சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து

சிவகங்கை அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. சரக்கு வாகனத்தின் டயர் வெடித்து வாகனம் ரோட்டில் கவிழ்ந்தது.
சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து
Published on

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சீரணி அரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தினசரி மதுரையிலிருந்து திருப்பத்தூருக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் பர்னிச்சர், பெயிண்ட், ஆட்டோ மொபைல், எலக்ட்ரிகல்ஸ், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை ரெகுலர் சர்வீஸ் செய்யும் சரக்கு வாகன ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் இரவு மதுரையிலிருந்து சரக்குகளை ஏற்றி கொண்டு நேற்று காலை 6.30 மணி அளவில் மதுரையில் இருந்து திருப்பத்தூருக்கு வரும் வழியில் கருப்பூர் அருகே வேட்டங்குடி பட்டி பறவைகள் சரணாலயம் பகுதியில் சரக்கு வாகனத்தின் டயர் வெடித்து வாகனம் ரோட்டில் கவிழ்ந்தது.

இதில் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக டிரைவர் ராஜா உயிர் தப்பினார். இதனை கண்ட பொதுமக்கள் திருப்பத்தூர் நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இனஸ்பெக்டர் சுந்தர மகாலிங்கம், திருப்புத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் ஆனந்த் சுப்பிரமணியம் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரக்கு வாகனத்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

மேலும் விபத்தில் காயமடைந்த டிரைவர் ராஜாவை போலீசார் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com