search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குப்பைகள்"

    • அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
    • சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை

    கருமத்தம்பட்டி,

    கருமத்தம்பட்டி நகராட்சியில் 20 வார்டுகள் உள்ளன. அங்கு உள்ள ஒரு சில வார்டுகளில் சரிவர குப்பைகள் அகற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் 17-வது வார்டு பகுதியில் உள்ள கருமத்தம்பட்டி-புதூர் ரோட்டில் சாலையோரம் குப்பைகள் மலை போல குவிந்து கிடக்கின்றன. இதில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    மேலும் இந்த பகுதியில் உள்ள தெரு நாய்கள் குப்பைகளை கிளறி சாலையில் வீசுவதால், பிளாஸ்டிக் கவர்கள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. கருமத்தம்பட்டி-புதூர் ரோட்டில் பள்ளி உள்ளது. குப்பைகளில் துர்நாற்றம் வீசுவதால் மாணவ-மாணவிகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே கருமத்தம்பட்டி நகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வணிக வளாகங்களில் இருந்து கொண்டு செல்லப்படும் குப்பைகள் சாலை ஓரங்களிலேயே கொட்டப்படுகிறது.
    • காற்றில் பறக்கும் குப்பைகள் வாகன ஓட்டிகள் மீது விழுவதால் விபத்துக்கள் ஏற்படும்.

    தென்காசி:

    தென்காசி புதிய பஸ் நிலையத்திலிருந்து மதுரையை நோக்கி செல்லும் சாலைகளின் இருபுறமும் வணிக வளாகங்கள் அதிக அளவில் பெருகி உள்ள நிலையில் வணிக வளாகங்களில் இருந்து கொண்டு செல்லப்படும் குப்பைகள் அனைத்தையும் சாலை ஓரங்களிலேயே கொட்டி வருவதால் குப்பை கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமின்றி குப்பைகள் காற்றிலும் பறக்கின்றன. காற்று வேகமாக வீசும் பொழுது காற்றில் பறக்கும் குப்பைகள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுவதால் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் தென்காசி-மதுரை சாலையில் குத்துக்கல்வலசை பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தினமும் கடற்கரை மணலை சுத்தப்படுத்த 5 எந்திரங்கள் சுற்றி சுற்றி வருகின்றன.
    • கடற்கரையில் தெருவோர வியாபாரிகளின் எண்ணிக்கை 2017-ல் 1447 ஆக இருந்தது. இப்போது 2500 கடைகள் உள்ளது.

    உலகிலேயே அழகான கடற்கரைகளில் ஒன்று நம்மூர் மெரினா. அதே போல் மற்றொரு அமைதியான கடற்கரை பெசன்ட் நகர்.

    சென்னையின் இந்த அழகிய கடற்கரைதான் எத்தனையோ பிரபலங்களின் ஆற்றலையும், அறிவையும் வளர்க்க உந்துசக்தியாக இருந்திருக்கின்றன.

    இந்த அழகிய கடற்கரைகளை கண்டு ரசிக்கவும், காலாற நடந்து காற்று வாங்கி உடலுக்கு புத்துணர்ச்சியை ஊட்டவும் தினமும் ஏராளமானோர் இங்கு வருகிறார்கள்.

    வெளியூர், வெளிநாடுகளில் இருந்து வந்து குவியும் சுற்றுலா பயணிகளும் அழகை ரசிக்க வரிசைகட்டி நிற்கிறார்கள். இந்த கடற்கரைகளை அழகுபடுத்தும் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.

    அதன் ஒரு கட்டமாக கடற்கரையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த கடைகளை வரிசையாக முறைப்படுத்தினார்கள்.

    தினமும் கடற்கரை மணலை சுத்தப்படுத்த 5 எந்திரங்கள் சுற்றி சுற்றி வருகின்றன. அதாவது மணலில் இருக்கும் குப்பை கழிவுகளை சல்லடை போட்டு தேடி சேகரிப்பது தான் இந்த எந்திரங்களின் வேலை. அப்புறமென்ன கடற்கரை நேர்த்தியாகத் தானே இருக்கும் என்று தானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை.

    அதிகாலையில் வெறும் காலில் கடற்கரை மணலில் நடைபயிற்சி சென்றால் காலுக்கு பாதுகாப்பு கிடை யாது. உடைந்து கிடக்கும் பாட்டில் துண்டுகள், குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள் பார்த்தால் முகம் சுளிக்க வைக்கிறது. நடப்பதற்கு பயமுறுத்துகிறது.

