search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள அரசு"

    • கடந்த ஜூன் மாதம் டெல்லியில் நடந்த மேற்பார்வை குழு கூட்டத்தில் பெரியாறு அணையில் நில அதிர்வு மானி பொருத்துவது குறித்து கேரள அரசு கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
    • தேவையான கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கேரள அரசுக்கு கண்காணிப்பு குழு உத்தரவிட்டது.

    கூடலூர்:

    தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய பாசனத்திற்கு ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை உள்ளது. 152 அடி உயரம் கொண்டுள்ள அணையில் உச்சநீதிமன்றம் உத்தரவுபடி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    இருந்தபோதும் அணை பலவீனமாக இருப்பதாக கேரளஅரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதிகாரிகள் குழு ஆய்வு செய்து அணை பலமாக இருப்பதை உறுதி செய்த பின்னரும் கேரளாவில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

    தற்போது நில அதிர்வு மற்றும் நில நடுக்கத்தால் அணைக்கு பாதிப்பு ஏற்படுவதாக பொய் குற்றச்சாட்டை கூறி வருகிறது. இதனால் நில அதிர்வு மானி பொருத்த கண்காணிப்பு குழுவை கேரள அரசு வலியுறுத்தியது.

    கடந்த ஜூன் மாதம் டெல்லியில் நடந்த மேற்பார்வை குழு கூட்டத்தில் பெரியாறு அணையில் நில அதிர்வு மானி பொருத்துவது குறித்து கேரள அரசு கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கு தேவையான கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கேரள அரசுக்கு கண்காணிப்பு குழு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அணையில் நில அதிர்வு மற்றும் நில நடுக்கத்தை அளவிடும் சீஸ்மோகிராப் மற்றும் அக்ஸ்சலரோ கருவிகள் வாங்க ரூ.99.95 லட்சம் நிதி தமிழக பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கப்பட்டது. கருவிகளை பொருத்தும் பணியை செய்து முடிக்க ஐதராபாத்தை சேர்ந்த மத்திய அரசின் தேசிய புவியியல் ஆராய்ச்சி மையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் இரு மாநில பிரச்சினை என்பதால் நில அதிர்வு மானியின் அறிக்கை ஒவ்வொரு 15 நொடிக்கும் ஐதராபாத்தில் உள்ள ஆய்வு குழுவிற்கு தகவல் சொல்லும் வகையில் 5 ஆண்டு ஒப்பந்தத்துடன் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் பெரியாறு அணையில் கருவிகள் பொருத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தமிழக அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கேரள நீர்பாசனத்துறையின் இண்டர்ஸ்டேட் வாட்டர் குழுவின் அனுமதி பெற்று அவர்கள் முன்னிலையில்தான் பணியை மேற்கொள்ள வேண்டும் என தமிழக பொதுப்பணித்துறையை கேரளா வற்புறுத்தி உள்ளது.

    இதற்கு ஒருங்கிணைந்த 5 மாவட்ட பெரியாறு, வைகை விவசாய சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் தலைவர் எஸ்.ஆர்.தேவர் கூறுகையில், முல்லைப்பெரியாறு அணையில் வர்ணம் பூசுதல், மராமத்து பணி என அனைத்துக்கும் கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஸிஅகஸ்டின் தலைமையில் உள்ள இண்டர்ஸ்டேட் வாட்டர் குழுவிடம் அனுமதி பெற வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    இது இரு மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்சினை என்பதால் கேரள அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. கடந்த 2006-ம் ஆண்டு கேரள சட்டமன்றத்தில் ஏற்றிய அணைகள் பாதுகாப்பு சட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வரும் கேரளாவின் செயலுக்கு தமிழக விவசாயிகள் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம் என்றார்.

    • குமுளியில் உள்ள கேரள சோதனைச்சாவடி மாதா சிலை அருகில் இருந்தது. படிப்படியாக இது ஆக்கிரமிக்கப்பட்டு கேரள பஸ் நிலையம் அருகே வந்து விட்டது.
    • தமிழக எல்லைப்பகுதிகளில் உள்ள கண்ணகி கோவிலை வழிபடக்கூட கேரள அரசின் அனுமதி பெற வேண்டியது உள்ளது.

    கூடலூர்:

    கேரள மாநிலம் முழுவதும் கடந்த 1-ந் தேதி முதல் டிஜிட்டல் ரீசர்வே செய்து வருகிறது. ஆக்கிரமிப்பு அகற்றம், நிலவரையறை, இடங்களை வகைப்படுத்துதல் ஆகியவற்றுக்காக இப்பணிகளை மேற்கொள்வதாக அம்மாநில முதல்-அமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    இதற்காக 1500 சர்வேயர்கள், 3200 உதவியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பணிகளை 4 ஆண்டுகளுக்குள் முடிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறு அளவீடு செய்ய வேண்டுமானால் முதலில் தமிழக-கேரள எல்லையை அளவிட வேண்டும். அப்போதுதான் மறு அளவீடு முழுமை பெறும்.

