என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிவாரணம்"

    • தொலைதூரப் பகுதிகளில் சிக்கியுள்ளவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்
    • ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் தாராலி மற்றும் ஹர்ஷில் கிராமங்கள் உள்ளிட்டவை கடுமையான சேதத்தை சந்தித்தன.

    இந்த சூழலில், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான அரசு உடனடி உதவியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.5,000 காசோலைகளை வழங்கியது.

    இந்நிலையில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரணம், தங்களுக்கு ஏற்பட்ட சேதத்துடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு என்று அதை புறக்கணித்துள்ளனர்.

    வீடுகள், கடைகள் என அனைத்தையும் இழந்த தங்களுக்கு இந்த உதவி அவமானகரமானது என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

     இது உடனடி நிவாரணத்திற்காக வழங்கப்படும் இடைக்கால உதவி மட்டுமே என்று கூறினார். முழு சேதத்தையும் மதிப்பிட்டு அறிக்கை தயாரித்த பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்குவோம் என்று அதிகாரிகள் உறுதியளித்தார்.

    இதற்கிடையில் வெள்ளத்தில் வீடுகளை முற்றிலுமாக இழந்தவர்களுக்கும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அறிவித்தார்.

     நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தொலைதூரப் பகுதிகளில் சிக்கியுள்ளவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். இந்த பேரிடரில் இதுவரை ஐந்து பேர் இறந்துள்ளனர். மேலும் 49 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    • பொள்ளாச்சி வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
    • பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

    பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.

    இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு (வயது 25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34) மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த வழக்குக்கான தீர்ப்பை நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார். அதில் பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் என வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றச்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிமன்றம் மொத்தமாக ரூ.85 லட்சம் வழங்க உத்தரவிட்ட நிலையில் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் கூடுதலாக வழங்க முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2019 ஆண்டு நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த மிகக்கொடுமையான குற்றசம்பவமாக கருதப்படும் இந்த வழக்கை விசாரணை செய்த கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றது. இந்த கொடுஞ்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டைனை என வழங்கப்பட்டுள்ள கடுமையான தண்டனை குற்றசெயலில் ஈடுபட முனைவோருக்கு ஒரு சுடுமையான எச்சரிக்கையாக இருக்கும்.

    தற்போது தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி பெண்களுக்கு பல்வேறு வகைகளிலும் அதிகாரம் அளித்திட தமிழ்நாடு அரசு சிறந்த முயற்சிகளை எடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் தோழி விடுதிகள், புதுமைப்பெண், நான் முதல்வன் போன்ற முன்னோடி திட்டங்களின் விளைவாக மாநிலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இரண்டிலும் மாணவிகளின் சேர்க்கை அதிகரித்து உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 சதவீதம் பேர் இம்மாநிலத்தில் பணிபுரிகின்றனர்.

    பெண்களின் பாதுகாப்பிற்கு அரணாகத் திகழக்கூடிய திராவிட மாடல் அரசு, பெண்களுக்கு எதிராகக் குற்றச்செயலில் ஈடுபடுவதற்கு அஞ்சிடும் வகையில் பெண்களுக்குத் துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற சட்டத்தை சமீபத்தில் திருத்தம் செய்து குற்றச்செயல்களுக்கான தண்டனையை மிகவும் கடுமையாக்கியுள்ளது. மேலும், இந்திய தண்டனைச் சட்டத்திலும் பெண்களுக்கு எதிரான தண்டனையை கடுமையாக்கும் விதமாக உரிய சட்டத்திருத்தத்தினை சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றி ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்துள்ளது. இதனால், குற்றவாளிகள் தங்கள் குற்றங்களுக்கு கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

    இவ்வழக்கில் கடந்த 13.05.2025 அன்று கோயம்புத்தார் மகளிர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்தவழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளித்தது மட்டுமல்லாமல் நீதிமன்ற விசாரணைக் குழு ஒத்துழைப்பும் அளித்ததன் அடிப்படையிலேயே இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது. அத்தகைய நியாயத்திற்காக துணிச்சலுடன் போராடிய பெண்களின் தைரியம் பாராட்டுக்குரியது. அந்த வகையில், நீதிமன்றம் உத்தரவிட்ட மொத்த நிவாரணத் தொகையாகிய ரூ.85 லட்சத்திற்கும் கூடுதலாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் என நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
    • மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து ஏராள–மானோர் கலந்து கொள்வது.

    சீர்காழி:

    சீர்காழியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார்.

    மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிங்காரவேல், மோகன், குமார், சீர்காழி மேற்கு ஒன்றிய செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி நகர செயலாளர் ரஞ்சித் குமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ரமேஷ் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து பேசினார்.

    மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அரசை வலியுறுத்துவது, வருகிற 27ஆம் தேதி தஞ்சையில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல். ஏ. தலைமையில் நடைபெறும் மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து ஏராளமானோர் கலந்துக் கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் ஒன்றிய செயலா–ளர்கள் செல்வகுமார், வேலுமணி மற்றும் நிர்வா–கிகள் ஆகாஷ், சக்திவேல், மணிவண்ணன், ராஜதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றார்.

    முடிவில் நகர இளைஞரணி தலைவர் சந்தோஷ்குமார் நன்றி கூறினார்.

    • மயிலாடுதுறை மாவட்டம், கடலூர் கடலோர பகுதிகளில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது.
    • முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்து முடித்தபின் நிவாரண தொகை விவரம் அறிவிக்கப்படும்.

    தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்களை சந்தித்த அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டம், கடலூர் கடலோர பகுதிகளில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும். முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்து முடித்தபின் நிவாரண தொகை விவரம் அறிவிக்கப்படும்.

    வீடுகளில் தண்ணீர் புகுந்தால் ரூ.4800 வழங்கப்படும் என ஏற்கெனவே விதி உள்ளது. இதேபோல், பசு, எருமைகள் உயிரிழந்தால் ரூ.30 ஆயிரம் நிவராணம் வழங்கவும் விதி உள்ளது.

    மழையால் குடிசை முழுவதுமாக இடிந்திருந்தால் ரூ.5,000 வழங்கப்படும். தமிழகத்தில் மழை பாதிப்புகளால் கடந்த சில நாட்களில் 2 பேர் இறந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விடுதலை செய்யப்பட்ட 7 பேருக்கும் தலா ரூ.50 லட்சம் நிவாரண தொகையை அரசு வழங்க வேண்டும் என்று அ.தி.ம.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
    • 31 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட நெடிய சட்ட போராட்டத்திற்கு விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    மதுரை

    அ.தி.ம.மு.க. பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்று 31 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட நெடிய சட்ட போராட்டத்திற்கு பின் 7 தமிழர்களும் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள், இதனை உலகத் தமிழினமே கொ ண்டாடி மகிழ்கிறது,

    7தமிழர்களின் விடுதலைக்காக மனித நேய ஆர்வலர்கள், அனைத்து தரப்பு மக்களும் போராடி இருக்கிறார்கள். அவர் களுக்காக அ.தி.ம.மு.க. சார்பில் என் நெஞ் சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,

    முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 7தமிழர்களின் விடுதலையை சட்டப் போராட்டம் மூலம் நிறை வேற்றி இருக்கும் திமுக அரசை பாராட்டுகிறோம்.

    இந்நிலையில் 32 ஆண்டு களாக இளமையையும், வளமையையும் சிறையி லேயே கழித்து விட்டு வெளியில் வந்திருப்ப வர்களுக்கு இளமையை நம்மால் திரும்பித் தர முடியாது, வளமையை நம்மால் உருவாக்க முடியும், இவர்களின் எதிர்கால நலன் கருதி 7பேருக்கும் தலா 50 லட்ச ரூபாய் நிதி அளித்திட தமிழக அரசையும், முதல்வரையும் கேட்டுக்கொள்கிறேன்,

    தமிழகத்திலேயே 7 பேரும் வாழ விரும்பினால் ஒன்றிய அரசிடம் வற்புறுத்தி இந்திய குடிமகன்களாக வாழ சட்ட வழிவகை செய்திட மாநில அரசை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்

    • பல நூறு ஏக்கரில் நடவு செய்திருந்த சம்பா நாற்றுகள் அழுகும் நிலை.
    • பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை கணக்கீட்டு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்.

    மெலட்டூர்:

    கொத்தங்குடி அருகே தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய வேளாண்மை கூடுதல் இயக்குனர் மத்திய திட்டம், துணை இயக்குனர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கொத்தங்குடி அருகே உள்ள உதாரமங்களம் பகுதியில் சம்பா பருவத்தில் தெளிப்பு மற்றும் நடவு செய்திருந்த சம்பா பயிர்கள் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் வயல்களில் மழைநீர் தேங்கி பல நூறு ஏக்கரில் நடவு செய்திருந்த சம்பா நாற்றுகள் முற்றிலும் அழுகி போகும் அபாய நிலை ஏற்பட்டது.

    இது குறித்த செய்தி மாலைமலரில் செய்தி வெளிவந்திருந்தது.

    இதன் எதிரொலியாக மத்திய வேளாண்மை கூடுதல் இயக்குனர் மத்திய திட்டம், சென்னை, துணை இயக்குனர்ஆ கியோர் தலைமையிலான வேளாண்மைத்துறை உயர்அதிகாரிகள் உதா ரமங்கலம் பகுதிக்கு விரைந்தனர்.

    அங்கு தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை நேரில் பார்வையிட்டனர்அப்போது விவசாயிகள் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை கணக்கீட்டு நிவாரனம் வழங்க வேண்டு மென வலியுறுத்தினர்.

