search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஎஸ்ஐஎஸ்"

    • கைதான 15 பேரும் சமீப காலமாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினருடன் பல்வேறு வகைகளில் தொடர்பு கொண்டது தெரிய வந்தது.
    • கடந்த அக்டோபர் மாதம் டெல்லியில் சில ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்களை போலீசார் கைது செய்திருந்தனர்.

    பெங்களூரு:

    ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் சர்வதேச அளவில் மிக பயங்கரமான தீவிரவாத இயக்கமாக கருதப்படுகிறது.

    அவர்களுக்கு ஆதரவாக இந்தியாவில் சிலர் ரகசியமாக செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து அடிக்கடி என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆங்காங்கே அதிரடி சோதனை நடத்தி பலரை கைது செய்துள்ளனர்.

    இந்த நிலையில் இந்தியாவில் மிகப்பெரிய நாசவேலைக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்தன. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கலவரத்தை தூண்டவும் அந்த இயக்கத்தினர் சதி செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் உளவுத்துறைக்கு தெரிய வந்தது. இதுபற்றி அவர்கள் மத்திய உள்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்த தகவலின் அடிப்படையில் தேசிய விசாரணை முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் இன்று (சனிக்கிழமை) கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். இரு மாநிலங்களிலும் 44 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    கர்நாடகாவில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் சோதனை நடத்தப்பட்டது. மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் 31 இடங்களில் அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடத்தினார்கள்.

    புனேயில் 2 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. பயாந்தர் நகரிலும் ஒரு இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடத்தி வருகிறார்கள். மத்திய துணை நிலை ராணுவ பாதுகாப்புடன் இந்த சோதனை நடந்து வருகிறது.

    உள்ளூர் போலீசாரும் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக சென்றுள்ளனர்.

    44 இடங்களில் சோதனை நடத்திக் கொண்டிருந்த போது அங்கிருந்த 15 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். பிறகு அவர்களை மேலும் விசாரிப்பதற்காக அழைத்து சென்றனர். அவர்கள் 15 பேரும் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    கைதான 15 பேரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் ரகசிய தொடர்பில் இருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கான ஆவணங்களையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இது தவிர சோதனை நடந்த இடங்களில் இருந்து லேப்டாப்புகள், செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    கைதான 15 பேரும் சமீப காலமாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினருடன் பல்வேறு வகைகளில் தொடர்பு கொண்டது தெரிய வந்தது. இந்த 15 பேர் மூலம் இந்தியாவின் பல பகுதிகளிலும் குண்டு வெடிப்புகள் நடத்த ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    இன்று நடந்த சோதனை மூலம் மிகப்பெரிய நாச வேலை சதி திட்டம் முறியடிக்கப்பட்டு இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம்தான் புனே நகரில் ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

    அவர்கள் இந்தியாவில் நாசவேலை செய்ய நிதி திரட்டியதும், பயிற்சி பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலும் இன்றைய சோதனை நடத்தப்பட்டது.

    கடந்த அக்டோபர் மாதம் டெல்லியில் சில ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்களை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்டு மாதம் தானே மாவட்டத்தில் நடந்த சோதனையிலும் ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்களிடம் இருந்து ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதன் தொடர்ச்சியாக இன்று நடைபெறும் சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • ஐஎஸ்ஐஎஸ் தலைவரை தேடும் பணிகளில் துருக்கி புலனாய்வு துறை ஈடுபட்டு வந்தது.
    • பிப்ரவரி மாதம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் இந்த பகுதியில் பயங்கர பாதிப்பு ஏற்பட்டது.

    ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு ஹூசைன் அல் குரேஷியை துருக்கி புலனாய்வு படைகள் கொன்றுவிட்டதாக துருக்கி அதிபர் தய்யிப் எர்டோகன் அறிவித்துள்ளார். துருக்கி புலனாய்வு படைகள் நேற்று நடத்திய சிறப்பு தேடுதல் வேட்டையின் போது கொல்லப்பட்டான் என்று எர்டோகன் அந்நாட்டு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

    நீண்ட காலமாக ஐஎஸ்ஐஎஸ் தலைவரை தேடும் பணிகளில் துருக்கி புலனாய்வு துறை ஈடுபட்டு வந்துள்ளது. சிரியாவின் வடக்கில் உள்ள ஜாந்தாரிஸ் எனும் நகரில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் துருக்கி கிளர்ச்சி பிரிவுகள் கட்டுப்பாட்டில் உள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் இந்த பகுதியில் பயங்கர பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

     

