search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை தடையின்றி வழங்க வேண்டும்-ம.ஜ.க.வினர் மனு
    X

    ஊராட்சி மன்ற தலைவியிடம், ம.ஜ.க.வினர் மனு அளித்தனர்.

    உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை தடையின்றி வழங்க வேண்டும்-ம.ஜ.க.வினர் மனு

    • ஒருமாத காலத்திற்கு நோன்பு கஞ்சி காய்ச்சும் பணிகளும், இரவு நேர வணக்க வழிபாடுகளும் சிறப்பாக நடைபெற உள்ளன.
    • பழுதான தெருவிளக்கு கம்பங்களில் புதிய மின்விளக்குகளை மாற்றி வெளிச்சத்தை ஏற்படுத்தி தரவேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா மகேந்திரனிடம், மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், ராயல் காதர் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட வணிகர் அணி செயலாளர் ஜான் முகம்மது தலைமையில் கிளை செயலாளர் சதாம் உசேன், ம.ஜ.க. வளைகுடா பொறுப்பாளர் நாச்சிகுளம் ரசீது, தீன்முகம்மது, ஜியாவுதீன், ராசித் ஆகியோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ரமலான் நோன்பு மாதத்தில் குடிதண்ணீர், தெருவிளக்கு, சுகாதாரம் ஆகிய அடிப்படை வசதிகளை தடையின்றி வழங்க கோரி ம.ஜ.க.வினர் மனு அளித்தனர்.

    புனிதமிகு ரமலான் நோன்பு இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது.

    நமது ஊராட்சியில் உள்ள பள்ளி வாசல்களில் வழக்கம்போல் இவ்வருடமும் தொடர்ந்து ஒருமாத காலத்திற்கு நோன்பு கஞ்சி காய்ச்சும் பணிகளும், இரவு நேர வணக்க வழிபாடுகளும் சிறப்பாக நடைபெற உள்ளன.

    அதேபோன்று வீடுகளிலும் ஒருமாத காலம் நோன்பு நாட்களை கொண்டாட உள்ளனர். எனவே ஊராட்சிக்கு உட்பட்ட அணைத்து பள்ளிவாசல்களிலும் தினமும் நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்கு தங்குதடையின்றி குடி தண்ணீர் கிடைக்க வேண்டும்.

    வீடுகளுக்கு வழங்கப்படும் குடிதண்ணீரையும் உரிய நேரங்களில் தட்டுப்பாடின்றி வழங்கிட வேண்டும்.

    பழுதான தெருவிளக்கு கம்பங்களில் புதிய மின்விளக்குகளை மாற்றியும் இருள் சூழ்ந்த பகுதிகளில் புதிய மின்விளக்குகளை பொறுத்தியும் வெளிச்சத்தை ஏற்படுத்தி தரவேண்டும்.

    அனைத்து பள்ளிவாசல் வளாக பகுதிகளிலும் தெரு ஓரங்களிலும் குப்பைகளை அகற்றி தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். கிருமி நாசினிகளை தெளித்து சுகாதார பகுதியாக்கி தரவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×