    உடன் கொத்தங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பழனி, மற்றும் உரங்கள் சென்னை, தஞ்சை வேளாண்துறை இணை இயக்குனர், துணை இயக்குனர் உள்பட வேளாண்மைதுறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • அரசு கடன் தள்ளுபடி, நிவாரணம் போன்ற உதவிகளால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
    • குத்தகை தொகையை கேட்டு பெறாமல் திடீரென ஏலம் அறிவித்திருப்பது குத்தகை உரிமை சட்டடத்திற்கு எதிரானது.

    நாகப்பட்டினம்:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான குத்தகை நிலங்களை அப்பகுதி விவசாயிகள் பரம்பரையாக சாகுபடி செய்து வருகின்றனர்.

    பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் சாகுபடி செய்த பயிர் பாதித்து உரிய குத்தகை செலுத்த முடியாத சூழலில் அரசு கடன் தள்ளுபடி, நிவாரணம் போன்ற உதவிகளால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில்,விவசாயிகள் கோவில் நிர்வாகத்திடம் குத்தகை செலுத்தி வரும் நிலையில் திடீரென அறநிலையத்துறை அதிகாரிகள் நவம்பர் 18-ம் தேதி ஏலம் விடப்படுவதாக பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

    இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், நாகை நாடாளு மன்ற உறுப்பினர் செல்வராசு,
    திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர், மற்றும் தமிழ்நாடு கோவில்மனை குடியிருப்போர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்டோர் நாகை இந்து சமய அற நிலையத்துறை இணை ஆணையரை சந்தித்து நேரில் நிலத்தை ஏலம் விடும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைள் அடங்கிய மனு அளித்தனர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாகை எம்.பி. செல்வராசு கூறுகையில்; குத்தகையை முடிந்த அளவுக்கு கட்டுவதற்கு விவசாயிகள் தயாராக உள்ள நிலையில், தற்சமயம் சாகுபடி செய்து வரும் நிலத்தை குத்தகை தொகையை கேட்டு பெறாமல் திடீரென ஏலம் அறிவித்திருப்பது குத்தகை உரிமை சட்டடத்திற்கு எதிரானது என்று கூறினார்.

    எனவே, தமிழக அரசு தலையிட்டு ஏலத்தை தடுத்து நிறுத்தி உரிய குத்தகை பெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என நாகை எம்.பி. செல்வராசு கோரிக்கை வைத்துள்ளார்.

    • 40 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி நேரடி, விதைப்பு பயிர்கள் முற்றிலும் சேதம்.
    • விவசாய தொழிலாளர்கள் ஏழை குடும்பங்களுக்கு மழை நிவாரணம் ரூ. 10ஆயிரம்.

    சீர்காழி:

    கனமழை பாதித்த சீர்காழி பகுதியை தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் முதல்வரிடம் நேரில் கோரிக்கை மனு அளித்தார்.

    அதில் கூறியிருப்பதாவது, கனமழையால் சீர்காழி வட்டாரத்தில் 40ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி நேரடி, விதைப்பு பயிர்கள் முற்றிலும் சேதம் ஏற்பட்டுள்ளது.2021 - 22 பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீடு கிடைக்கவில்லை.

    பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் நிவாரண தொகை வழங்குவதுடன் 100சதவீதம் மானியத்தில் உரம் வழங்கிடவேண்டும்.

    2022 - 23 பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு கிடைத்திட உத்திரவாதம் அளித்திடவேண்டும்.சிறப்பு திட்டத்தின்கீழ் அனைத்து பாசன வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி கரைகளை பலப்படுத்திடவேண்டும், விவசாய தொழிலாளர்கள் ஏழை குடும்பங்களுக்கு மழைநிவாரணம் ரூ.10ஆயிரம் வழங்கிடவேண்டும், மழையால் சேதம்அடைந்த கிராமப்புற, நகர்புற சாலைகளை உடனடியாக செப்பனிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மார்த்தாண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாலதி மின்னல் தாக்கி உயிரிழந்தார்
    • தமிழக அரசின் நிவாரண நிதி ரூ.4 லட்சத்திற்க்கான காசோலையை வழங்கினர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மனைவி மாலதி (வயது 47) கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாயப் பணியை முடித்துவிட்டு மார்த்தா ண்டம்பட்டி கிராமத்திற்கு இடையே பாலத்தின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் மின்னல் தாக்கியது.இதில் மாலதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இச்சம்பவம் அறிந்த நேரடியாக அவரது இல்லத்திற்கு சென்று மார்க்கண்ேடயன் எம்.எல்.ஏ. குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். மேலும் தமிழக அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணம் அளிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

    இந்நிலையில் அமைச்சர் கீதாஜீவன், மார்கண்டேயன் எம்.எல்.ஏ., கலெக்டர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் அவரது வீட்டிற்கு நேரில் சென்று உயிரிழந்த மாலதி குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். மேலும் தமிழக அரசின் நிவாரண நிதி ரூ.4 லட்சத்திற்க்கான காசோலையை வழங்கினர்.

