search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாகுபடி"

    • இலவச பைப்புகள் மற்றும் 50 சதவீத மானியத்தில் பொருட்கள் வழங்கப்படும்.
    • கால நிலைகள், பருவ நிலைகளுக்கு ஏற்ப பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை காவளூர் கிராமத்தில் அம்மாபேட்டை வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை தொழில் நுட்பக்குழு சார்பில் கிராம வேளாண் முன்னேற்றக் குழுவினர்க்கான முன் பருவ பயிற்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு காவளூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.

    வட்டார தொழில் நுட்பக்குழு மேலாளர் மாதா லெட்சுமி வரவேற்றார்.

    இதில் வேளாண் உதவி இயக்குநர் மோகன் முன்னிலை வகித்து பேசியதாவது கால நிலைகள், பருவ நிலைகளுக்கு ஏற்ப பயிர் சாகுபடி செய்ய வேண்டும் என பேசினார்.

    மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஓரு பண்ண குடும்பத்திற்கு தலா 2 தென்னை கன்றுகள் வழங்கப்பட உள்ளதாகவும், நுண்ணுயிர் பாசன திட்டத்தின் கீழ் இலவச பைப்புகள் மற்றும் 50 சதவீத மான்யத்தில் சிங் சல்பேட், கடப்பாரை, மண்வெட்டி, இரும்பு பாண்டு, கைதெளிப்பான், பவர் ஸ்பிரே, ஆயில் இன்ஜின், ஆகியவை வழங்கப்படும் என தெரிவித்தார்.

    இதில் உதவி வேளாண் அலுவலர் சிங்காரவேலு மற்றும் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நிலப்பட்டா வழங்கக்கோரி உண்ணாவிரதம்.
    • வழக்கின் தீர்ப்பை பொறுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    பாபநாசம்:

    பாபநாசம் தாலுக்கா அரையபுரம் தட்டுமால்படுகை கிராம விவசாயி களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ராயத்து வாரியாக மாற்றம் செய்து கால தாமதமின்றி நிலப்பட்டா வழங்கக்கோரி தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    மாவட்ட விவசாய சங்க செயலாளர் சாமு.தர்மராஜ் தலைமை வகித்தார்.

    முன்னோடி விவசாயிகள் சௌந்தராஜன், ரெங்கராஜன், பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தில் ஏ .ஐ .டி .யு. சி மாநிலச் செயலாளர் தில்லைவனம் , முன்னாள் மாவட்ட விவசாய சங்க துணை செயலாளர் பரமசிவம், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், பாபநாசம் ஒன்றிய செயலாளர் சேகர், விவசாய சங்க ஒன்றிய தலைவர் பொய்யாமொழி முன்னோடி விவசாயி ரவி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள்.

    பின்னர் பாபநாசம் தாசில்தார் பூங்கொடி , கும்பகோணம் நகர நிலவரி திட்ட தனி தாசில்தார் மரிய ஜோசப் ஆகியோர் இணைந்து போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமையால் உரிய நடவடிக்கை தொடர இயலவில்லை என்றும் வழக்கின் தீர்ப்பை பொறுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது.

    பேச்சுவார்த்தையில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப் -இன்ஸ்பெக்டர் குமார், வருவாய் ஆய்வாளர் வரதராஜன், கிராம நிர்வாக அலுவலர்கள் காயத்ரி ஜோதிபாண்டியன், மணிமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • தென்மேற்கு பருவமழை பொழிவும் குறைவாகவே இருந்தது.
    • நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதால் போதிய தண்ணீர் கிடைப்பதில்லை.

    குடிமங்கலம்:

    குடிமங்கலம் வட்டாரத்தில் பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில் 7,188 ெஹக்டேர் ஆழ்குழாய் கிணறு வாயிலாக 3,012,கிணற்று பாசனத்தில் 5,719, மீதமுள்ள 5,534 ெஹக்டேர் பரப்பில் மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணற்றுப்பாசனத்துக்கு நிலத்தடி நீர் மட்டமே முக்கிய ஆதாரமாக உள்ளது.

    குடிமங்கலம் பகுதியின் சராசரி மழையளவு 681 மி.மீ., ஆகும். இதில் வடகிழக்கு பருவமழை சீசனில் 70 சதவீதம், கோடை மழை 18, தென்மேற்கு பருவமழையால் 12 சதவீதம் மழைப்பொழிவு கிடைக்கிறது.பருவமழை குறையும் காலங்களில் அப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு பல ஆண்டுகள் வளர்த்த தென்னை மரங்கள் கருகுகின்றன. கடந்த 2002 - 2004, 2012 - 14, 2017 - 18 ஆண்டுகளில் போதிய மழை இல்லாமல் வறட்சி ஏற்பட்டது.

