search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோஷங்கள்"

    • விழிப்புணர்வு பேரணி நடைபெற்று சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
    • மாணவர்கள் பங்கேற்று முக்கிய வீதிகளின் வழியாக கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியும், ரோட்டரி கிளப் ஆப் சீர்காழி டெம்பிள் டவுன், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் இணைந்து பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதை எதிர்த்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.சங்கத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    முகாம் அலுவலர் முரளிதரன், டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்தினுடைய முன்னாள் தலைவர்கள், மற்றும் முன்னாள் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், என். எஸ்.எஸ் மாணவர்கள் பங்கேற்று முக்கிய வீதிகளின் வழியாக கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.

    முன்னதாக பொருளாளர் வினோத் வரவேற்றார்.நிறைவில் செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.

    • ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணைத் தலைவர் தேவ், முன்னாள் எம்.எல்.ஏ., வேலா யுதம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் வினோத், சுரேஷ், மாநகரப் பார்வை யாளர்கள் அஜித் குமார், நாக ராஜன், பிரசார அணி செயலாளர் எஸ். எஸ். மணி, மாநகராட்சி கவுன்சிலர்கள் அய்யப்பன் ,சுனில், வீரசூர பொருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    • மாவட்ட பொதுச்செய லாளர் ஜெகநாதன் நன்றி கூறி னார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    நாகர்கோவில், அக். 27-

    தி.மு.க. அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பொன்.ராதாகிருஷ்ணன்

    குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பி னர் பொன்ரத்தினமணி முன்னிலை வைத்தார்.

    முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க. அரசு தமிழுக்கும் தமிழர்களுக்கும் துரோகம் செய்து வருகிறது. 1967-ம் ஆண்டு தமிழை சொல்லி தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தனர். 50 ஆண்டு காலமாக தி.மு.க. ஆட்சி செய்துள்ளது. உலக அளவில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆராய்ச்சிக்கு என்று ஒரு இருக்கை அமைக்க தி.மு.க. நடவடிக்கை எடுக்கவில்லை.

    ஆனால் பிரதமர் மோடி காசி பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று தனி இருக்கை அமைத்து தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார். இன்று 3 நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக இருந்து வருகிறது.

    உலகத்திலேயே பழமை யான மொழி தமிழ் மொழி என்று பிரதமர் மோடி கூறினார். சமஸ்கிருதத்தை விட தமிழ் மொழி பழமை யான மொழி என்று அவர் கூறியுள்ளார்.ஆனால் இங்குள்ள தி.மு.க.விற்கு தமிழைப் பற்றி எந்த கவலையும் இல்லை.

    துரோகம்

    இலங்கையில் தமிழர்கள் பலர் படுகொலை செய்யப் பட்டனர். ஆனால் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் கைகுலுக்கியவர்கள் தான் தி.மு.க.,-காங்கிரஸ் எம்.பி., க்கள். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    இது தமிழக மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம் ஆகும். குமரி மாவட்டத்தில் எதை வேண்டுமானாலும் அரசியலாக்க வேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது. அது மோச மான விளைவுகளை ஏற்ப

    டுத்தும்.

    குமரி மேற்கு மாவட்ட த்தில் மாணவர் ஒருவர் குளிர்பானத்தில் ஆசிட் கலந்து குடித்த பள்ளியை மீண்டும் திறந்து செயல்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள மாண வர்கள் தொடர்ந்து அங்கு கல்வி கற்க வேண்டும்.

    குரல் கொடுப்போம்

    தமிழை விட்டுக் கொடுக்க நாம் தயாராக இல்லை. அது எந்த அரசாக இருந்தாலும் சரி. வேறு மொழியை திணிக்கும் நிலை ஏற்பட்டால் அதை எதிர்த்து குரல் கொடுக்கும் முதல் இயக்கமாக பாரதிய ஜனதா கட்சி இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணைத் தலைவர் தேவ், முன்னாள் எம்.எல்.ஏ., வேலா யுதம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் வினோத், சுரேஷ், மாநகரப் பார்வை யாளர்கள் அஜித் குமார், நாக ராஜன், பிரசார அணி செயலாளர் எஸ். எஸ். மணி, மாநகராட்சி கவுன்சிலர்கள் அய்யப்பன் ,சுனில், வீரசூர பொருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொதுச்செய லாளர் ஜெகநாதன் நன்றி கூறி னார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங் கள் எழுப்பப்பட்டது.

    • அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
    • பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    மதுரை

    மதுரை அண்ணா பஸ் நிலையம் திருவள்ளுவர் சிலை அருகில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. 'தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க பொதுச்செயலாளர் ஜெயராஜ ராஜேஸ்வரனுக்கு உள்நோக்கத்துடன் வழங்கப்பட்ட பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாநிலத்தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச்செயலாளர் லட்சுமிநாராயணன், மாவட்டத் தலைவர் நடராஜன், செயலாளர் சுந்தன், தமிழ்நாடு வணிகவரிப்பணியாளர் சங்க முன்னாள் மாநிலத்தலைவர் கோட்டைராசு உள்பட பலர் பங்கேற்றனர்.

    • குறைந்தபட்ச ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • தொட்டியை சுத்தம் செய்ய மாதம் ரூ. 1000 அலவன்ஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று கிராம ஊராட்சி ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை (காவலர்) பணியாளர்கள் குறைந்தபட்ச ஊதியம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    உள்ளாட்சி சங்க மாநிலக்குழு நிர்வாகி நல்மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தங்கவேல்பாண்டியன், துணை தலைவர் ஆஞ்சி, பொதுச்செயலாளர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

    சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் அரவிந்தன், மாவட்ட தலைவர் கண்ணன், பொருளாளர் கவுரி, துணை செயலாளர்கள் பொன்ராஜ், காளிராஜன் மற்றும் மணவாளன், ஆண்டவர், சேதுராமு, பூமிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ஊராட்சி ஊழியர்களான ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள் ஓய்வு பெறும்போது பணிக்கொடை, ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும், ஓ.எச்.டி. ஆபரேட்டர்களுக்கு ரூ.1,400 ஊதிய உயர்வு அரசாணையை திருத்தம் செய்து வெளியிட வேண்டும்.

    7-வது ஊதியக்குழு நிலுவை ஊதியம் 55 மாதங்களாகியும் வழங்கப்படவில்லை. அதை உடனே வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான ஊதியத்தை ஓ.எச்.டி. ஆபரேட்டர்களுக்கு நிர்ணயம் செய்ய வேண்டும்.

    தூய்மை காவலர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 600 ஊதியத்தை உயர்த்தி, ஊராட்சிகள் மூலமாக நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொட்டியை சுத்தம் செய்ய மாதம் ரூ. 1000 அலவன்ஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டன.

    • ரெயில் மறியல் போராட்டத்தை கைவிட்டு விட்டு மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ரெயில்வே பாலம் கட்ட வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர். மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    நாகர்கோவில்:

    இரணியல் அருகே வடக்கு பேயன்குழி பகுதியில் உடனடியாக ரெயில்வே பாலம் கட்ட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் லெனிஸ்டு (விடுதலை) சார்பில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் 7-ந் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி முத்து தலைமையில் ஏராள மான நிர்வாகிகள் ரெயில் நிலையத்தில் திரண்டனர்.

    முன்னதாக ரெயில் மறியலில் ஈடுபட முயல்ப வர்களை தடுப்பதற்காக ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ரெயில்வே இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா, கோட்டார் இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையில் 50-க் கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    எனினும் தடையை மீறி மறியல் போராட்டம் நடத்துவதற்காக மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் ஊர்வலமாக வந்தனர்.

    அவர்களை ரயில் நிலையத்துக்குள் செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து ரெயில் மறியல் போராட்டத்தை கைவிட்டு விட்டு மார்க்சிஸ்ட் லெனி னிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது ரெயில்வே பாலம் கட்ட வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர். மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதனால் ரெயில் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    ×