    குடும்பத்தார் தரப்பிலும் தனது மகள்களுக்கு அரசு வேலை வழங்கிட கோரிக்கை விடுத்தனர்.

    உயிரிழந்த மாலதிக்கு தங்கப்பிரகாஷ் (24) என்ற மகனும், தங்கமாரி (22), கன்னிகா (18) என்ற 2மகள்களும் உள்ளனர்.

    நிகழ்ச்சியில் கோவில் பட்டி வருவாய் கோட்டா ட்சியர் மகா லட்சுமி, விளா த்தி குளம் வட்டாட்சியர் சசிக்குமார், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்புராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் நகர செயலாளர்

    வேலுச்சாமி, மாவட்ட குழு உறுப்பினர் ஞானகுருசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ், மார்த்தா ண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முனியம்மாள் முத்து கரும்புலி, குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 250 பேருக்கு உணவு பொருட்கள், அரிசி, காய்கறி, பிஸ்கட், மற்றும் நிதி உதவி வழங்கினார்.
    • நிழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வர்த்தக அணி மாநில துணை செயலாளர் விஜய ரெங்கன் தலைமை வகித்தார்.

    சீர்காழி:

    சீர்காழி பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் மழை நீர் வீடுகளை சூழ்ந்து, பாதிக்கப்பட்ட பனங்காட்டு தெரு இணாம் குனதலப்பாடி, எலுமிச்சங்குடி, மேல தெரு திருநகரி அம்பேத்கர் நகர், உள்ளிட்ட பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வர்த்தக அணி மாநில துணை செயலாளர் விஜய ரெங்கன் தலைமை வகித்து பாதிக்கப்பட்ட 250 பேருக்கு உணவு பொருட்கள், அரிசி, காய்கறி, பிஸ்கட், மற்றும் நிதி உதவி வழங்கினார்.

    மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அப்துல் ரஹூப் நிர்வாகிகள் சிவா, யுவராஜ், ஆசிரியர்கள் பிரபு, தமிழரசன், ராஜா, ரஞ்சித் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • ரூ.1000 நிவாரணம் என்பது உயர்ந்து வரும் விலைவாசிகளுக்கு ஏற்ப சரியான தொகையில்லை.
    • விவசாய நிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 35 ஆயிரம் வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட த்தில் கடந்த 10-ம் மற்றும் 11ம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒரு லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. பல்லாயிரம் குடியிருப்புகள் தண்ணீரில் தத்தளித்தது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி, இரண்டு தாலுகாவுக்கு மட்டும் தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் நிவாரணம் வழங்க வேண்டும் வெறும் ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்பது உயர்ந்து வரும் விலைவாசிகளுக்கு ஏற்ப சரியான தொகையில்லை. நிவாரணத்தை வீடுகளுக்கு பத்தாயிரம் ரூபாயாகவும் விவசாய நிலங்களுக்கு ஹெக்டேருக்கு 35 ஆயிரம் ரூபாயாகவும் வழங்க வேண்டும்.

    என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம், டெல்டா விவசா யிகள் பாசனதாரர் சங்கம், வீரசோழன் விவசா யிகள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், உள்ளிட்ட விவசாயிகள் சங்கங்கள், விவசாயிகள் பங்கேற்று மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுப ட்டனர்.

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்அலுவலகத்தின் எதிரே கண்டன கோஷங்க ளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் விவசாயிகள் ஊர்வலமாக மனு அளிக்க சென்றனர்.

    மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர், தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலாஜி விவசாயிகளிடம் மாவட்ட கலெக்டர் அலுவலக வாசலில் வைத்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    • சுந்தரமூர்த்தி என்பவரது குடிசை வீடு எதிர்பாராத விதமாக தீப்பிடித்து எரிந்து சேதமானது.
    • தீ விபத்து நடந்த இடத்தை துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தாலுகா ராமாபுரம் சரகம் 35 திருவேதுகுடி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரது குடிசை வீடு எதிர்பாராத விதமாக தீப்பிடித்து எரிந்து சேதமானது. இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்தது.

    இந்த நிலையில் தீ விபத்து நடந்த இடத்தை துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு சுந்தரமூர்த்திக்கு ஆறுதல் கூறினார். மேலும் அரசால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்த நிகழ்வில் தஞ்சாவூர் தாசில்தார் சக்திவேல், ராமாபுரம் சரக வருவாய் ஆய்வாளர் மற்றும் திருவேணிகுடி கிராம நிர்வாக அலுவலர் உடன் இருந்தனர்.

    ×