search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் திருவிழா"

    • பெரியாண்டவர் சாமி கரகம் ஜோடிக்கப்பட்டு, வான வேடிக்கையுடன், அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் பில்லம நாயக்கன்பட்டி அருகே கஸ்தூரி நாயக்கன்பட்டி உள்ளது. இங்கு பெரி யாண்டவர்,கஸ்தூரி அம்மன், முனிசாமி ஆகிய கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களில் 12ஆண்டு களுக்கு பிறகு ஆடி திருவிழா நடைபெற்றது.

    கடந்த 1ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. செவ்வாய்க்கிழமை பெரியாண்டவர் சாமி கரகம் ஜோடிக்கப்பட்டு, வானவேடிக்கையுடன், அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கதிர் நரசிங்க பெருமாளுக்கு பொங்கல் வைத்து அபிஷேக ஆரா தனை மற்றும் முனிசாமி கோவிலில் பொங்கல் வைத்து கிடா வெட்டி அபி ஷேக ஆராதனை நடை பெற்றது.

    பின்னர் பெரியாண்டவர் கோவில் முன்பாக நூற்று க்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மன் ஆபரண பெட்டி, பெரி யாண்டவர் கரகம், முளைப்பாரி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அருகே உள்ள கங்கையில் விடப்பட்டது. இதில் நூற்று க்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா விற்கான ஏற்பாட்டினை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • எம்.கே. நகர் கிருஷ்ணாபுரம் பகுதியில் சக்தி மாரியம்மன் கோவில் கூழ் ஊற்றும் திருவிழா நடைபெற்றது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பரசு, விக்னேஷ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள எம்.கே. நகர் கிருஷ்ணாபுரம் பகுதியில் சக்தி மாரியம்மன் கோவில் கூழ் ஊற்றும் திருவிழா நடைபெற்றது.

    அதேபகுதியை சேர்ந்த தொழிலாளி பிரதாப் (வயது 30), அன்பரசு(20), விக்னேஷ் (19), சசிகுமார் (21) ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. வின்னேஷ் தரப்பினர் பிரதாப்பை தாக்கினர்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பரசு, விக்னேஷ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

    • விருதுநகர் அருகே கோவில் திருவிழாவில் பந்தலுக்கு தீ வைக்கப்பட்டது.
    • கட்டனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள உளுத்தி மடை ஊராட்சிக்கு உட்பட்ட பி.வாகைக்குளம் கிராமத்தில் பிறைவுடைய அய்யனார், சுந்தரவள்ளி அம்மன் கோவில் கும்பாபி ஷேகம் கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி நடைபெற்றது.

    48 நாட்கள் மண்டல பூஜை விழாவையொட்டி கோவில் பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டு அன்ன தானம் நடந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த கிடாய் வெட்டும் நிகழ்ச்சிக்கு பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    மேலும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று அன்னதான விருந்திற்காக போடப் பட்ட பந்தல் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது.

    இந்த தீ மள மளவென கொட்டகை முழுவதும் எரிந்து நாசமானது. இதனையடுத்து அன்னதான பந்தலுக்கு மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் கட்டனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளவட்டக்கல்லை தூக்கும் போட்டியில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
    • கைத்தட்டி பார்த்த பொதுமக்கள் ஆரவாரம் செய்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அகரம் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்று வருகிறது.

    விழாவையொட்டி உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

    கயிறு இழுக்கும் போட்டி, இசை நாற்காலி, உறியடி மற்றும் இளவட்ட கல் தூக்கும் போட்டி நடத்தப்பட்டது.

    இதில் ஏராளமான கிராம இளைஞர்களும், இளம் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இளவட்டக்கல்லை தூக்கும் போட்டியில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டியை காண குழுமியிருந்த இளம் பெண்கள் முன்பு இளை ஞர்கள் இளவட்ட கல்லை தூக்கி ஆர்ப்பரித்தனர். இதனை கைத்தட்டி பார்த்த பொதுமக்கள் ஆரவாரம் செய்தனர். 

