பரமத்தி வேலூரில் மாணிக்கவாசகர் குருபூஜை

மாணிக்கவாசகர் மண்டபத்தில் ஆனி மாத மகம் நட்சத்திரத்தினை முன்னிட்டு மாணிக்கவாசகர் குருபூஜை நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அனைவ ருக்கும் அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டது.
குருபூஜையை முன்னிட்டு மாணிக்கவாசகர் சிறப்பு அலங்காரத்தில் இருந்தபோது எடுத்த படம்.
குருபூஜையை முன்னிட்டு மாணிக்கவாசகர் சிறப்பு அலங்காரத்தில் இருந்தபோது எடுத்த படம்.
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் செட்டியார் தெருவில் உள்ள மாணிக்கவாசகர் மண்டபத்தில் ஆனி மாத மகம் நட்சத்திரத்தினை முன்னிட்டு மாணிக்கவாசகர் குருபூஜை நடைபெற்றது.

விழாவின் நிகழ்வாக காலை 8 மணிக்கு மாணிக்க வாச பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனைத் தொடர்ந்து திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. மதியம் மகேஸ்வர பூஜை உடன் அன்னம் பாலிப்பு நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அனைவ ருக்கும் அன்னதானமும் பி ரசாதமும் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com