search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை பாதுகாப்பு"

    • திருப்பூர் புஷ்பா நகர் பகுதியில் அமைந்துள்ள தேவாங்கபுரம் பள்ளியிலிருந்து மாணவர்களின்மனிதச் சங்கிலி நடைபெற்றது .
    • நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சிபிஎஸ்இ. பள்ளிமாணவர்கள் ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுனுடன் இணைந்து சாலைப் பாதுகாப்புவிழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்தினர்.

    திருப்பூர் புஷ்பா நகர் பகுதியில் அமைந்துள்ள தேவாங்கபுரம் பள்ளியிலிருந்து மாணவர்களின்மனிதச் சங்கிலி நடைபெற்றது . இதில் மாணவர்கள் விழிப்புணர்வுப் பதாகைகளைஏந்தியும் , சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை கூறியும், சாலைப்பாதுகாப்பு குறித்த துண்டறிக்கைகளை வழங்கியும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    முன்னதாக மாணவர்கள் புஷ்பா நகர் ரவுண்டானா பகுதியில் சாலைப் பாதுகாப்பு குறித்த தெரு நாடகத்தை நிகழ்த்தி பொதுமக்களிடம் சாலைப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கினார். திருப்பூர் கொங்கு நகர் சரக சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர் அனில் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சாலைப்பாதுகாப்பின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றி மாணவர்களின் மனிதச் சங்கிலி நிகழ்ச்சியை கொடியசைத்து ெதாடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுனின்தலைவர் கதிர்வேலுடன் இணைந்து பள்ளியின் முதல்வர் பிரமோதினி,ஒருங்கிணைப்பாளர்கள் மோகனா , நித்யா, பள்ளியின் இன்டராக்ட் சங்க நிர்வாகிகள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது
    • இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் போது ஹெல்மெட் அணியாமல் சென்றால் அபராதம்.

    நாகர்கோவில்:

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் போது ஹெல்மெட் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அதிவேகம் மற்றும் குடிபோதையில் வாகனம் இயக்குவதால் பெரும்பாலான சாலை விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சாலை விதிமீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போக்குவரத்து மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வீராசாமி, வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • காவலர்கள் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ்குமார் தொடங்கி வைத்து துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு விநியோகம் செய்தார். ராம்நகரில் இருந்து ராமேசுவரம் சாலையில் பஸ் நிலையம் வழியாக பேரணி சென்றது. இதில் பங்கேற்றவர்கள் கடவுள் வேடம் அணிந்து தலைக்கவசம் அணிய வேண்டும், போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்ட வேண்டும் மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். பேரணியில் போக்குவரத்து காவல்துறை மற்றும் காவலர்கள் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தனர்.

    • அதில் விபத்துக்கள் ஏற்பட 3 முக்கிய காரணங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
    • குறுகிய வழித்தடங்களை முன்கூட்டியே கணிக்கும் பொருட்டு வாகன ஓட்டிகளுக்கு பதாகைகள் வைக்க வலியுறுத்தப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் சென்னை ஐ.ஐ.டி. தொண்டு நிறுவன ஆர்வலர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறை ஆகியோருடன் இணைந்து சாலை பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

    கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு எண் 1,2,3 ஆகிய ஓங்கூர் முதல் மடபட்டு வரை உள்ள வழித்தடங்களில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் பொருட்டு சில வழிகாட்டு முறைகள் எடுத்துக் கூறப்பட்டது. அதில் விபத்துக்கள் ஏற்பட 3 முக்கிய காரணங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. 1.அதிவேக பயணம் 2.குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் 3.சாலை ஓரங்களில் வாகனங்களில் நிறுத்திவிட்டு ஓய்வெடுத்தல் என்ற தலைப்பின் கீழ் பேசப்பட்டது.