    நடப்பாண்டு கோடை கால மழை போதியளவு பெய்யாத நிலையில் தென்மேற்கு பருவமழை பொழிவும் குறைவாகவே இருந்தது.இந்நிலையில் இம்மாத துவக்கத்தில் இருந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன் வறட்சியான காற்றும் வேகமாக வீசி வருகிறது.இதனால் பெரும்பாலான குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகின்றன. வறட்சி காரணமாக நிலத்தடி நீர்மட்டமும் பெருமளவு பாதித்து கிணறு, போர்வெல்களில் நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    வறட்சி காரணமாக ஆடிப்பட்ட சாகுபடியை துவக்காமல், தென்னை உள்ளிட்ட நிலைப்பயிர்களை காப்பாற்றுவதில் விவசாயிகள் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

    விளைநிலங்களில் நிலைப்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சினாலும் விரைவாக ஈரப்பதம் காய்ந்து விடுகிறது. மேலும் கிணறு மற்றும் போர்வெல்களில் நீர் மட்டம் வேகமாக குறைந்து விட்டது.காய்கறி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையை தவிர்க்க புதிதாக போர்வெல்கள் அமைக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

    சுமார் ஆயிரம் அடி வரை போர்வெல் அமைத்தாலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதால் போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. நீண்ட கால பயிரான தென்னை மரங்களுக்கும் தண்ணீர் பற்றாக்குறை துவங்கியுள்ளது.போதிய மழை இல்லாததால் மானாவாரி விளைநிலங்களில் ஆடிப்பட்டத்துக்கான எவ்வித பணிகளையும் விவசாயிகள் துவக்கவில்லை.

    வழக்கமாக ஆகஸ்டு மாதத்தில் திருமூர்த்தி அணையிலிருந்து மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்.இந்தாண்டு காண்டூர் கால்வாய் மற்றும் பிரதான கால்வாய் பராமரிப்பு பணிகள் காரணமாக பாசனத்துக்கு இம்மாதத்தில் தண்ணீர் திறப்பது கேள்விக்குறியாகியுள்ளது. காண்டூர் கால்வாய் பராமரிப்பு காரணமாக தொகுப்பு அணைகளில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் பெறப்படவில்லை.

    குடிமங்கலம் வட்டார விவசாயிகள் கூறுகையில், கால்வாய் பராமரிப்பு பணிகளை குறித்த நேரத்தில் முடித்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும். இல்லாவிட்டால் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில், சாகுபடி கைவிடப்பட்டு தரிசாகும் அபாயம் உள்ளது.

    கால்வாய் பராமரிப்பு பணிகளின் நிலை மற்றும் தண்ணீர் திறப்பு குறித்து தமிழக அரசு முறையான தகவல் மற்றும் அறிவிப்பு செய்ய வேண்டும் என்றனர். 

    • பிரதான சாகுபடியாக தென்னை 18,252 ெஹக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • பழப்பயிர் சாகுபடியில், ஈடுபடும் விவசாயிகளுக்கு துறை சார்பில் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

    உடுமலை:

    உடுமலை வட்டாரத்தில் விளைநிலங்களில் கிணறு மற்றும் போர்வெல் அமைத்து பல ஆயிரம் ெஹக்டேரில், நீண்ட கால பயிரான தென்னை மற்றும் இதர காய்கறி சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.அவ்வகையில் உடுமலை வட்டாரத்தில் பிரதான சாகுபடியாக தென்னை 18,252 ெஹக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னைக்கு அடுத்தபடியாக காய்கறி சாகுபடி பரப்பு இந்த வட்டாரத்தில் அதிகமுள்ளது.

    குறிப்பாக ஆண்டு முழுவதும் தக்காளி, கத்தரி, பச்சை மிளகாய் சாகுபடியாகிறது. மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய தக்காளி உற்பத்தியில் உடுமலை வட்டாரம் முன்னிலை வகிக்கிறது.கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 171 ெஹக்டேர் பரப்பில் தக்காளி சாகுபடிக்கு நாற்று நடவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக சின்னவெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் நடவு செய்துள்ளனர்.இவ்வாறு காய்கறி சாகுபடி ஆதிக்கம் செலுத்தி வந்த பகுதியில் தற்போது படிப்படியாக பழப்பயிர் சாகுபடி பரப்பு மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது.காய்கறி சாகுபடியில் நடவு, களையெடுத்தல், மருந்து தெளித்தல், குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை அறுவடை என தொழிலாளர்கள் தேவை அதிகமாகும்.