    • திருவிழா கடந்த 7 ஆம் தேதி பொன்னியம்மன் கோவிலுக்கு கரகம் எடுத்தல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது.
    • 8-ஆம் தேதி அம்மன் ஊர்வலம் மற்றும் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சி நடந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே இலளிகம் கிராமத்தில் குறிஞ்சி மாரியம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவில் திருவிழா கடந்த 7 ஆம் தேதி பொன்னியம்மன் கோவிலுக்கு கரகம் எடுத்தல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது.

    தொடர்ந்து பால்குட ஊர்வலம் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது, 8-ஆம் தேதி அம்மன் ஊர்வலம் மற்றும் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவின் முக்கிய நாளான நேற்று பம்ப வாத்தியங்கள் வானவேடிக்கை முழங்க, குறிஞ்சி மாரியம்மனுக்கு, பல்வேறு சமூகத்தை சேர்ந்த திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு, மாவிளக்கை ஊர்வலமாக எடுத்து சென்று அம்மனுக்கு படைத்து வழிபடும் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

    தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் மகாதீபாரதனை நிகழ்ச்சி நடந்தது. இன்று மஞ்சள் நீராடுதல் மற்றும் எருதாட்டத்துடன் கோயில் விழா நிறைவுபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    • கோவில் திருவிழாவுக்கு வந்த வாலிபர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்த சம்பவம் அப்பகுதி மக்களி–டையே பெரும் சோகத்தை–யும், அதிர்ச்சியையும் ஏற் படுத்தியுள்ளது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள எம்.புளியங்குளம் பகுதியை சேர்ந்த ஊதாக்கட்டை (எ) ஆறுமுகம் என்பவரது மகன் அய்யனார் (வயது 22). இவர் வெளியூரில் தங்கி கொத்த–னார் வேலை பார்த்து வரு–கிறார். மேலும் இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த–தாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கோவில் திருவிழாவிற்காக தனது சொந்த ஊரான புளியங் குளம் கிராமத்திற்கு அய்ய–னார் வந்திருந்தார். திருவிழா–வையொட்டி கலை நிகழ்ச்சி முடிந்த நிலையில் நேற்று காலை அய்யனார் வெளி–யில் சென்று விட்டார்.

    இதற்கிடையே எம்.புளியங்குளம் அருகேயுள்ள மயிலி ரெயில்வே பாலத் திற்கு அடியில், மதுவில் பூச்சி மருந்தை குடித்த நிலை–யில் அய்யனார் உயிருக்கு போராடி கொண்டிருப்ப–தாக தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத் திற்கு விரைந்து சென்ற நண்பர்கள் மற்றும் உறவி–னர்கள் அவரை திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அதன்பின்னர் அங்கி–ருந்து மேல் சிகிச்சைக்காக அய்யனார் அருப்புக் கோட்டை அரசு மருத்துவ–மனைக்கு கொண்டு செல் லப்பட்டார். இருப்பினும் உடல் முழுவதும் விஷம் பரவிய நிலையில் வழியி–லேயே அய்யனார் பரிதாப–மாக உயிரிழந்தார். இதனை–யடுத்து அவரது தாய் அழகு மீனாள் கொடுத்த புகா–ரின்பேரில் வழக்குப் பதிவு செய்த திருச்சுழி போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    வெளியூரில் தங்கி கொத் தனார் வேலை பார்த்து வந்த அய்யனார் சொந்த ஊரில் மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களி–டையே பெரும் சோகத்தை–யும், அதிர்ச்சியையும் ஏற் படுத்தியுள்ளது.

    • நேர்த்திக்கடன் செலுத்தினர்
    • ஏராளமாேனார் தரிசனம் செய்தனர்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.

    இங்கு ஆடி மாதம் 3-ம் வெள்ளியை முன்னிட்டு திருவிழா நடைபெற்றது.

    முன்னதாக ஊர் பொது மக்கள் அனைவரும் தங்களது நிலத்தில் விளைந்த தானியங்களை கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு பூஜை செய்தனர்.

    அதனை தொடர்ந்து பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரி க்கப்பட்ட முத்து மாரியம்ம னுக்கு மாலை போட்டு விரதம் இருந்த பக்தர்கள் கொக்கி போட்டு ஊர்வலமா கவும், அலகு குத்தியும், தீ சட்டி எடுத்தும் மேலதாள முடன் சாமி ஊர்வலம் நடைபெற்றது.

