search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை தடுப்பு"

    • போதைப் பழக்கமானது உடல் நலத்துக்கும், சமூக நலத்துக்கும் தீங்குவிளைவிக்கக்கூடியதாகும்.
    • போதைப் பொருள்களை பயன்படுத்தாதபடி விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

    பல்லடம் ; 

    பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதில் பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி தலைமை வகித்து பேசியதாவது:- மாணவா்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாமல் கல்வியில் மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டும். போதைப் பழக்கமானது உடல் நலத்துக்கும், சமூக நலத்துக்கும் தீங்குவிளைவிக்கக்கூடியதாகும்.

    இதனால் தனி மனிதன் மட்டுமின்றி அவா் சாா்ந்த சமுதாயமும் பாதிக்கப்படுகிறது. நீங்கள் போதை என்ற தவறான பழக்கத்தில் மாட்டிக்கொள்ளவேண்டாம். அதே வேளையில், குடும்ப உறுப்பினா்கள், நண்பா்கள் உள்பட யாரும் போதைப் பொருள்களை பயன்படுத்தாதபடி விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

    இந்த நிகழ்ச்சியில் நீதிபதி சித்ரா, வக்கீல் மார்ட்டின் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகரில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜா பேரணியை ெதாடங்கி வைத்தார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் ராஜபாளையம் கிளை சார்பில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடந்தது. வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜா பேரணியை ெதாடங்கி வைத்தார். கிளை தலைவர் ஜான் பாட்ஷா தலைமை தாங்கினார். இதில் பங்கேற்றவர்கள் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். மாநில பேச்சாளர் முகம்மது ஷபீக் சிறப்புரையாற்றினார். நகர செயலாளர் காஜாமைதீன் நன்றி கூறினார்.

    • போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு
    • போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா தலைமையில் நேற்று போதைதடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.

    இதில் கண்ணமங்கலம் பேரூராட்சி முன்னாள் தலைவர் கோவர்த்தனன் உள்பட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, வியாபாரிகள் யாரும் தங்கள் கடைகளில் குட்கா, புகையிலை மற்றும் சிகரெட் உள்பட போதை பொருட்கள் விற்பனை செய்வது கூடாது. மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

    முடிவில் தனிப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஏகாம்பரம் நன்றி கூறினார்.

    • வாகனங்களில் செல்லும் போது சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும்.
    • பள்ளி கல்லூரி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 மற்றும் திருப்பூர் தெற்கு போக்குவரத்து காவல் துறை சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் போதை தடுப்பு மற்றும் 33வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றும், விழிப்புணர்வு பற்றிய முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினார். தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் தினேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    வாகனங்களில் செல்லும் போது சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும். அதி வேகத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும், இரு சக்கர வாகனத்தை எடுக்கும் போதே தலை கவசத்தை மறக்காமல் அணிய வேண்டும். காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் நிச்சயம் அணிய வேண்டும். ஒரு வழி பாதையில் செல்லக் கூடாது . போதை பழக்கத்திற்கு அடிமையாக வேண்டாம்.அவற்றால் எண்ணற்ற நோய்கள் பரவுகிறது. குடும்ப நிம்மதியை இழக்கிறது. பள்ளி கல்லூரி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

    தெற்கு காவல் குற்றப்பிரிவு ஆய்வாளர் ரத்தினகுமார் முன்னிலை வகித்தார். பிறகு மாணவ செயலர்கள் ரத்தினகணேஷ், அருள்குமார், பாலசுப்பிரமணியன் தலைமையில் மாணவர்கள் போதை விழிப்புணர்வு நடனமும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடனமும் அரங்கேற்றினர்.மாணவ மாணவிகள், பொதுமக்கள் , காவல் துறையினர் அனைவரும் இணைந்து போதை ஒழிப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இந்த விழிப்புணர்வினை ஏராளமான பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கண்டுகளித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • கன்னியாகுமரி மாவட்டத்தில் 21 பகுதியிலிருந்து துவங்கியது.
    • அருமனையிலிருந்து துவங்கிய தொடர் ஜோதி ஓட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்தில்உலகபோதை தடுப்பு விழிப்புணர்வு தின தொடர் ஜோதி ஓட்டம் 21 பகுதியிலிருந்து துவங்கி நாகர் கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நிறைவுபெறுகிறது.

    அதன் ஒரு பகுதியாக அருமனையிலிருந்து அருமனை பேரூராட்சித் தலைவர் வி.எம்.லதிகா மேரி, பேரூராட்சிகளின் துணை இயக்குனர் விஜயலட்சுமி அகியோர் துவக்கிவைத்த தொடர் ஜோதி ஓட்டத்தில், பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    ×