    சீசன் சமயங்களில் போதிய தொழிலாளர்கள் கிடைக்காமல் பல்வேறு பணிகள் பாதித்து விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர். அறுவடையின் போது விலை வீழ்ச்சி ஏற்பட்டு நஷ்டத்தை சந்திக்கின்றனர்.

    எனவே மாற்றி யோசிக்க துவங்கியுள்ள விவசாயிகள், தற்போது பழப்பயிர் சாகுபடியில் ஈடுபட துவங்கியுள்ளனர்.அவ்வகையில் உடுமலை வட்டாரத்தில் மா சாகுபடி, 690 ெஹக்டேர், மரநெல்லி 82.68, கொய்யா 31.38,சப்போட்டா 25.98, மாதுளை 2.69, எலுமிச்சை 10;48, பேரீட்சை 2.69 என 962 ெஹக்டேர் பழங்கள் உற்பத்திக்கான செடி மற்றும் மரங்கள் சாகுபடி செய்யப்பட்டு பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இச்சாகுபடி பரப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    பழப்பயிர் சாகுபடிக்கு தொழிலாளர் தேவை குறைவு. சொட்டு நீர் பாசனம் அமைத்துக்கொள்வதால் தண்ணீரை சிக்கனப்படுத்துவதுடன் எளிதாகவும் பாய்ச்சி க்கொள்ளலாம். சந்தை வாய்ப்புகளை உள்ளூரிலேயே ஏற்படுத்திக்கொடுத்தால் இன்னும் பழப்பயிர் சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என்றனர்.

    உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகனரம்யா கூறுகையில், பழப்பயிர் சாகுபடியில், ஈடுபடும் விவசாயிகளுக்கு துறை சார்பில் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

    மேலும் அரசின் சிறப்புத்திட்டங்களின் கீழ் தோட்டக்கலைத்துறை நாற்றுப்பண்ணை வாயிலாக விவசாயிகளுக்கு நாற்றும் வினியோகிக்கப்பட்டு வருகிறது என்றார்.தென்னைக்கு மாற்றாக

    பழப்பயிர் சாகுபடியில் ஆர்வம் காட்டும் உடுமலை விவசாயிகள் 

    • 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • மேளம் அடித்தபடி ஒப்பாரி வைத்து அழுது கொடும்பாவியை இழுத்து வந்தனர்.

    நாகப்பட்டினம்:

    காவிரி கடைமடை பகுதியான நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர், திருக்குவளை, திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடைமடை பகுதியான நாகை மாவட்டத்தில் சாகுபடிக்கான தண்ணீர் முழுமையாக வந்து சேரவில்லை. இதனால் விதைத்த நெல் மணிகள் முளைக்காமலும் , முளைத்த நெற்பயிர்கள் கருகவும் தொடங்கி உள்ளது.

    இந்த ஆண்டு கோடை மழையும் எதிர் பார்த்த அளவுக்கு பெய்யாத காரணத்தினால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குறுவை சாகுபடியானது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நாகை எட்டுக்குடியில் வருண பகவானிடம் மழை பெய்ய வேண்டி கொடும்பாவி இழுத்து விவசாயிகள் நூதன வழிபாட்டில் ஈடுப்பட்டனர்.

    மழையின்றி வாடும் நேரங்களில் இதுபோல செய்தால் மழை பெய்யும் என்ற அந்த கால ஐதீகப்படி களி மண்ணால் கொடும்பாவி கட்டி வயிற்றின் நடுவே தீச்சட்டி வைத்து தெருத் தெருவாக பாத்திரங்களில் மேளம் அடித்தபடி ஒப்பாரி வைத்து அழுது கொடும்பாவியை இழுத்து வந்தனர்.

    மேலும் கொடும்பாவியை சுற்றி நின்று விவசாயிகள் கைதட்டி கேலி செய்து மழையை தருமாறு வருணபகவானிடம் முறையிட்டு நூதன வழிபாட்டில் ஈடுப்பட்டனர். காவிரி நீர் கை கொடுக்காத நிலையில் மழை பெய்தால் மட்டுமே நெற்பயிரை காப்பாற்ற முடியும் என்பதால் வருண பகவானிடம் மழை வேண்டி வழிபட்டுள்ளோம் என்றனர்.