    வார விடுமுறை நாட்களில் கடற்கரைக்கு வந்து பொழுதுபோக்க வரும் சில குடும்பத்தினர் கூறும்போது,

    கடற்கரை அசுத்தமாக மாறி வருவதால் கடற்கரைக்கு வருவதை தவிர்த்து விட்டதாகவும் அதற்கு பதிலாக வீட்டு பக்கத்தில் உள்ள பூங்காக்களுக்கு செல்வதாகவும் கூறினார்கள். கழிப்பிடங்கள் வெளிப்பார்வைக்குத்தான் பகட்டாக தெரிகின்றன. உள்ளே சென்றால் பராமரிப்பு இல்லாமல் நாற்றமடிக்கிறது.

    பல்லாயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வரும் இடத்தில் ஒரு கழிப்பறையை கூட சுத்தமாக, ஓட்டல்களில் இருப்பதை போல் பராமரிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டனர்.

    பொதுமக்களின் மனக்குறைகள் பற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, கடற்கரையில் தெருவோர வியாபாரிகளின் எண்ணிக்கை 2017-ல் 1447 ஆக இருந்தது.

    இப்போது 2500 கடைகள் உள்ளது. மொத்தம் 15 விற்பனையாளர்கள் சங்கம் உள்ளது. இந்த கடைகளில் இருந்து வரும் குப்பை கழிவுகள்தான் கடற்கரை மணற்பரப்பில் சிதறுகிறது. கடைக்காரர்களிடம் குப்பை தொட்டிகளை வைக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறோம் என்றனர்.

    கடற்கரையில் உடைந்த மதுபாட்டில்கள் ஏராளமாக சிதறி கிடக்கிறது. இதற்கு பொதுமக்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

    மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கடற்கரை பாதையை அழகுபடுத்தி பராமரிக்க, குடிநீர் வசதிகள் செய்ய, இயற்கையை ரசிக்க, உட்காரும் இடங்கள் அழகு குடைகள், சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளிட்ட வசதிகளை செய்ய நாடு முழுவதும் அனுமதித்துள்ளது.

    மெரினாவை பொறுத்தவரை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. எல்லாம் காகிதத்தில்தான் எழுத்துக்களாக இருக்கின்றன. இன்னும் செயல் வடிவம் பெறவில்லை.

    இந்த அழகிய கடற்கரையில் நான் காற்று வாங்க போனேன். ஒரு கவிதை வாங்கி வந்தேன் என்று தான் அன்று பூரித்தனர். ஆனால் இன்று நான் காற்று வாங்க சென்றேன் கொஞ்சம் நோயை வாங்கி வந்தேன் என்று சொல்லும் அளவில் தான் மெரினா கடற்கரை உள்ளது.

    • சாலையோரம் மலை போல் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.
    • ஜமனஹள்ளி ஊராட்சியில் தேங்குகின்ற குப்பைகளை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஜமனஹள்ளி ஊராட்சியில் ஜமனஹள்ளி, அம்பேத்கர் நகர், தென்னகரம், நாகப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது.

    இந்த கிராம மக்கள் குப்பைகளை கொட்டு வதற்காக, சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் குப்பை கிடங்கிற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஆனால் வீடுகளில் இருந்து சேகரமாகின்ற குப்பைகளை, மக்கள் அவ்வளவு தொலைவிற்கு கொண்டு சென்று கொட்ட முடியாத சூழல் இருந்து வருகிறது.

    இதனால் அம்பேத்கர் நகர் கிராமத்தை சேர்ந்த மக்கள், தருமபுரி பிரதான சாலை யோரத்தில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அதேபோல், மற்ற கிராம மக்கள் கோபாலபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், தருமபுரி பிரதான சாலையில் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.

    இதனால் கடந்த 3 மாதமாக சாலையோரம் குப்பை மலை போல் குவிந்து துர்நாற்றம் வீசி வருகிறது.

    மேலும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் தவிர்த்து, மக்காத பிளாஸ்டிக் பொரு ட்கள், கோழி கழிவுகள் என பல்வேறு வகையான கழிவுகளை கொட்டி வருகின்றனர்.

    இந்த குப்பை கொட்டுகின்ற இடத்திற்கு அருகில், ஏரிக்கு தண்ணீர் செல்வதற்கு கால்வாய் இருப்பதால், இந்த குப்பைகளால் ஏரி தண்ணீர் மாசடையும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    அதேபோல் விவசாய நிலங்களில் உள்ள மண் தரமும் பாதிக்கப்படும் சூழல் இருந்து வருகிறது.

    சாலையோரம் மலை போல் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.