    இதனை செய்யாமல் வருவாய் நிலங்களை கேரள அரசு டிஜிட்டல் ரீசர்வே செய்வதால் தமிழகத்தில் 1400 சதுர கி.மீ வனத் தோட்ட பகுதிகளை இழக்கும் நிலை ஏற்படும்.

    கேரளா உருவானபோது எல்லை மறுவரை சரியாக செய்யாததால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்சோலை அருகே உள்ள தமிழக வனப்பகுதிகள் கடந்த 1956-ம் ஆண்டு முதலே அப்பகுதியைச் சேர்ந்தவர்களால் அதிக அளவில் ஆக்கிரமிக்கப்பட்டது.

    பின்னர் அங்கிருந்த வன நிலங்கள் வருவாய் நிலங்களாக பட்டா மாற்றம் பெற்று கேரள நிலங்களாக மாறி விட்டன. இது போன்ற குளறுபடிகளால் தமிழக சர்வே துறையில் தமிழக வன நிலமாக குறிக்கப்பட்டு ஓர் இடம் கேரள வருவாய்த்துறையால் பட்டா நிலமாக வகைபடுத்தப்பட்டுள்ளது.

    இது போன்று எல்லைப்பகுதி நிலங்களில் குளறுபடிகள் அதிக அளவில் நடப்பதால் தமிழக அரசு விழிப்புடன் இருந்து நமது உரிமையை நிலைநாட்ட வேண்டும் என விவசாயிகள் மற்றும் வன ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தெரிவிக்கையில், இடுக்கி மாவட்டம் உடும்பன் சோலை அருகே உள்ள சாந்தம்பாறை, சின்னக்கானல், பைசன் வேலி, ராஜாகாடு, சதுரங்கபாறை ஆகிய இடங்களில் இருக்கும் தமிழக நிலங்களுக்கு கேரள அரசு இதன் மூலம் நெருக்கடி கொடுக்க வாய்ப்பு உள்ளது.

    குமுளியில் உள்ள கேரள சோதனைச்சாவடி மாதா சிலை அருகில் இருந்தது. படிப்படியாக இது ஆக்கிரமிக்கப்பட்டு கேரள பஸ் நிலையம் அருகே வந்து விட்டது. இதே போல முல்லைக்கொடி, ஆனவச்சால் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளை இழந்து விட்டோம். தமிழக எல்லைப்பகுதிகளில் உள்ள கண்ணகி கோவிலை வழிபடக்கூட கேரள அரசின் அனுமதி பெற வேண்டியது உள்ளது. இது போன்ற நிலை தொடர்ந்தால் தமிழக நிலங்கள் மேலும் கேரளா வசம் சென்று விடும். ரீசர்வே குறித்து தமிழகத்துக்கு உரிய முறையில் முன்னறிவிப்பு செய்யாமல் கேரள அரசு தன்னிச்சையாக இது போன்ற நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பதால் தமிழக முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.

    • கேரளாவில் சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் அதிகரித்து வரும் பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க கேரள அரசும், சி.பி.எஸ்.இ. கல்வி வாரியமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • பாலியல் குற்றங்களால் ஏற்படும் விளைவுகள் குறித்த தொடர்ச்சியான விழிப்புணர்வே இக்குற்றங்களை குறைக்க உதவும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பள்ளி மாணவிகள், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    குறிப்பாக 18 வயதுக்கும் குறைவான சிறுமிகள் கர்ப்பம் தரிப்பதும், அதனை வெளியில் கூறாமல் மறைப்பதும், பின்னர் ஆஸ்பத்திரிகளுக்கு சென்ற பின்னரே இதுபற்றிய தகவல் வெளியே தெரிவதுமான சம்பவங்களும் நடந்தது.

    இதில் ஈடுபடும் நபர்கள் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கிறார்கள். இது தொடர்பான ஒரு வழக்கில் குற்றவாளி ஒருவர் ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனு செய்தார். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, கேரள அரசுக்கும், சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்திற்கும் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. அதன்விபரம் வருமாறு:-

    கேரளாவில் சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் அதிகரித்து வரும் பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க கேரள அரசும், சி.பி.எஸ்.இ. கல்வி வாரியமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமைகளை அறிந்து கொள்ளவும், அதில் இருந்து மீண்டு வருவதற்கான விழிப்புணர்வு அளிக்க வேண்டும். இதனை அனைத்து பள்ளிகளிலும் தொடங்கப்பட வேண்டும்.

    இதற்கான பாடதிட்டங்களை மாணவிகளின் வயதுக்கு ஏற்ற வகையில் தயாரிக்க வேண்டும். இதற்காக நிபுணர் குழு ஒன்றை 2 மாதங்களில் உருவாக்க வேண்டும்.

