என் மலர்
உள்ளூர் செய்திகள்

குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவராணம் வழங்க வேண்டும்
- பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
- தண்ணீரின்றி பயிர்கள் காய்ந்து விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.
வேதாரண்யம்:
காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் சுர்ஜித் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் இன்னும் 15 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற சூழல் உள்ளதால், டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள குறுவை சாகுபடி பணிகள் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
மேலும், தண்ணீரின்றி பயிர்கள் காய்ந்து விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.
நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடி வளர்ந்து 30 நாட்கள் ஆனநிலையில் தண்ணீர் இன்றி முளைப்பு திறன் பாதித்த நிலையில் மகசூல் இனி பயன்தராது என்பதால் நூற்றுக்கணக்கான ஏக்கர் டிராக்டர் விட்டு உழுதுவிட்டனர்.
இதேநிலை நீடித்தால் சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும் எனவே டெல்டா மாவட்ட விவசாயிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசு, கர்நாடகா அரசுக்கு அழுத்தம் தெரிவித்து, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக கூட்டி தண்ணீரை பெற்றுத் தர வேண்டும் .
மேலும், குறுவை சாகுபடி பாதித்த பகுதிகளை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






