என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்நடத்தினர்.
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
- பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மதுரை
மதுரை அண்ணா பஸ் நிலையம் திருவள்ளுவர் சிலை அருகில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. 'தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க பொதுச்செயலாளர் ஜெயராஜ ராஜேஸ்வரனுக்கு உள்நோக்கத்துடன் வழங்கப்பட்ட பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாநிலத்தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச்செயலாளர் லட்சுமிநாராயணன், மாவட்டத் தலைவர் நடராஜன், செயலாளர் சுந்தன், தமிழ்நாடு வணிகவரிப்பணியாளர் சங்க முன்னாள் மாநிலத்தலைவர் கோட்டைராசு உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story