    பாலியல் குற்றங்களால் ஏற்படும் விளைவுகள் குறித்த தொடர்ச்சியான விழிப்புணர்வே இக்குற்றங்களை குறைக்க உதவும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரளாவில் மைனர் சிறுமிகள் கர்ப்பம் தரிப்பது அதிகரித்து உள்ளது.
    • பள்ளிகளிலேயே குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வியை கற்று கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் 13 வயது சிறுமியை அவரது மைனர் சகோதரனே பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதில் அந்த சிறுமி கர்ப்பிணி ஆனார். அவரது வயிற்றில் உருவான 30 வார கருவை கலைக்க அனுமதிகோரி, சிறுமியின் பெற்றோர் கேரள ஐகோர்ட்டில் மனு செய்தனர்.

    இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அனுமதி வழங்கியது. மேலும் கருகலைப்பு அரசு மருத்துவமனையில் நடைபெற வேண்டும். இதில் குழந்தை உயிருடன் இருந்தால், அதற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்.

    குழந்தையை பெற்று கொள்ள சிறுமியின் பெற்றோர் மறுத்தால், அந்த குழந்தையை வளர்க்க அரசே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் உத்தரவிட்டது.

    இந்த வழக்கில் தீர்ப்பு கூறிய கோர்ட்டு, அரசுக்கும் சில பரிந்துரைகளை தெரிவித்தது. தற்போது கேரளாவில் மைனர் சிறுமிகள் கர்ப்பம் தரிப்பது அதிகரித்து உள்ளது. இதுபோன்ற சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், நெருங்கிய உறவினர்களாக உள்ளனர்.

    தற்போது சமூக ஊடகங்கள் மற்றும் இணையங்கள் மூலமாக தவறான கருத்துக்களை பார்க்கும் நிலை குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பான விழிப்புணர்வை குழந்தைகளுக்கு ஏற்படுத்துவது அவசியமாகிறது. அதன்படி பள்ளிகளிலேயே குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வியை கற்று கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய சூழலில் இது மிகவும் அவசியம் என்று கோர்ட்டு கருதுகிறது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொழிலாளி ஒருவர் அரசின் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் தோட்டத்தில் வேலை செய்து வந்தார்.
    • பூச்சிகள் தாக்கி பலியாகும் நபர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு கேட்டு பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அணுகலாம்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மலையோர பகுதிகளில் சாகுபடி பணிகளில் ஈடுபடும் விவசாயிகள் பலரும் விஷப்பூச்சிகளின் பாதிப்புக்கு ஆளாவது வழக்கம்.

    பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் அரசின் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் தோட்டத்தில் வேலை செய்து வந்தார்.

    சமீபத்தில் இவர் தோட்டத்திற்கு சென்றபோது குளவி கொட்டி பரிதாபமாக இறந்தார். அவருடன் பணியில் இருந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். பலியான தொழிலாளி குடும்பத்தினர், அவரது மரணத்திற்கு இழப்பீடு கேட்டு அரசிடம் மனு செய்தனர்.

    இதையடுத்து இறந்து போன தொழிலாளி குடும்பத்துக்கு அரசு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கியது.

    மேலும் இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த நபர்களுக்கு தலா ரூ.4300 நிவாரணமும் வழங்கியது.

    இதற்கிடையே கேரளாவில் விஷ பூச்சிகளின் தாக்குதலுக்கு ஆளாகி பலியாகும் நபர்களுக்கு இழப்பீடு வழங்க மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளது.

    இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேனி, குளவி போன்ற பூச்சிகள் தாக்கி பலியாகும் நபர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு கேட்டு பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அணுகலாம் எனக்கூறப்பட்டுள்ளது.

    • பயங்கரவாத இயக்கங்களின் அச்சுறுத்தல் குருவாயூர் கோவிலுக்கு இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.
    • கோவிலைச் சுற்றிலும் 100 மீட்டர் இடத்தை கையகப்படுத்தி உயரமான சுற்றுச் சுவர் கட்ட வேண்டும். நுழைவாயில்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற கோவில்களில் முதன்மையானது குருவாயூர் கிருஷ்ணன் கோவில்.

    இந்த கோவிலுக்கு தினமும் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவதுண்டு. இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் கோவிலில் எப்போதும் இருக்கும்.

    இந்த நிலையில் கோவிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் கோவில் அருகே புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த சூழலில் கோவிலுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை அதிகரிக்கவும் மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பை அளிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. பயங்கரவாத இயக்கங்களின் அச்சுறுத்தல் குருவாயூர் கோவிலுக்கு இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.

    இதன் அடிப்படையில் தான் கோவிலுக்கான பாதுகாப்பை அதிகரிக்கும்படி கேரள அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.கோவிலைச் சுற்றிலும் 100 மீட்டர் இடத்தை கையகப்படுத்தி உயரமான சுற்றுச் சுவர் கட்ட வேண்டும். நுழைவாயில்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    ×