search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரத்தில்  சாலை பாதுகாப்பு ஆலோசனை  விபத்துகளை தடுக்க போலீசாருக்கு வாட்ஸ் அப் குழுக்கள்
    X

    விபத்தினை தடுப்பது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    விழுப்புரத்தில் சாலை பாதுகாப்பு ஆலோசனை விபத்துகளை தடுக்க போலீசாருக்கு வாட்ஸ் அப் குழுக்கள்

    • அதில் விபத்துக்கள் ஏற்பட 3 முக்கிய காரணங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
    • குறுகிய வழித்தடங்களை முன்கூட்டியே கணிக்கும் பொருட்டு வாகன ஓட்டிகளுக்கு பதாகைகள் வைக்க வலியுறுத்தப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் சென்னை ஐ.ஐ.டி. தொண்டு நிறுவன ஆர்வலர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறை ஆகியோருடன் இணைந்து சாலை பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு எண் 1,2,3 ஆகிய ஓங்கூர் முதல் மடபட்டு வரை உள்ள வழித்தடங்களில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் பொருட்டு சில வழிகாட்டு முறைகள் எடுத்துக் கூறப்பட்டது. அதில் விபத்துக்கள் ஏற்பட 3 முக்கிய காரணங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. 1.அதிவேக பயணம் 2.குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் 3.சாலை ஓரங்களில் வாகனங்களில் நிறுத்திவிட்டு ஓய்வெடுத்தல் என்ற தலைப்பின் கீழ் பேசப்பட்டது.

    சாலை பாதுகாப்பு பணிகள் குறித்தும் மேம்பாலங்கள் வரும் வழித்தடங்களில் நீண்ட வழிதடமாக இருந்து பின்பு மேம்பாலங்களில் அருகில் வரும்போது குறுகிய வழித்தடங்களாக இருப்பதாலும் இதை முன்கூட்டியே கணிக்கும் பொருட்டு வாகன ஓட்டிகளுக்கு பதாகைகள் வைக்க வலியுறுத்தப்பட்டது.மேலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் பகுதிகளில் ஆக்சிடென்ட் ஜோன் என்ற பிரதிபலிப்பான் கொண்டு அறிவுறுத்தும் பொருட்டு பதாகைகள் வைக்கவும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

    இந்த நடைமுறைகளை பின்பற்றுவதால் எளிதில் வாகன விபத்துகள் மற்றும் உயிர் இழப்புகளை தவிர்க்கலாம். செங்கல்பட்டு -திருச்சி வரை உள்ள நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு வாட்ஸ் அப் குழுக்கள் அமைத்து அடுத்தடுத்து அதிவேகமாக செல்லும் வாகனங்களை அறிவுறுத்தும் பொருட்டு குழுவில் பகிரவும் அவர்களை கண்காணிக்கவும் வாட்ஸ் அப் குழு உருவாக்க முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் ஏ. எஸ் .பி அபிஷேக் குப்தா ., டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் ,நெடுஞ்சாலை ரோந்து சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் உள்ளிட்டார் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×