    அவிநாசி:

    அவிநாசியில் அவிநாசியப்பா் உழவா் உற்பத்தி நிறுவனம் திறப்பு விழா, உறுப்பினா் சோ்க்கை முகாம், விவசாய கருத்தரங்கு என முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற கலெக்டர் கிறிஸ்துராஜ் உழவா் உற்பத்தி நிறுவனத்தை திறந்துவைத்தாா்.

    பின்னா், அவா் பேசியதாவது:- விவசாயிகள் தங்களது விளைபொருட்களை தாங்களே சந்தைப்படுத்தும் வகையில் உழவா் உற்பத்தி நிறுவனத்தை தொடங்கியுள்ளனா். இம்மையத்தில் தக்காளி, வெங்காயம், வெண்டைகாய், கத்திரிக்காய் உள்ளிட்ட அனைத்து விளைபொருட்களையும் நேரடியாக விற்பனை செய்யவுள்ளனா். இதனை பொதுமக்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும்.

    இந்த உழவா் உற்பத்தி நிறுவனத்தில் சேரும் உறுப்பினா்களுக்கு காப்பீடு வழங்குவதுடன், கோவையில் உள்ள பிரபல மருத்துவமனையில் 10 சதவீத சலுகைக் கட்டணத்தில் சிகிச்சை பெறும் வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளனா். இதேபோல விவசாயத்துக்கான தேவையான அரசு மானியங்கள், வங்கி உதவிகள் ஆகியவற்றையும் செய்துத் தருகின்றனா் என்றாா்.

    நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநா் மாரியப்பன், மாவட்ட வளா்ச்சி மேலாளா் (நபாா்டு) அசோக்குமாா், வேளாண்மை உதவி இயக்குநா் அன்பழகி, மாவட்ட முன்னோடி வங்கி முதன்மை மேலாளா் ரவி, பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி, அத்திக்கடவு ஒருங்கிணைப்பாளா் பொன்னுக்குட்டி, சின்னேரிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் சரவணன், உழவா் உற்பத்தி நிறுவன உறுப்பினா்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா் .

    • கடைமடை பகுதிக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை.
    • சம்பா சாகுபடி நடக்குமா? என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    மதுரையில் அடுத்த மாதம் 20-ம் தேதி அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இது தொடர்பான அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.

    பால்வளத் தலைவர் காந்தி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை .திருஞானம், எம். ஜி .ஆர். மன்ற இணைச்செயலாளர் ராஜமாணிக்கம், ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ. ரத்தினசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிக்கல்சன் வங்கி தலைவர் சரவணன் வரவேற்றார்.

    கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது :-

    ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் அ.தி.மு.க. தான் பெரிய கட்சி. தங்களது சுயநலத்துக்காக தி.மு.க.வுடன் சமரசம் செய்து கொள்பவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    கடைமடை பகுதிக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை. பல இடங்களில் குறுவை பயிர்கள் கருகி விட்டன. இதனால் சம்பா சாகுபடி நடக்குமா ? என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

    எனவே இந்த மாதம் வரை தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீரை கர்நாடகாவில் இருந்து கேட்டு பெற வேண்டும். மேகதாதுவில் அணைகட்ட முயலும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்.

    யார் யாருடன் சேர்ந்தாலும் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பில்லை. பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க. சிறப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி, திராவிட வங்கி தலைவர் பஞ்சாபிகேஷன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன், பொதுக்குழு உறுப்பினர் கவிதா கலியமூர்த்தி, மாணவரணி செயலாளர் ஜவகர், ஒன்றிய செயலாளர்கள் சாமிவேல், நாகத்தி கலியமூர்த்தி, அம்மா பேரவை துணைத்தலைவர் பாலை ரவி, 51-வது வட்டச் செயலாளர் மனோகரன்.

    அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் திருநீலகண்டன், கரந்தை மகளிர் அணி செயலாளர் சசிகலா, தகவல் தொழில்நுட்ப பிரிவு நீலகண்டன், பிரதிநிதி ஏ.டி. சண்முகசுந்தரம், ஐயப்பன், கவுன்சிலர்கள் தட்சிணாமூர்த்தி, காந்திமதி, கேசவன், கோபால், மாணவரணி முருகேசன், மாவட்ட எம்ஜிஆர் மற்றும் இணைச் செயலாளர் சிங். ஜெகதீசன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் தம்பி துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
    • குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பேசிய விபரங்கள் வருமாறு:-

    முத்துலட்சுமி (அ.தி.மு.க):

    கொளப்பாடு ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் குளங்கள் தூர்வாரப்பட்டு மணல்களை டிராக்டர்களில் ஏற்றி செல்லும் போது சாலைகளில் கொட்டுவதால் பொதுமக்க ளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

    அதனை சரி செய்ய வேண்டும்.

