search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரக்கு வாகனம்"

    • நின்ற லாரி மீது சரக்கு வாகனம் மோதியதால் மகன் கண் முன்பு தந்தை பலியானார்.
    • அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் காளாப்பூர் அருகே சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியது.

    சிங்கம்புணரி

    மதுரை சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது (வயது45). இவரது மகன் ரியாஸ் (17). இருவரும் சந்தையில் வெள்ளைபூண்டு வியாபாரம் செய்து வருகின்றனர். வாரச்சந்தைகளில் இருவரும் சரக்கு வாகனத்தில் பொருட்களை ஏற்றிக்கொண்டு வியாபாரம் செய்வது வழக்கம். காரைக்குடியில் நடந்த சந்தை வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு 10 மணி அளவில் இருவரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.வி.மங்கலம் அருகே உள்ள காளாப்பூரில் விறகு ஏற்றிய லாரி சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தது. சரக்கு வாகனத்தில் வியாபாரத்தை முடித்துவிட்டு சாகுல் அமீது மகனுடன் மதுரைக்கு வந்து கொண்டிருந்தார். சரக்கு வானத்தை ரியாஸ் ஓட்டினார். அதி வேகமாக வந்த சரக்கு வாகனம் காளாப்பூர் அருகே சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சாகுல் அமீது இறந்தார். தனது கண் முன்னே நடந்த இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரியாஸ் செய்வதறியாமல் தப்பினார். தகவலறிந்த எஸ்.வி.மங்கலம் காவல் நிலைய போலீசார் தலைமறைவான ரியாசை தேடி வருகின்றனர். ரியாஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தகுதி இல்லாத வயதில் சரக்கு வாகனத்தை ஓட்டி தந்தையை காவு வாங்கிய ரியாஸ் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    • சிவகங்கை அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
    • சரக்கு வாகனத்தின் டயர் வெடித்து வாகனம் ரோட்டில் கவிழ்ந்தது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சீரணி அரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தினசரி மதுரையிலிருந்து திருப்பத்தூருக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் பர்னிச்சர், பெயிண்ட், ஆட்டோ மொபைல், எலக்ட்ரிகல்ஸ், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை ரெகுலர் சர்வீஸ் செய்யும் சரக்கு வாகன ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் இரவு மதுரையிலிருந்து சரக்குகளை ஏற்றி கொண்டு நேற்று காலை 6.30 மணி அளவில் மதுரையில் இருந்து திருப்பத்தூருக்கு வரும் வழியில் கருப்பூர் அருகே வேட்டங்குடி பட்டி பறவைகள் சரணாலயம் பகுதியில் சரக்கு வாகனத்தின் டயர் வெடித்து வாகனம் ரோட்டில் கவிழ்ந்தது.

    இதில் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக டிரைவர் ராஜா உயிர் தப்பினார். இதனை கண்ட பொதுமக்கள் திருப்பத்தூர் நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இனஸ்பெக்டர் சுந்தர மகாலிங்கம், திருப்புத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் ஆனந்த் சுப்பிரமணியம் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரக்கு வாகனத்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    மேலும் விபத்தில் காயமடைந்த டிரைவர் ராஜாவை போலீசார் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

    • தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
    • குடித்துவிட்டு போதையில் பயணிகள் அமரும் இடங்களில் அலங்கோலமாக படுத்து விடுகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது.விசைத்தறி மற்றும் கறிக்கோழி உற்பத்தி உள்ளிட்ட தொழில்கள் வளர்ச்சி காரணமாக மக்கள்தொகைப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில் கோவை, திருச்சி, உடுமலை, பொள்ளாச்சி, மதுரை,போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேலை, கல்வி, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் சமீபகாலமாக பஸ் நிலையத்தில் குடிமகன்கள் தொல்லை நாளுக்கு,நாள் அதிகரித்து வருகிறது. குடித்துவிட்டு போதையில் பயணிகள் அமரும் இடங்களில் அலங்கோலமாக படுத்து விடுகின்றனர். மேலும் தகாத வார்த்தைகளில்,கத்திக்கொண்டு இருப்பதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண் பயணிகள் அச்சம் அடைகின்றனர். எனவே போலீசார் பஸ் நிலையத்தில் அடிக்கடி ரோந்து பணிகளை மேற்கொண்டு போதை ஆசாமிகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பல்லடம் பஸ் நிலையத்தில் சரக்கு வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக பஸ் ஓட்டுநர்கள் கூறியதாவது:-பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. சனி, ஞாயிறு, திங்கள், ஆகிய 3 நாட்கள் அதிகளவிலான பஸ்கள், பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லும், இந்த நிலையில் திங்கட்கிழமையில் பல்லடம் வாரச்சந்தை நடைபெறுகிறது. அதற்கு காய்கறிகள், மற்றும் சரக்கு கொண்டுவரும் வாகனங்கள் பஸ் நிலையத்திற்கு உள்ளே நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்களை, நிறுத்துவதற்கு இடம் இல்லாமலும், பஸ்களை ஓட்டுவதற்கு, இடையூறாகவும் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம், பஸ் நிலையத்திற்குள், திங்கட்கிழமைகளில் சரக்கு வாகனங்களை அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சரக்கு வாகனம் திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் டிரான்ஸ்பர்மர் மீது மோதியது.
    • சிறு காயத்துடன் டிரைவர் மற்றும் கிளினர் உயிர்தப்பினர்.

    அம்மாபேட்டை:

    தஞ்சை மாவட்டம் களஞ்சேரி பகுதியில் பாபநாசம்-சாலியமங்கலம் நெடுஞ்சாலையில் நேற்று இரவு கோழி ஏற்றி சென்ற சரக்கு வாகனம் திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் டிரான்ஸ்பர்மர் மீது மோதியது.

    இதில் மின்கம்பங்கள் சேதமடைந்ததால் உடனடியாக மின்தடை ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக அதிர்ஷ்வசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.சிறு காயத்துடன் டிரைவர் மற்றும் கிளினர் உயிர்தப்பினர். இந்த விபத்து குறித்து போலீசார் மற்றும் மின்வாரியத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×