search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசி கோவிலில் குருபூஜை விழா
    X

    சிறப்பு அலங்காரத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    அவினாசி கோவிலில் குருபூஜை விழா

    • ஆண்டுதோறும் சைவ சமய நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை நடைபெறும்.
    • சிறப்பு ஹோமம், சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், முதலையுண்ட பாலகனை மீட்டெடுத்த அற்புதம் நடந்த கோவில் என்ற பல சிறப்பு பெற்றதாக விளங்குகிறது கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில்.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் சைவ சமய நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் குருபூஜை விழா நடந்தது. முன்னதாக சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.இதையடுத்துசாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    Next Story
    ×