search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குருபூஜை"

    • பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கண்ணப்ப நாயனாரின் 7-ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கண்ணப்ப நாயனாரின் 7-ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. சிவபெருமானுக்கு கண் கொடுத்தவரும், மிருக சீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்த 63 நாயன்மார்களில் ஒருவருமான கண்ணப்ப நாயனாரின் குருபூஜை விழாவை முன்னிட்டு, நேற்று மாலை 5 மணிக்கு மேல் பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் ,சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கண்ணப்பநாயனார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் புதிய காசி விஸ்வநாதர், கண்ணப்ப நாயனார் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். குருபூஜை விழாவிற்கு இருக்கூர் பட்டக்காரரும், இடும்பை இளைய நாயகருமான சோமசுந்தரம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பாண்டமங்கலம் பேரூராட்சித் தலைவர் டாக்டர் சோமசேகர் கலந்து கொண்டார்.

    விழாவில் பாண்ட மங்கலம் மற்றும் பரமத்தி வேலூர் தாலுகா பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கண்ணப்ப நாயனார், புதிய காசி விஸ்வநாதர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • மருது சகோதரர்களின் குருபூஜையை முன்னிட்டு செம்பிய நாட்டு மறவர் சங்கம் சார்பில் அன்னதானம் நடந்தது.
    • இதில் நிர்வாகிகள் பேட்டா பாய்ஸ் மனோஜ், கண்ணா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பரமக்குடி

    மருது சகோதரர்களின் 221-வது குருபூஜை விழாவை முன்னிட்டு பரமக்குடியில் செம்பிய நாடு மறவர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் பாரதி நகரில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இவ்விழாவில் செம்பிய நாடு மறவர் சங்கத் மாநிலத் தலைவர் சி.எம்.டி ராஜாஸ் தேவர் தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். மாநில பொருளாளர் எஸ்.செந்தில்ராஜா வரவேற்று பேசினார். மாவட்ட பொறுப்பாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.

    இதில் நிர்வாகிகள் பேட்டா பாய்ஸ் மனோஜ், கண்ணா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • குருபூஜை விழாவில் மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.
    • அஞ்சலி செலுத்த வருவோருக்கு ஏதுவாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

    காளையார்கோவில்

    மாமன்னர் மருது பாண்டியர்களின் 221-வது குருபூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது. நினைவிடத்தில் ஏராளமா னோர் அஞ்சலி செலுத்தினர்.

    அஞ்சலி செலுத்த வருவோர் முளைப்பாரி எடுத்தும், பால்குடம் எடுத்தும், வேல் குத்தியும் அஞ்சலி செலுத்தினர். சிவகங்கை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் கண்காணிப்பு வளையத்தில் கண்காணி க்கப்படுகின்றனர்.

    மருதுபாண்டியர் குருபூஜையையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நேற்று முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அஞ்சலி செலுத்த வருவோர் டூவீலரில் செல்ல அனுமதி இல்லை. வாடகை வாகனத்தில் செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, மானா மதுரை, திருப்புவனம், இளையான்குடி, காளையார் கோவில், தேவகோட்டை ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    அஞ்சலி செலுத்த வருவோருக்கு ஏதுவாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. திரளானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    • மருதுபாண்டியர், தேவர் குருபூஜையை முன்னிட்டு 31-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
    • மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி அறிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்ைக மாவட்டத்தில் 31-ந் தேதி (திங்கட்கிழமை) வரை 144 தடை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கான உத்தரவை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி பிறப்பித்துள்ளார். நாளை (24-ந் தேதி) மருது சகோதரர்களை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்ட நினைவு தினம் திருப்பத்தூரில் அரசு சார்பிலும், 27-ந்் தேதி அவர்களின் சமாதி அமைந்துள்ள காளையார்கோவிலில் சமுதாய மக்கள் சார்பில் குருபூஜை விழாவாகவும் அனுசரிக்கப்படவுள்ளது.

    இந்த நிகழ்விற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய மக்கள் ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்துவார்கள். மேலும் அதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருகிற 30-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா நடைபெறுகிறது.

    இதையொட்டி 31-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி அறிவித்துள்ளார்.

    • தேவா் குருபூஜை விழாவில் பங்கேற்க வருகிற 21-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
    • வருகிற 21-ந் தேதி மாலை 5.45 மணிக்கு முன்பு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனுமதிக்கான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது பிறந்தநாள் விழா மற்றும் 60-வது குருபூஜை விழா வருகிற 30-ந் தேதி நடைபெறுவதையொட்டி அஞ்சலி செலுத்த வருபவர்களின் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    அந்த வகையில் அதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் வருகிற 21-ந் தேதி மாலை 5.45 மணிக்கு முன்பு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனுமதிக்கான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை நடந்தது.
    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அரியலூர்:

    தா.பழூரில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா நடைபெற்றது. உடையார்பாளையம் கைக்களநாட்டார் தெருவில் உள்ள செல்வ மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜையும், பால்குடம் மற்றும் அன்னபடையல் நிகழ்ச்சியும் நேற்று நடந்தது. அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்து, அமுதபடையல் இட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் அம்மன் வீதி நடந்தது.

    • ஆண்டுதோறும் சைவ சமய நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை நடைபெறும்.
    • சிறப்பு ஹோமம், சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், முதலையுண்ட பாலகனை மீட்டெடுத்த அற்புதம் நடந்த கோவில் என்ற பல சிறப்பு பெற்றதாக விளங்குகிறது கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில்.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் சைவ சமய நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் குருபூஜை விழா நடந்தது. முன்னதாக சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.இதையடுத்துசாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    • சிங்கம்புணரியில் சித்தர் முத்துவடுககேசர் 190-வது குருபூஜை விழா நடந்தது.
    • இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சித்தர் முத்துவடுககேசர் ஜீவ சமாதி உள்ளது. நல்லாகுளம் வடகரையில் அமைந்துள்ள அவருடைய ஜீவ சமாதி பீடத்தில் சித்தர் சிவந்தி லிங்க சுவாமி ஏகமயார் வம்சாவளியினர் பரம்பரை பூசாரிகள் மற்றும் சித்தர் வாரிசுதாரர்கள்

    190-வது குருபூஜை விழாவை நேற்று நடத்தினர்.இதையொட்டி சித்தர் முத்துவடுகேசர் சிலைக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

    அதைத்தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் அருள் பாலித்த சித்தர் முத்துவடுககேசருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பந்தலில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக குருபூஜையை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து விட்டதால் சிறப்பாக அன்னதானம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த அன்னதானத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    குருபூஜை ஏற்பாடுகளை பரம்பரை பூசாரிகள் செய்திருந்தனர்.

    • மாணிக்கவாசகர் மண்டபத்தில் ஆனி மாத மகம் நட்சத்திரத்தினை முன்னிட்டு மாணிக்கவாசகர் குருபூஜை நடைபெற்றது.
    • விழாவில் கலந்து கொண்ட அனைவ ருக்கும் அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் செட்டியார் தெருவில் உள்ள மாணிக்கவாசகர் மண்டபத்தில் ஆனி மாத மகம் நட்சத்திரத்தினை முன்னிட்டு மாணிக்கவாசகர் குருபூஜை நடைபெற்றது.

    விழாவின் நிகழ்வாக காலை 8 மணிக்கு மாணிக்க வாச பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனைத் தொடர்ந்து திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. மதியம் மகேஸ்வர பூஜை உடன் அன்னம் பாலிப்பு நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அனைவ ருக்கும் அன்னதானமும் பி ரசாதமும் வழங்கப்பட்டது.

    ×