவுடன் கைகோர்த்து நிற்பது குறிப்பிடத்தக்கது.
    ×