    சனிக்கிழமை நள்ளிரவு துவங்கிய மோதல் ஞாயிற்று கிழமை வரை தொடர்ந்தது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற மோதலின் இறுதியில் பயங்கர வெடிப்பு சத்தத்தை கேட்டோம் என்று அந்த பகுதியில் வசிக்கும் உள்ளூர்வாசி தெரிவித்துள்ளார். தாக்குதலை தொடர்ந்து பொது மக்கள் இந்த பகுதிக்குள் நுழையாமல் இருக்க பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐஎஸ்ஐஎஸ் முன்னாள் தலைவர் சிரியாவின் தெற்கு பகுதியில் கொல்லப்பட்டதை அடுத்து அல் குரேஷி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 

    • ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பயங்கரவாத இயக்கத்துடன் சமூக வலைத்தளங்கள் மூலமாக தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டது.
    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேலத்தில் முகாமிட்டு ஆசிக்கை தேடி வருகின்றனர்.

    சேலம்:

    தர்மபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆசிக் (வயது 25). இவர் சேலம் கோட்டை அருகே உள்ள சின்னசாமி தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பயங்கரவாத இயக்கத்துடன் சமூக வலைத்தளங்கள் மூலமாக தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டது.

    இதையடுத்து அவரை கடந்த ஆண்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் ஆசிக்கிற்கு கோர்ட்டு வழங்கிய ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவரை மீண்டும் கோர்ட்டில் சரண் அடைய உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே ஆசிக் தலைமறைவாகிவிட்டார். என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேலத்தில் முகாமிட்டு ஆசிக்கை தேடி வருகின்றனர்.

    மேலும் திருச்சி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு பெரியசாமி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று சேலம் வந்தனர். பின்னர் அவர்கள் ஆசிக் வசித்து வந்த பகுதியில் உள்ள மக்களிடம் அவருடைய நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அவற்றை பதிவு செய்து கொண்டு போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    • கடவுளின் எதிரிகளுடன் நடந்த போரில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.
    • ஐஎஸ் அமைப்பின் முந்தைய தலைவர் அபு இப்ராஹிம் அல்-குராஷி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொல்லப்பட்டார்.

    பெய்ரூட்:

    ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு ஹசன் அல்-ஹாஷிமி அல்-குராஷி, போரில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு இன்று அறிவித்துள்ளது. ஈராக்கைச் சேர்ந்த ஹாஷிமி, கடவுளின் எதிரிகளுடன் நடந்த போரில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார். இது தொடர்பாக ஆடியோ செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் அவர் எப்போது இறந்தார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து எந்த விவரத்தையும் செய்தித் தொடர்பாளர் அந்த ஆடியோவில் வெளியிடவில்லை.

    அதேசமயம், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் புதிய தலைவராக அபு அல்-ஹூசைன் அல்-ஹூசைனி அல்-குராஷி நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

    ஐஎஸ் அமைப்பின் முந்தைய தலைவரான அபு இப்ராஹிம் அல்-குராஷி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் வடக்கு சிரியாவில் உள்ள இட்லிப் மாகாணத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். அவருக்கு முன்னால் இருந்த தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி அக்டோபர் 2019 இல் இட்லிப் நகரில் கொல்லப்பட்டார்.

    சமீப காலமாக ஐஎஸ் இயக்கம் சந்தித்து வரும் தோல்விகள் இறைவன் அளித்த சோதனை என்று அவ்வமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி தெரிவித்துள்ளார். #ISIS #AlBaghdadi
    டமாஸ்கஸ்:

    சில ஆண்டுகளுக்கு முன்னர் உலகை நடுங்க வைத்த ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் தற்போது பலத்த பின்னடவை சந்தித்து இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது. இந்த இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி ரஷிய தாக்குதலில் இறந்து விட்டதாக இரண்டு முறை கூறப்பட்டது. 

    எனினும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அல் பக்தாதி உயிரோடு இருப்பதாக கூறின. கடந்த ஓராண்டாக அவரை பற்றிய செய்திகள் எதுவும் வெளியாகமல் இருந்த நிலையில், தற்போது அவர் பேசியதாக ஆடியோ வெளியாகியுள்ளது. 

    அதில் அவர் பேசுவதாவது, "ஐஎஸ் சமீபத்தில் பல தோல்விகளை சந்தித்துள்ளது. கடவுள் நம்மை சோதிக்கும் காலம் தான் இது. இந்தக் காலகட்டத்தை பொறுமையுடன் கையாள வேண்டும். பொறுமையோடு இருந்தால் இறைவன் நிச்சயம் நற்செய்தியை அறிவிப்பார். நமது இயக்கத்தினர் பசியுடனும் அச்சத்துடனும் தற்போது வாழ்கின்றனர். இது கடவுள் வகுக்கும் சோதனைக் காலம்'' என்று கூறியுள்ளார். 

    எனினும், இந்த ஆடியோவில் உள்ள குரல் அவருடையதுதானா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. 
    ×