    சாலை பாதுகாப்பு பணிகள் குறித்தும் மேம்பாலங்கள் வரும் வழித்தடங்களில் நீண்ட வழிதடமாக இருந்து பின்பு மேம்பாலங்களில் அருகில் வரும்போது குறுகிய வழித்தடங்களாக இருப்பதாலும் இதை முன்கூட்டியே கணிக்கும் பொருட்டு வாகன ஓட்டிகளுக்கு பதாகைகள் வைக்க வலியுறுத்தப்பட்டது.மேலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் பகுதிகளில் ஆக்சிடென்ட் ஜோன் என்ற பிரதிபலிப்பான் கொண்டு அறிவுறுத்தும் பொருட்டு பதாகைகள் வைக்கவும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

    இந்த நடைமுறைகளை பின்பற்றுவதால் எளிதில் வாகன விபத்துகள் மற்றும் உயிர் இழப்புகளை தவிர்க்கலாம். செங்கல்பட்டு -திருச்சி வரை உள்ள நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு வாட்ஸ் அப் குழுக்கள் அமைத்து அடுத்தடுத்து அதிவேகமாக செல்லும் வாகனங்களை அறிவுறுத்தும் பொருட்டு குழுவில் பகிரவும் அவர்களை கண்காணிக்கவும் வாட்ஸ் அப் குழு உருவாக்க முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் ஏ. எஸ் .பி அபிஷேக் குப்தா ., டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் ,நெடுஞ்சாலை ரோந்து சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் உள்ளிட்டார் பலர் கலந்து கொண்டனர்.

    • வாகனங்களில் செல்லும் போது சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும்.
    • பள்ளி கல்லூரி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 மற்றும் திருப்பூர் தெற்கு போக்குவரத்து காவல் துறை சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் போதை தடுப்பு மற்றும் 33வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றும், விழிப்புணர்வு பற்றிய முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினார். தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் தினேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    வாகனங்களில் செல்லும் போது சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும். அதி வேகத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும், இரு சக்கர வாகனத்தை எடுக்கும் போதே தலை கவசத்தை மறக்காமல் அணிய வேண்டும். காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் நிச்சயம் அணிய வேண்டும். ஒரு வழி பாதையில் செல்லக் கூடாது . போதை பழக்கத்திற்கு அடிமையாக வேண்டாம்.அவற்றால் எண்ணற்ற நோய்கள் பரவுகிறது. குடும்ப நிம்மதியை இழக்கிறது. பள்ளி கல்லூரி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

    தெற்கு காவல் குற்றப்பிரிவு ஆய்வாளர் ரத்தினகுமார் முன்னிலை வகித்தார். பிறகு மாணவ செயலர்கள் ரத்தினகணேஷ், அருள்குமார், பாலசுப்பிரமணியன் தலைமையில் மாணவர்கள் போதை விழிப்புணர்வு நடனமும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடனமும் அரங்கேற்றினர்.மாணவ மாணவிகள், பொதுமக்கள் , காவல் துறையினர் அனைவரும் இணைந்து போதை ஒழிப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இந்த விழிப்புணர்வினை ஏராளமான பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கண்டுகளித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    பெரம்பலூரில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    சாலை பாதுகாப்பு வார விழா நேற்று முதல் வருகிற 10-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதன் மூலமாக சாலை விதிகளை முறையாகப் பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும். சாலைகளை கடக்கும் போதும், வாகனங்களில் பயணிக்கும் போதும் மிகுந்த பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, நடைபெற்று வருகிறது. சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி பெரம்பலூர் போக்குவரத்துத்துறையின் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் பாலக்கரை ரவுண்டானா அருகே நடந்தது.



    இதனை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர். இந்த ஊர்வலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள், அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், ஓட்டுனர் பயிற்சிப்பள்ளிகளை சேர்ந்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சாலை விதிகளை முறையாக பின்பற்றவும், வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது. மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது. தலைக்கவசம் (ஹெல்மெட்) உயிர்கவசம். படியில் பயணம் நொடியில் மரணம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் நகரை வலம் வந்து ரோவர் ஆர்ச்சில் ஊர்வலத்தை முடித்து கொண்டனர்.

    இதேபோல் பெரம்பலூர் மாவட்ட போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஹெல்மெட் அணிந்து ஓட்டிய இரு சக்கர வாகனங்களின் ஊர்வலமும் நடந்தது. இந்த ஊர்வலம் ரோவர் ஆர்ச், சங்குப்பேட்டை, கடைவீதி வழியாக சென்று பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. பாலக்கரையில் விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கிய போது, அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் பயணித்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட்டுகள் வழங்கப்பட்டது. மேலும், சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருளரங்கன், அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் புகழேந்திரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செல்வராஜ் (நிலை-1), பெரியசாமி (நிலை-2), அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×