search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "feast for devotees"

    • 500 கிலோ தக்காளி, 5 டன் அரிசி, 8 டன் காய்கறிகளுடன் பக்தர்களுக்கு பிரமாண்ட விருந்து அளிக்கப்பட்டது.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை வணிகர் நலச்சங்க ஆடி 18 அன்னதான குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சித்தர் முத்துவடுகநாதர் கோவில் உள்ளது. மேலும் இங்கு சித்தரின் ஜீவ சமாதியும் அமைந்துள்ளது. வருடந்தோறும் ஆடி மாதம் இந்த கோவில் திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    அதன்படி நேற்று திருவிழாவை முன்னிட்டு நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. அதன்பின் ஆடி 18-ம் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சர்வ தீப ஆரத்தியுடன் அன்னதான ஏற்பாடுகள் தொடங்கின.

    இதில் 500 கிலோ தக்காளி, 5 டன் அரிசி, 8 டன் காய்கறிகள், 4டன் மளிகை பொருட்களுடன் 120 சமையல் கலைஞர்களை வைத்து பிரம்மாண்ட விருந்து தயாரிக்கப்பட்டது.

    அதன்பின் சுவாமிக்கு படையல் பூஜை நடந்தது. வடித்து கொட்டப்பட்ட பிரம்மாண்ட அன்ன குவியலில் வேல் குத்தி சிவலிங்கம் பிடித்து பூஜைகள் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதான விருந்து வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாப்பிட்டனர்.

    இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை வணிகர் நலச்சங்க ஆடி 18 அன்னதான குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    ×