    எனவே இந்த குப்பைகளை அகற்றி கிராம மக்களை, தொற்று நோயிலிருந்து பாதுகாப்பதற்கு, உடனடியாக மாவட்ட நிர்வாகம் குப்பைகளை எடுக்க தேவையான டிராக்டர் வாங்குவதற்கான, அனுமதியை வழங்க வேண்டும் என கிராம மக்களும், ஊராட்சி நிர்வாகமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி கூறுகையில், 'ஜமனஹள்ளி ஊராட்சியில் தேங்குகின்ற குப்பைகளை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதேபோல் குப்பைகளை எடுப்பதற்கு வாகன வசதி விரைவில் செய்து கொடுக்கப்படும். இதற்காக டிராக்டர்கள் வேண்டும் என கேட்டுள்ளார்கள். அதற்கான ட்ரெய்லர் இன்னும் வரவில்லை, வந்தவுடன் உடனடியாக ஜம்மனஹள்ளி ஊராட்சியில் குப்பைகளை அகற்றுவதற்கு டிராக்டர் வழங்கப்படும்' என்றார்.

    • குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை நகராட்சி பணியாளர்கள் சேகரித்து குப்பை கிடங்குக்கு அனுப்பி வைத்தனர்.
    • சுற்றுலா பயணிகளிடம் பொது இடங்களில் குப்பைகள் கொட்டக்கூடாது என விழிப்புணர்வு.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி சார்பில் சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா மற்றும் தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சரஸ்வதி ஆகியோரின் உத்தரவுபடி வேதாரண்யம் நகராட்சி பகுதியில் மக்கள் தூய்மை இயக்கம் ஓராண்டு நிறைவு பெற்றது,

    உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு வேதாரண்யம் சன்னதி கடல் பகுதியில் மெகா தூய்மை பணி நடைபெற்றது.

    கடற்கரை மற்றும் கடற்க ரைக்கு செல்லும் சாலைகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை நகராட்சி பணியாளர்கள் சேகரித்து குப்பை கிடங்குக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர், நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹிம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் தூய்மை பணி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற துணை தலைவர் மங்கள நாயகி, உறுப்பி னர்கள், தன்னார்வலர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, கடற்க ரைக்கு வந்த சுற்றுலா பயணிகளிடம் பொது இடங்களில் குப்பைகள் கொட்டக்கூடாது என விழிப்புணர்வு ஏற்ப டுத்தப்பட்டு துண்டு பிரசு ரங்கள் வழங்கப்பட்டது.

    • பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 1 லட்சத்து 72 ஆயிரம் கிலோ ஆகும்.
    • மக்கும்- மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க முன்வர வேண்டும்

    ஊட்டி,

    ஊட்டி நகராட்சியில் கமர்சியல் சாலை, பூங்கா சாலை, லோயர் பஜார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வணிக வளாகங்கள், ஓட்டல்கள் அதிகம் உள்ளன. இங்கு தூய்மைப்பணியாளர்கள் அதிகாலை, இரவு நேரங்களில் குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.

    அங்கு பழத்தோல், முட்டை ஓடுகள், காய்கறி கழிவுகள், தோட்டக் கழிவுகள் ஆகிய மக்கும் குப்பைகள், பிளாஸ்டிக், பாட்டில் உள்ளிட்ட மக்காத குப்பைகள், மருந்து மாத்திரைகள், ஊசி, சானிட்டரி நாப்கின் போன்ற தீங்கு விளைவிக்கும் குப்பைகள் ஆகியவை 3 வகைளில் தரம் பிரிக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன.

    ஊட்டியில் தினமும் சராசரியாக சுமார் 30 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. கோடை சீசனில் கடந்த 2 மாதங்களில் மட்டும் தினமும் 24 லட்சம் கிலோ குப்பைகள் வீதம் சேகரிக்கப்பட்டு உள்ளது.

    இதில் பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 1 லட்சத்து 72 ஆயிரம் கிலோ ஆகும். இந்த நிலையில் ஊட்டியின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளில் ஒருசிலர் சமூக பொறுப்பின்றி குப்பைகளை சாலையில் வீசி செல்கின்றனர். எனவே அவற்றை தரம் பிரித்து சேகரிக்க அதிக நேரம் ஆகிறது.

    எனவே தூய்மை பணியாளர்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று குப்பைகளை சேகரிக்க கால தாமதம் ஆகிறது அதிலும் குறிப்பாக ஊட்டியின் முக்கிய வர்த்தக பகுதிகளான மெயின்பஜார் அப்பர் பஜார் ஆகிய பகுதிகளில் பிரிக்கப்படாத குப்பைகள் குவிந்து கிடப்பதை பார்க்க முடிகிறது.

