search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவிதா"

    • 2010-ல் ராஜ்யசபாவால் அங்கீகரிக்கப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 2023-ல் கூட மக்களவையில் ஒப்புதல் பெறவில்லை.
    • பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக டிசம்பர் மாதம் டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளேன்.

    திருப்பதி:

    தெலுங்கானா முதல்அமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா எம்.எல்.சி.யாக உள்ளார். இவர் பெண்கள் இட ஒதுக்கீடு சட்ட மசோதாவுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பி.ஆர்.அம்பேத்கர், சட்ட மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று வாதிட்டார், ஆனால் நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து எந்த ஒரு அரசியல் கட்சியும் இந்தப் பிரச்சினையை போதுமான அளவு கவனிக்கவில்லை. 2010-ல் ராஜ்யசபாவால் அங்கீகரிக்கப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 2023-ல் கூட மக்களவையில் ஒப்புதல் பெறவில்லை.

    அறுதிப் பெரும்பான்மையை வைத்துள்ள நரேந்திர மோடி அரசு ஏன் மசோதாவை நிறைவேற்றவில்லை. "ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் எனது வேண்டுகோள் என்ன வென்றால், அவர்கள் இதை பொது பிரச்சினை யாக பார்க்க வேண்டும்.

    இது ஒட்டுமொத்த பெண்களுக்கும் கவலை அளிப்பதாக உள்ளது.இது நம் நாட்டில் உள்ள 70 கோடி பெண்களுக்கும் பொருந்தும். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக டிசம்பர் மாதம் டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளேன்.

    போராட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, பாஜகவின் ஸ்மிருதி , டிகே அருணா ஆகியோர் பங்கேற்க அழைப்பு விடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இயக்குனர் கவிதா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஆதாரம்’.
    • இப்படத்தின் டிரைலர் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

    அறிமுக இயக்குனர் கவிதா இயக்கத்தில் புதுமுக நடிகர் அஜித் விக்னேஷ் கதாநாயகனாக நடிக்கு திரைப்படம் 'ஆதாரம்'. இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா நடித்திருக்கிறார். மேலும், ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், கதிரவன் பாலு, அட்ரஸ் கார்த்திக் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    மேட்டினி ஃபோல்க்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.பிரதீப்குமார் மற்றும் ஆப்ஷா மைதீன் தயாரிக்கும் இந்த படத்திற்கு வசனங்களை கவிதா மற்றும் ராசி தங்கதுரை இணைந்து எழுதியுள்ளனர். என்.எஸ்.ராஜேஷ் குமார் மற்றும் ஶ்ரீவட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததையடுத்து படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


    இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'ஆதாரம்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இந்த டிரைலர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.



    • கவிதாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி கடந்த 16-ந் தேதி விசாரணை நடத்தினார்கள்.
    • அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாக கவிதா தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறது. டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா உள்பட பலர் இந்த வழக்கில் கைதாகி உள்ளனர்.

    இந்த வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் 15-ந் தேதி அமலாக்கத்துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய இருந்தது. அதில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகள் கவிதா, தொழில் அதிபர்கள் சரத் ரெட்டி, சீனிவாசலு ரெட்டி உள்ளிட்டோர் பங்குதாரர்களாக உள்ள சவுத் குரூப் நிறுவனத்திடம் இருந்து சில நபர்கள் மூலம் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.100 கோடி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கவிதா விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார்.

    இதேபோல சி.பி.ஐ. தரப்பிலும் கவிதா உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பேரில் கடந்த டிசம்பர் 12-ந்தேதி ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் சி.பி.ஐ. 7 மணி நேரம் விசாரணை நடத்தியது.

    இதைத்தொடர்ந்து கவிதாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி கடந்த 16-ந் தேதி விசாரணை நடத்தினார்கள்.

    அமலாக்கத்துறை அலுவலகத்தில் சுமார் 9 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    2-வது கட்ட விசாரணைக்காக அவர் கடந்த 16-ந் தேதி ஆஜராக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியது. அனால் அவர் ஆஜராகவில்லை. அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாக கவிதா தெரிவித்தார். இதை அமலாக்கத்துறை நிராகரித்தது.

    இன்று (20-ந் தேதி) அவர் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை உத்தரவிட்டு இருந்தது.

    அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராவதற்காக கவிதா தனது குடும்பத்தினருடன் சிறப்பு விமானம் மூலம் நேற்று ஐதராபாத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.

