என் மலர்
உள்ளூர் செய்திகள்

தலைமுடியின் மூலம் அந்தரத்தில் பறந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தரை படத்தில் காணலாம்.
கோவில் திருவிழாவில் தலைமுடியின் மூலம் அந்தரத்தில் பறந்த பக்தர்கள்
- நேர்த்திக்கடன் செலுத்தினர்
- ஏராளமாேனார் தரிசனம் செய்தனர்
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
இங்கு ஆடி மாதம் 3-ம் வெள்ளியை முன்னிட்டு திருவிழா நடைபெற்றது.
முன்னதாக ஊர் பொது மக்கள் அனைவரும் தங்களது நிலத்தில் விளைந்த தானியங்களை கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு பூஜை செய்தனர்.
அதனை தொடர்ந்து பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரி க்கப்பட்ட முத்து மாரியம்ம னுக்கு மாலை போட்டு விரதம் இருந்த பக்தர்கள் கொக்கி போட்டு ஊர்வலமா கவும், அலகு குத்தியும், தீ சட்டி எடுத்தும் மேலதாள முடன் சாமி ஊர்வலம் நடைபெற்றது.
பின்னர் பக்தர்கள் கயிற்றில் தலை முடியை கட்டிய நிலையில் பறந்து சென்று அம்மனுக்கு மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதில் பென்னகர் சுற்றுவட்டார பகுதிகளான மாம்பாக்கம், வேம்பி, தோனிமேடு, பாரியம ங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.