    பின்னர் பக்தர்கள் கயிற்றில் தலை முடியை கட்டிய நிலையில் பறந்து சென்று அம்மனுக்கு மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இதில் பென்னகர் சுற்றுவட்டார பகுதிகளான மாம்பாக்கம், வேம்பி, தோனிமேடு, பாரியம ங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து,அன்னதானத்தில் கலந்து கொண்டனர்
    • இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் கணவாய் கருப்பண சுவாமி கோவிலில் ஆடி உற்சவ திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் நடந்தது.இதற்கு சாணார்பட்டி ஒன்றியம் தெற்கு மாவட்ட கவுன்சிலர் விஜயன் தலைமை தாங்கினார்.இதில் நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா,நத்தம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்மோகன்,நத்தம்தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தின குமார், கணவாய்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நிஷா ராமகிருஷ்ணன்,

    வேம்பார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி,கணவாயப்பட்டி ஊராட்சி செயலாளர் வெற்றிவேந்தன் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து,அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • 500 கிலோ தக்காளி, 5 டன் அரிசி, 8 டன் காய்கறிகளுடன் பக்தர்களுக்கு பிரமாண்ட விருந்து அளிக்கப்பட்டது.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை வணிகர் நலச்சங்க ஆடி 18 அன்னதான குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சித்தர் முத்துவடுகநாதர் கோவில் உள்ளது. மேலும் இங்கு சித்தரின் ஜீவ சமாதியும் அமைந்துள்ளது. வருடந்தோறும் ஆடி மாதம் இந்த கோவில் திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    அதன்படி நேற்று திருவிழாவை முன்னிட்டு நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. அதன்பின் ஆடி 18-ம் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சர்வ தீப ஆரத்தியுடன் அன்னதான ஏற்பாடுகள் தொடங்கின.

    இதில் 500 கிலோ தக்காளி, 5 டன் அரிசி, 8 டன் காய்கறிகள், 4டன் மளிகை பொருட்களுடன் 120 சமையல் கலைஞர்களை வைத்து பிரம்மாண்ட விருந்து தயாரிக்கப்பட்டது.

    அதன்பின் சுவாமிக்கு படையல் பூஜை நடந்தது. வடித்து கொட்டப்பட்ட பிரம்மாண்ட அன்ன குவியலில் வேல் குத்தி சிவலிங்கம் பிடித்து பூஜைகள் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதான விருந்து வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாப்பிட்டனர்.

    இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை வணிகர் நலச்சங்க ஆடி 18 அன்னதான குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • திருமங்கலத்தை அடுத்துள்ள பி.அம்மாபட்டியில் உள்ள காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
    • நள்ளிரவில் பிரியாணி தயாரான பிறகு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் சிறிய முதல் பெரிய அளவில் குலதெய்வ கோவில்கள் உள்ளன. இங்கு வருடந்தோறும் திருவிழாக்கள் நடைபெறும். அப்போது கிடாய்கள் பலியிட்டு பிரியாணி மற்றும் அசைவ விருந்து தயாரித்து பக்தர்களுக்கு பரிமாறப்படும். இதில் திரளானோர் பங்கேற்பார்கள்.

    அதன்படி திருமங்கலத்தை அடுத்துள்ள பி.அம்மாபட்டியில் உள்ள காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். நேற்று மாலை கோவில் முன்பு பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான பிரியாணி தயாரிக்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதன் பின் கோவிலுக்கு நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட கிடாய்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெட்டப்பட்டு ரத்தம் கோவில் முன்பு தெளிக்கப்பட்டது. அப்போது பலியை அம்மன் ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்.

    அதன்பின் வெட்டப்பட்ட கிடாய்கள் மூலம் 1500 கிலோ பிரியாணி தயார் செய்யப்பட்டது. இந்த பணியில் 30-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். நள்ளிரவில் பிரியாணி தயாரான பிறகு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது.

    அம்மாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பல்வேறு சமுதாய மக்கள் சாதி, மத வேறுபாடின்றி கோவில் திருவிழாவை நடத்தினர். வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை பேறு உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி கொடுக்கும் சக்தி வாய்ந்த அம்மனாக காளியம்மன் அருள்பாலிப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    • 2 தரப்பினருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு அது மோதலாக மாறியது.
    • 2 தரப்பினருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு அது மோதலாக மாறியது.