    எனவே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, மக்கும்- மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க முன்வர வேண்டும் என்று தூய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்

    சாலைகளில் குப்பைகளை வீசுபவர்களை கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஊட்டி,

    ஊட்டி நகராட்சி நிர்வாகம் சார்பாக தினம்தோறும் காலை,மாலையில் என நகராட்சி குப்பை வாகனங்களில் வந்து குப்ைப பெற்று செல்கின்றனர். இருப்பினும் இரவு நேரங்களில் வாகனங்களில் எங்கெங்கிருந்தோ வந்து மூட்டை, மூட்டையாக குப்பைகளை தினம்தோறும் வீசி செல்கின்றனர்.

    பிளாஸ்டிக் மற்றும் வாழை இலைகள் அதிகமாக காணப்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் இதற்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் மற்றும் இதுபோல் சாலைகளில் குப்பைகளை வீசுபவர்களை கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனசமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சந்தை வளாகத்தில் சில்லறை விற்பனை கடைகளும் இயங்கி வருகிறது.
    • சந்தையின் தெற்கு வாசல் வழியாக பொதுமக்கள் சந்தைக்குள் நுழைய முடியாத சூழல் நிலவுகிறது.

    உடுமலை:

    உடுமலை ராஜேந்திரா சாலையில் தினசரி சந்தை உள்ளது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகள் ,கீரைகள் ,பழங்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அவற்றை ஏலத்தில் எடுப்பதற்கு உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளும் நாள்தோறும் சந்தைக்கு வருகின்றனர். மேலும் சந்தை வளாகத்தில் சில்லறை விற்பனை கடைகளும் இயங்கி வருகிறது.

    இந்த சூழலில் சந்தையின் ஒரு பகுதியில் காய்கறிகள் மற்றும் குப்பை கழிவுகள் தேங்கி வருகிறது. அவை முறையாக அகற்றப்படாததால் அதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில்;-

    உடுமலையில் இயங்கி வருகிற தினசரி சந்தை வியாபாரிகளின் மையப்பகுதியாகும். இதனால் இந்த பகுதி பரபரப்புடன் காணப்பட்டு வருகிறது. இந்த சூழலில் விவசாயிகள் கொண்டு வருகின்ற காய்கறிகள் பழங்களை ஏலத்தில் எடுக்கும் விவசாயிகள் தரம் பிரிக்கும் பணியில் ஈடுபடுகின்ற போது சேதம் அடைந்த காய்கறிகளை கழிப்பது வழக்கம். அதே போன்று சந்தை வளாகத்தில் இயங்கி வருகின்ற கடைகளிலும் சேதம் அடையும் காய்கள் பழங்களை வியாபாரிகளும் அகற்றுவது வாடிக்கையாகும்.

    அந்த வகையில் சேகரமாகும் கழிவுகள் மூட்டை மூட்டையாக சந்தையின் ஒரு பகுதியில் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.இதன் காரணமாக அவை அழுகி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் சந்தையின் தெற்கு வாசல் வழியாக பொதுமக்கள் சந்தைக்குள் நுழைய முடியாத சூழல் நிலவுகிறது. எனவே சந்தை வளாகத்தில் தேங்கி வருகின்ற காய்கறி கழிவுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • சாலையில் கழிவு நீர் ஓடியதால் சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவும்அபாயம் ஏற்பட்டது.
    • குப்பைகளை நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி காந்தி ரோட்டில் கழிவு நீர்வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவு நீர் பெருக்கெடு த்து ஓடியது. இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவும்அபாயம் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி , துப்புரவு அலுவலர் முருகேசன், சுகாதாரஆய்வாளர்ஜெயச்சந்திரன், பாக்கியநாதன் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராட்சச நீர்உறிஞ்சும் மோட்டார் வாகனத்தின் மூலம் சாக்கடை நீரை வெளியேற்றினர்.

    திருமணமண்டபம்,வர்த்தகநிறுவனங் களில்சேரும் கழிவு நீர் மற்றும் குப்பைகளைதனியாக செப்டிக் டேங் அமைத்து வெளியேற்ற வேண்டும் என்றும் குப்பைகளை நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். கழிவுநீர் கால்வாயில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

    • தேங்காய் குப்பைகள் அகற்றப்பட்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
    • சனிக்கிழமையில் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் சுகாதார பணிகள் நடைபெறும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் மெகா தூய்மை பணி தொடக்க விழா நடைபெற்றது.

    நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, நகராட்சி ஆணையர் வாசுதேவன் ஆகியோர் தூய்மை பணியை தொடங்கி வைத்தனர்.

    பேருந்து நிலையம் பகுதி மற்றும் உள், வெளி வளாகம் முழுவதும் தேங்காய் குப்பைகள் அகற்றப்பட்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

    இதேபோல் வரும் சனிக்கிழமையில் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளதாக நகராட்சி தலைவர் துர்கா பரமேஸ்வரி, ஆணையர் வாசுதேவன் தெரிவித்தனர்.

    • ஒருமாத காலத்திற்கு நோன்பு கஞ்சி காய்ச்சும் பணிகளும், இரவு நேர வணக்க வழிபாடுகளும் சிறப்பாக நடைபெற உள்ளன.
    • பழுதான தெருவிளக்கு கம்பங்களில் புதிய மின்விளக்குகளை மாற்றி வெளிச்சத்தை ஏற்படுத்தி தரவேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா மகேந்திரனிடம், மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், ராயல் காதர் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட வணிகர் அணி செயலாளர் ஜான் முகம்மது தலைமையில் கிளை செயலாளர் சதாம் உசேன், ம.ஜ.க. வளைகுடா பொறுப்பாளர் நாச்சிகுளம் ரசீது, தீன்முகம்மது, ஜியாவுதீன், ராசித் ஆகியோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ரமலான் நோன்பு மாதத்தில் குடிதண்ணீர், தெருவிளக்கு, சுகாதாரம் ஆகிய அடிப்படை வசதிகளை தடையின்றி வழங்க கோரி ம.ஜ.க.வினர் மனு அளித்தனர்.

    புனிதமிகு ரமலான் நோன்பு இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது.

    நமது ஊராட்சியில் உள்ள பள்ளி வாசல்களில் வழக்கம்போல் இவ்வருடமும் தொடர்ந்து ஒருமாத காலத்திற்கு நோன்பு கஞ்சி காய்ச்சும் பணிகளும், இரவு நேர வணக்க வழிபாடுகளும் சிறப்பாக நடைபெற உள்ளன.

    அதேபோன்று வீடுகளிலும் ஒருமாத காலம் நோன்பு நாட்களை கொண்டாட உள்ளனர். எனவே ஊராட்சிக்கு உட்பட்ட அணைத்து பள்ளிவாசல்களிலும் தினமும் நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்கு தங்குதடையின்றி குடி தண்ணீர் கிடைக்க வேண்டும்.

    வீடுகளுக்கு வழங்கப்படும் குடிதண்ணீரையும் உரிய நேரங்களில் தட்டுப்பாடின்றி வழங்கிட வேண்டும்.

    பழுதான தெருவிளக்கு கம்பங்களில் புதிய மின்விளக்குகளை மாற்றியும் இருள் சூழ்ந்த பகுதிகளில் புதிய மின்விளக்குகளை பொறுத்தியும் வெளிச்சத்தை ஏற்படுத்தி தரவேண்டும்.

    அனைத்து பள்ளிவாசல் வளாக பகுதிகளிலும் தெரு ஓரங்களிலும் குப்பைகளை அகற்றி தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். கிருமி நாசினிகளை தெளித்து சுகாதார பகுதியாக்கி தரவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடல் பாசிகள் குவிந்து கடற்கரை மிகவும் தூய்மையற்ற நிலையில் காணப்படுகிறது.
    • மல்லிப்பட்டினத்தில் கடற்கரையில் முகாமிட்டு கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அதிராம்பட்டினம்:

    தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் கடற்கரை துறைமுகமாக மாறிக்கொண்டு வருகிற இந்நிலையில் அதற்கான வேலைகளும் கட்டிட வசதிகளும் சென்ற ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

    மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலமான மனோரா செல்லும் சுற்றுலா பயணிகள் அங்கு திண்பண்டங்களின் குப்பைகளை அங்கு விட்டுச்சென்றனர்.

    மேலும் கடல் பாசிகள் குவிந்து கடற்கரை மிகவும் தூய்மையற்ற நிலையில் காணப்படுகிறது. கடல்பாசிகளும், நெகிழி பொருட்களும், இதர தேவையற்ற பொருட்களும் கடற்கரையை சூழ்ந்து காணப்படுவதால் கடற்பகுதி மிகவும் அசுத்த நிலையில் காட்சியளித்தது.

    இதை அறிந்த தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மற்றும் நேரு யுகேந்திரா மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கம் இணைந்து மல்லிப்பட்டினத்தில் கடற்கரையில் முகாமிட்டு கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தினர்.

    ×