    ரம்யா (அ.தி.மு.க.): பண்ணத்தெரு ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனை சரி செய்ய வேண்டும்.

    செல்வி சேவியர் (தி.மு.க.):

    நீர்முளை ஊராட்சி பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் பொதுமக்களுக்கு தண்ணீர் சரிவர கிடைப்பதில்லை. அதனை சரி செய்ய வேண்டும்.

    மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்):

    தலைஞாயிறு பகுதிக்கு காவிரிநீர் வராததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

    தீபா (அ.தி.மு.க.):

    அவரிக்காடு ஊராட்சியில் மயான சாலைக்கு செல்லும் வழியில் ஆற்றில் உள்ள மரப்பாலத்தை அகற்றி கான்கிரீட் பாலம் அமைக்க வேண்டும்.

    மாசிலாமணி (தி.மு.க.):

    வானவன்மகாதேவி பகுதியில் பிலாற்றங்கரை செல்லும் சாலையை செப்பணிட வேண்டும்.

    உதயகுமார் (தி.மு.க.):

    நாலுவேதபதி பகுதியில் உள்ள சாலைகளை செப்பனிட வேண்டும்.

    இதற்கு பதிலளித்து ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி பேசுகையில்:-

    உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிதிநி லைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றி தரப்படும் என்றார்.

    முடிவில் அலுவலக மேலாளர் மகேஷ் நன்றி கூறினார்.

    • பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
    • தண்ணீரின்றி பயிர்கள் காய்ந்து விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

    வேதாரண்யம்:

    காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் சுர்ஜித் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் இன்னும் 15 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற சூழல் உள்ளதால், டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள குறுவை சாகுபடி பணிகள் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

    மேலும், தண்ணீரின்றி பயிர்கள் காய்ந்து விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

    நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடி வளர்ந்து 30 நாட்கள் ஆனநிலையில் தண்ணீர் இன்றி முளைப்பு திறன் பாதித்த நிலையில் மகசூல் இனி பயன்தராது என்பதால் நூற்றுக்கணக்கான ஏக்கர் டிராக்டர் விட்டு உழுதுவிட்டனர்.

    இதேநிலை நீடித்தால் சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும் எனவே டெல்டா மாவட்ட விவசாயிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசு, கர்நாடகா அரசுக்கு அழுத்தம் தெரிவித்து, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக கூட்டி தண்ணீரை பெற்றுத் தர வேண்டும் .

    மேலும், குறுவை சாகுபடி பாதித்த பகுதிகளை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரியலூரில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரூ.136.5 இலட்சம் மதிப்பீட்டில் குறுவை நெல் சாகுபடி திட்டமிடப்பட்டுள்ளது
    • போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்

    திருமானூர்,

    அரியலூர் மாவட்டம் கீழக்கொளத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு குறுவை தொகுப்புத் திட்டத்தின்கீழ் இடுபொருட்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். அதன் பின்னர் அவர் பேசும்போது, அரியலூர் மாவட்டத்தில், 5000 ஏக்கர் பரப்பளவில் ரூ.136.5 இலட்சம் மதிப்பீட்டில் குறுவை நெல் சாகுபடி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. திருமானூர் வட்டார விவசாயிகளுக்கு இடுபொருட்களான ரசாயன உரங்கள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், குறுவை மாற்றுப் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகள், எண்ணெய் வித்து விதைகள் மற்றும் பயிர் வகை விதைகள் வழங்கப்பட்டும், குறுவை நெல் சாகுபடி திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் தங்களது பகுதிகளில் உள்ள வேளாண் துறை அலுவலகங்களை அணுகி பயன்பெற வேண்டும் என்று அவர் கூறினார். நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, வேளாண் வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகளான பலரும் கலந்து கொண்டனர்.