    கடலூர்:

    ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு பகுதியில் உள்ள கோவில்களில் வழிபாடு, விஷேச பூஜைகள் நடைபெற்று வந்த வண்ணம் உள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த வடக்குதிட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத வழிபாடு கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து நேற்று இரவு வடக்குதிட்டை பகுதியை சேர்ந்த சந்தோஷ் தரப்பை சேர்ந்தவர்களும் அதே பகுதியை சேர்ந்த சரண்ராஜ் தரப்பை சேர்ந்தவர்களும் கோவிலுக்கு வந்தனர். அப்போது 2 தரப்பினருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு அது மோதலாக மாறியது. இந்த மோதலில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். 

    இதை பார்த்த கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் இதுகுறித்து புவனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த மோதல் குறித்து சந்தோஷ் புவனகிரி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சரண்ராஜ், பழனிவேல், காளிதாஸ், செந்தமிழ் செல்வன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்தனர். பின்னர் சரண்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் சந்தோஷ், சக்திவேல், ஆகாஷ், சுபாஷ் ஆகியோர் மீதும் மொத்தம் இரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவிலுக்கு நேர்த்திக்கடன் வைத்திருந்த பலர் தங்கள் குழந்தையை ஏலத்தில் கொடுத்து அதனை பெற்றோர்களே வாங்கிக் கொண்டனர்.
    • சமைக்கப்பட்ட சாதம் கோவில் வளாகத்தில் உள்ள கூடத்தில் மலைபோல் குவிக்கப்பட்டு இருந்தது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறத்தில் உள்ள முத்தழகுபட்டியில் 350 ஆண்டுகள் பழமையான புனித செபஸ்தியார் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் 4 நாள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வருட திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    3-ம் நாள் திருவிழாவாக மாபெரும் அன்னதானம் நேற்று மாலை தொடங்கி விடிய விடிய நடந்து இன்று அதிகாலை நிறைவடைந்தது. செபஸ்தியாரிடம் வேண்டுதல் வைத்த பக்தர்கள் தங்களது வேண்டுதலை செபஸ்தியார் நிறைவேற்றி தந்ததை அடுத்து அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் தங்களால் முடிந்த காணிக்கையாக அரிசி, பருப்பு, ஆடு, கோழி, தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் போன்ற காய்கறிகள் மற்றும் சமையல் பொருட்கள் ஆகியவற்றை செலுத்தினர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வாக குழந்தை வரம் கேட்டு செபஸ்தியாரிடம் வேண்டுதல் வைக்கும் தம்பதியினர் அவர்களுக்கு குழந்தை பிறந்தவுடன் திருவிழாவின்போது அந்தக் குழந்தையை கோவிலில் ஒப்படைத்து விடுவார்கள். பின்னர் அந்த குழந்தை கோவில் நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்படும். அதில் கலந்து கொள்பவர்கள் குழந்தையை ஏலம் எடுத்து அதற்கான தொகையை கோவிலில் செலுத்துவார்கள். பின்னர் ஏலம் எடுத்தவரிடம் இருந்து குழந்தையின் தாய் தந்தையர் ஏலத்தொகையை கொடுத்து வாங்கி கொள்வார்கள். அது போல் கோவிலுக்கு நேர்த்திக்கடன் வைத்திருந்த பலர் தங்கள் குழந்தையை ஏலத்தில் கொடுத்து அதனை பெற்றோர்களே வாங்கிக் கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து விடிய விடிய நடந்த அன்னதானத்தில் முத்தழகுபட்டியில் உள்ள இளைஞர்கள், பெண்கள், ஆண்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் என அனைவரும் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து அன்னதானத்திற்கான காய்கறிகளை நறுக்குவது சமையல் செய்வது என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலைகளில் ஈடுபட்டனர்.

    சமைக்கப்பட்ட சாதம் கோவில் வளாகத்தில் உள்ள கூடத்தில் மலைபோல் குவிக்கப்பட்டு இருந்தது. அன்னதானத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கும் உணவை வாங்கிச் சென்றனர்.

    ×