    இன்று காலை அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு எம்.எல்.சி.யும், பாரத் ராஷ்டிரிய சமிதியை சேர்ந்த வருமான கவிதா ஆஜரானார். டெல்லியின் மதுபான கொள்கை முறைகேடு குறித்து அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட இதுவரை 12 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
    • அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று கவிதா ஆஜராகவில்லை. ஆஜராவதில் இருந்து அவர் விலக்கு கேட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் 2021-22-ம் ஆண்டுக்கான மதுபான கொள்கையை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் மற்றும் ஊழல் நடைபெற்றதாகக் குற்றசாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

    இந்த வழக்குத் தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட இதுவரை 12 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

    இந்நிலையில், குறிப்பிட்ட குழுவிடம் இருந்து ஆம் ஆத்மி தலைவர்கள் சார்பில், அக்கட்சியைச் சேர்ந்த விஜய் நாயர் என்பவர் சுமார் ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாகவும், அந்தக் குழுவில் அரவிந்தோ பார்மா நிறுவனர் சரத் ரெட்டி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும் எம்.எல்.சி.யுமான கவிதா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. மகுன்ட ஸ்ரீநிவாசுலு ரெட்டி உள்ளிட்டோர் இடம் பெற்றதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டெல்லியில் மது வியாபார சந்தையின் பெரும் பங்கு அந்தக் குழுவுக்குக் கிடைக்க, ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.100 கோடி வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

    இந்த வழக்குத் தொடர்பாக கடந்த டிசம்பரில் கவிதாவிடம் சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டது. கடந்த மார்ச் 11-ந் தேதி அவரிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. அவரை மீண்டும் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் வழங்கியுள்ளது. இந்த சம்மனுக்கு எதிராகவும், தன்னை கைது நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்கவும் கோரி, உச்சநீதிமன்றத்தில் கவிதா மனுதாக்கல் செய்தார். அதனை அவசர வழக்காக விசாரிக்குமாறு அவர் கோரினார்.

    இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு புதன்கிழமை கவனத்தில் எடுத்துக்கொண்டது. அப்போது அமலாக்கத்துறை சம்மனுக்குத் தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், கவிதாவின் மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் மறுத்து விட்டனர். அந்த மனுவை மார்ச் 24-ந் தேதி விசாரிக்க நீதிபதிகள் தீர்மானித்து உள்ளனர்.

    இந்த நிலையில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று கவிதா ஆஜராகவில்லை. ஆஜராவதில் இருந்து அவர் விலக்கு கேட்டுள்ளார்.

    இதனால் கவிதாவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பும் என்று தெரிகிறது.

    • டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் 9 மணிநேரம் விசாரணை நடந்து முடிந்தது.
    • வரும் 16-ம் தேதி ஆஜராக கவிதாவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அம்மாநில துணை முதல் மந்திரியாக இருந்த மணீஷ் சிசோடியாவை சமீபத்தில் சி.பி.ஐ. கைது செய்தது. அதேபோல் அவரை அமலாக்கத்துறையும் கைது செய்துள்ளது.

    இந்த வழக்கில் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகரராவ் மகளும், பாரத ராஷ்டிரீய சமிதி கட்சியின் எம்.எல்.சி.யுமான கவிதா மீது குற்றம் சாட்டப்பட்டது. மதுபான கொள்கையில் தயாரிப்பாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் அளித்த சலுகைகளுக்காக கவிதா உள்ளிட்டோர் அங்கம் வகிக்கும் சவுத் குரூப் சார்பில் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு லஞ்சப்பணம் தரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே கவிதாவிடம் விசாரணை நடத்த கடந்த 9-ம் தேதி ஆஜராகும்படி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் தான் 11-ம் தேதி ஆஜராகுவதாக கவிதா அமலாக்கத்துறை இயக்குனரகத்திடம் தெரிவித்தார். அதன்படி கவிதா இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் மதுபான கொள்கை முறைகேட்டில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். ஏறக்குறைய அமலாக்கத்துறை 9 மணிநேரம் அவரிடம் விசாரண நடத்தி, கேள்விகளை கேட்டு பதில்களை பதிவு செய்து கொண்டது. அதன்பின் அவர் தனது வாகனத்தில் இரவில் விசாரணை முடிந்து புறப்பட்டுச் சென்றார்.

    இந்நிலையில், டெல்லி மதுபான கொள்கை பணமோசடி வழக்கில் வரும் 16-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என கவிதாவுக்கு அமலாக்கத்துறை சார்பில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.

    • மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி சேரவேண்டும் என்றும் கவிதா தெரிவித்தார்.
    • அமலாக்கத்துறை வழக்கில் கவிதா நாளை மறுநாள் ஆஜராக உள்ளார்

    புதுடெல்லி:

    மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை அமல்படுத்தக் கோரி நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகளும், பாரத் ரஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கவிதா டெல்லி வந்துள்ளார்.

    டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சி இனி தேசிய கட்சி அல்ல என்றும், அது எப்போது தன் ஆணவத்தை விட்டுவிட்டு யதார்த்தத்தை எதிர்கொள்ளுமோ? என்றும் குறிப்பிட்டார்.

    காங்கிரஸ் ஒரு அணியின் வீரராக (டீம் பிளேயர்) இருக்க வேண்டும், பாஜகவை தோற்கடிக்க வேண்டுமானால் மாநில கட்சிகளுடன் கூட்டணி சேரவேண்டும், என்றும் கவிதா தெரிவித்தார்.

    டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கவிதாவிடம் சி.பி.ஐ. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணை நடத்தியது. இதேபோல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நாளை மறுநாள் இந்த வழக்கின் விசாரணைக்காக கவிதா ஆஜராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×