சீர்காழியில், மெகா தூய்மை பணி தொடக்கம்

தேங்காய் குப்பைகள் அகற்றப்பட்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.சனிக்கிழமையில் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் சுகாதார பணிகள் நடைபெறும்.
தூய்மை பணிகள் தொடங்கப்பட்டது.
தூய்மை பணிகள் தொடங்கப்பட்டது.
Published on

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் மெகா தூய்மை பணி தொடக்க விழா நடைபெற்றது.

நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, நகராட்சி ஆணையர் வாசுதேவன் ஆகியோர் தூய்மை பணியை தொடங்கி வைத்தனர்.

பேருந்து நிலையம் பகுதி மற்றும் உள், வெளி வளாகம் முழுவதும் தேங்காய் குப்பைகள் அகற்றப்பட்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

இதேபோல் வரும் சனிக்கிழமையில் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளதாக நகராட்சி தலைவர் துர்கா பரமேஸ்வரி, ஆணையர் வாசுதேவன் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com