search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளவட்ட கல்"

    • இளவட்டக்கல்லை தூக்கும் போட்டியில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
    • கைத்தட்டி பார்த்த பொதுமக்கள் ஆரவாரம் செய்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அகரம் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்று வருகிறது.

    விழாவையொட்டி உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

    கயிறு இழுக்கும் போட்டி, இசை நாற்காலி, உறியடி மற்றும் இளவட்ட கல் தூக்கும் போட்டி நடத்தப்பட்டது.

    இதில் ஏராளமான கிராம இளைஞர்களும், இளம் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இளவட்டக்கல்லை தூக்கும் போட்டியில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டியை காண குழுமியிருந்த இளம் பெண்கள் முன்பு இளை ஞர்கள் இளவட்ட கல்லை தூக்கி ஆர்ப்பரித்தனர். இதனை கைத்தட்டி பார்த்த பொதுமக்கள் ஆரவாரம் செய்தனர். 

    • வடலிவிளை கிராமத்தில் இளவட்டக்கல் தூக்கும் விளையாட்டு போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்றது.
    • ஆண்களுக்கு போட்டியாக பெண்களும் 40 கிலோ எடை கொண்ட உரலை தூக்கி போட்டு தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள வடலிவிளை கிராமத்தில் இளவட்டக்கல் தூக்கும் விளையாட்டு போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்றது.

    போட்டியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்து பேசும்போது, இளவட்ட கல் தூக்கும் போட்டியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி கவனத்திற்கு கொண்டு சென்று தமிழக விளையாட்டுகளில் எவ்வாறு கபடி, சிலம்பாட்டம் போன்ற மண்ணின் விளையாட்டுகள் தமிழக அரசு விளையாட்டாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ அதுபோல் இந்த இளவட்ட கல் தூக்குகின்ற விளையாட்டுப் போட்டியையும் நிச்சயமாக நம்முடைய தமிழக அரசு விளையாட்டிலே சேர்ப்பதற்கு நான் ஏற்பாடு செய்வேன் என்றார்.

    தொடர்ந்து இளவட்டக்கல் விளையாட்டு போட்டியில் பல இளைஞர்கள் கலந்து கொண்டனர். இளவட்ட கற்களை தூக்கி வலம் வந்து சாதனை நிகழ்த்தினர்.

    ஆண்களுக்கு போட்டியாக பெண்களும் 40 கிலோ எடை கொண்ட உரலை தூக்கி போட்டு தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தினர். உரல்களை அதிகமுறை தூக்கிபோட்ட பெண்களுக்கு சிறப்புப்பரிசும் வழங்கப்பட்டது. மேலும் பல இளைஞர்கள் உரலை ஒருகையால் தலைக்கு மேல் நீண்டநேரம் தூக்கி நிறுத்திவைக்கும் சாதனையையும் நிகழ்த்தினர். பெண்கள் உரல் தூக்கும் போட்டியில் முதல்பரிசு ராஜகுமாரியும், 2-ம் பரிசு தங்க புஷ்பம் ஆகியோர் பெற்றனர். இளவட்ட கல் 129 கிலோ கல்லை தூக்கி சாதனை படைத்த செல்லப்பாண்டி என்பவருக்கு முதல்பரிசும் அருண் வெங்கடேஷ் என்பவருக்கு இரண்டாம் பரிசும் வழங்கப்பட்டது.

    ×