search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்னைக்கு மாற்றாக பழப்பயிர் சாகுபடியில் ஆர்வம் காட்டும் உடுமலை விவசாயிகள்
    X

    கோப்பு படம்.

    தென்னைக்கு மாற்றாக பழப்பயிர் சாகுபடியில் ஆர்வம் காட்டும் உடுமலை விவசாயிகள்

    • பிரதான சாகுபடியாக தென்னை 18,252 ெஹக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • பழப்பயிர் சாகுபடியில், ஈடுபடும் விவசாயிகளுக்கு துறை சார்பில் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

    உடுமலை:

    உடுமலை வட்டாரத்தில் விளைநிலங்களில் கிணறு மற்றும் போர்வெல் அமைத்து பல ஆயிரம் ெஹக்டேரில், நீண்ட கால பயிரான தென்னை மற்றும் இதர காய்கறி சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.அவ்வகையில் உடுமலை வட்டாரத்தில் பிரதான சாகுபடியாக தென்னை 18,252 ெஹக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னைக்கு அடுத்தபடியாக காய்கறி சாகுபடி பரப்பு இந்த வட்டாரத்தில் அதிகமுள்ளது.

    குறிப்பாக ஆண்டு முழுவதும் தக்காளி, கத்தரி, பச்சை மிளகாய் சாகுபடியாகிறது. மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய தக்காளி உற்பத்தியில் உடுமலை வட்டாரம் முன்னிலை வகிக்கிறது.கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 171 ெஹக்டேர் பரப்பில் தக்காளி சாகுபடிக்கு நாற்று நடவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக சின்னவெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் நடவு செய்துள்ளனர்.இவ்வாறு காய்கறி சாகுபடி ஆதிக்கம் செலுத்தி வந்த பகுதியில் தற்போது படிப்படியாக பழப்பயிர் சாகுபடி பரப்பு மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது.காய்கறி சாகுபடியில் நடவு, களையெடுத்தல், மருந்து தெளித்தல், குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை அறுவடை என தொழிலாளர்கள் தேவை அதிகமாகும்.

    சீசன் சமயங்களில் போதிய தொழிலாளர்கள் கிடைக்காமல் பல்வேறு பணிகள் பாதித்து விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர். அறுவடையின் போது விலை வீழ்ச்சி ஏற்பட்டு நஷ்டத்தை சந்திக்கின்றனர்.

    எனவே மாற்றி யோசிக்க துவங்கியுள்ள விவசாயிகள், தற்போது பழப்பயிர் சாகுபடியில் ஈடுபட துவங்கியுள்ளனர்.அவ்வகையில் உடுமலை வட்டாரத்தில் மா சாகுபடி, 690 ெஹக்டேர், மரநெல்லி 82.68, கொய்யா 31.38,சப்போட்டா 25.98, மாதுளை 2.69, எலுமிச்சை 10;48, பேரீட்சை 2.69 என 962 ெஹக்டேர் பழங்கள் உற்பத்திக்கான செடி மற்றும் மரங்கள் சாகுபடி செய்யப்பட்டு பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இச்சாகுபடி பரப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    பழப்பயிர் சாகுபடிக்கு தொழிலாளர் தேவை குறைவு. சொட்டு நீர் பாசனம் அமைத்துக்கொள்வதால் தண்ணீரை சிக்கனப்படுத்துவதுடன் எளிதாகவும் பாய்ச்சி க்கொள்ளலாம். சந்தை வாய்ப்புகளை உள்ளூரிலேயே ஏற்படுத்திக்கொடுத்தால் இன்னும் பழப்பயிர் சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என்றனர்.

    உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகனரம்யா கூறுகையில், பழப்பயிர் சாகுபடியில், ஈடுபடும் விவசாயிகளுக்கு துறை சார்பில் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

    மேலும் அரசின் சிறப்புத்திட்டங்களின் கீழ் தோட்டக்கலைத்துறை நாற்றுப்பண்ணை வாயிலாக விவசாயிகளுக்கு நாற்றும் வினியோகிக்கப்பட்டு வருகிறது என்றார்.தென்னைக்கு மாற்றாக

    பழப்பயிர் சாகுபடியில் ஆர்வம் காட்டும் உடுமலை விவசாயிகள்

    Next Story
    ×