    • கிடைக்கும் தண்ணீரை பொறுத்தும், நல்ல விலை கிடைக்கும் சீசன்களை இலக்காக வைத்து நடவு பணிகளை மேற்கொள்கின்றனர்
    • அதிக நோய்த்தாக்குதலும் இச்சாகுபடியில் ஏற்படுவதில்லை

    உடுமலை,ஜூலை.17-

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் கிணற்றுப்பாசனத்துக்கு, பல்வேறு காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இந்தாண்டு கோடை கால மழை போதிய அளவு பெய்யாமல், நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.

    கிடைக்கும் தண்ணீரை பொறுத்தும், நல்ல விலை கிடைக்கும் சீசன்களை இலக்காக வைத்து நடவு பணிகளை மேற்கொள்கின்றனர். அவ்வகையில் கேரளாவில், பொரியல் தட்டைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, குறைந்த தண்ணீர் வசதியுள்ள பகுதிகளில் இச்சாகுபடியை ஆண்டு முழுவதும் மேற்கொள்கின்றனர்.

    தற்போது கோட்டமங்கலம், மைவாடி உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக இச்சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    இப்பகுதியில் விளையும் பொரியல் தட்டை, கேரளா மாநிலம் பாலக்காடு, மூணாறு, மறையூர் போன்ற பகுதிகளுக்கு அதிகளவு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.நடவு செய்து செடிகளுக்கு 50 நாட்கள் ஆன பிறகு காய்களை குறிப்பிட்ட இடைவெளி விட்டு அறுவடை செய்யலாம்.ஏக்கருக்கு சராசரியாக 100 முதல் 150 கிலோ வரை ஒரு பறிப்பில் கிடைக்கும். அதிக நோய்த்தாக்குதலும் இச்சாகுபடியில் ஏற்படுவதில்லை.கடந்தாண்டு போதிய விலை கிடைக்கவில்லை. ஓணம் பண்டிகை சீசனில் நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது.

    முக்கிய சீசனில் கேரளா வியாபாரிகள் நேரடியாக விளைநிலங்களுக்கு வந்து கொள்முதல் செய்து கொள்வதால் விற்பனை சந்தை பிரச்னையும் இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர் 

    • கோவைக்காயில் கருங்கோவை, மூவிரல் கோவை, ஐவிரல் கோவை உள்ளிட்ட வகைகள் உள்ளன.
    • கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் கோவைக்காய்க்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் தோட்டக்கலை பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    பல்வேறு மலர்கள் மட்டுமின்றி முள்ளங்கி, கேரட், பீட்ருட், பாகற்காய், புடலை, அவரை, துவரை, பீர்க்கன், வெள்ளரியுடன் சேர்த்து தற்போது கோவைக்காய் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை சீராக பலன் கிடைப்பதால், ஓசூர் பகுதியில் கோவக்காய் சாகுபடி பரப்பினை விவசாயிகள் அதிகரித்து வருகின்றனர்.

    கடந்த காலங்களில், கோவைக்காயை கிராம மக்கள் சமையலில் தவறாமல் பயன்படுத்தி வந்தனர். மருத்துவ குணங்கள் நிறைந்த கோவைக்காயின் பயன்பாடு, தற்போது நகரப்பகுதியிலும் அதிகரித்துள்ளது. இதனால், நுகர்வு இரட்டிப்பாகியுள்ளது.

    இதையடுத்து, ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான பாகலூர், கெலவரப்பள்ளி விவசாயிகள் கோவைக்காய் சாகுபடிக்கு மாறியுள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கோவைக்காயில் கருங்கோவை, மூவிரல் கோவை, ஐவிரல் கோவை உள்ளிட்ட வகைகள் உள்ளன.

    ஒரு முறை நடவு செய்தால், 3 ஆண்டுகள் வரை பலன் கிடைக்கிறது. குறைந்தளவு தண்ணீர் போதுமானது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    மேலும், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் கோவைக்காய்க்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. ரத்தம் சுத்திகரிப்பு, சரும பாதிப்பு, கண் நோய், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாக திகழ்வதால், விற்பனை அதிகரித்து வருகிறது.

    நடவு செய்து 60 நாளில் கொடிகள் நன்கு வளர்ந்து காய்கள் அறுவடைக்கு வந்து விடுகிறது. ஆண்டுக்கு சராசரியாக ஏக்கருக்கு 25 டன் வரை மகசூல் கிடைக்கிறது.

    கேரளா மற்றும் கர்நாடகத்திற்கு அதிகளவில் விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். உள்ளூரிலும் அதிக வரவேற்பு உள்ளது. தற்போது, கிலோவுக்கு ரூ.40 வரை விலை கிடைக்கிறது என்றனர்.

    ×