என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலளிகம் கிராமத்தில் குறிஞ்சி மாரியம்மன் கோவில் திருவிழா
    X

    பெண்கள் மாவிளக்கை ஊர்வலமாக எடுத்து சென்றதை படத்தில் காணலாம்.

    இலளிகம் கிராமத்தில் குறிஞ்சி மாரியம்மன் கோவில் திருவிழா

    • திருவிழா கடந்த 7 ஆம் தேதி பொன்னியம்மன் கோவிலுக்கு கரகம் எடுத்தல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது.
    • 8-ஆம் தேதி அம்மன் ஊர்வலம் மற்றும் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சி நடந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே இலளிகம் கிராமத்தில் குறிஞ்சி மாரியம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவில் திருவிழா கடந்த 7 ஆம் தேதி பொன்னியம்மன் கோவிலுக்கு கரகம் எடுத்தல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது.

    தொடர்ந்து பால்குட ஊர்வலம் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது, 8-ஆம் தேதி அம்மன் ஊர்வலம் மற்றும் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவின் முக்கிய நாளான நேற்று பம்ப வாத்தியங்கள் வானவேடிக்கை முழங்க, குறிஞ்சி மாரியம்மனுக்கு, பல்வேறு சமூகத்தை சேர்ந்த திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு, மாவிளக்கை ஊர்வலமாக எடுத்து சென்று அம்மனுக்கு படைத்து வழிபடும் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

    தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் மகாதீபாரதனை நிகழ்ச்சி நடந்தது. இன்று மஞ்சள் நீராடுதல் மற்றும் எருதாட்டத்துடன் கோயில் விழா நிறைவுபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×