search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கராத்தே போட்டி"

    • சேலம் மாவட்ட ஜீ தோகு காய்-சிவாலயா ஸ்போர்ட்ஸ் கராத்தே அகாடமியைச் சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
    • அதில் 8 மாணவர்கள் தங்கப் பதக்கங்கள் மற்றும் 8 மாணவர்கள் வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 13 மாணவர்கள் வெண்கல பதக்கங்கள் மற்றும் 12 மாணவ,மாணவிகள் இப்போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளனர்.

    சேலம்:

    சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் சேலம் மாவட்ட ஜீ தோகு காய்-சிவாலயா ஸ்போர்ட்ஸ் கராத்தே அகாடமியைச் சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

    இதில் சப்-ஜூனியர் மற்றும் கேடட் ஜூனியர் கட்டா பிரிவில் 41 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அதில் 8 மாணவர்கள் தங்கப் பதக்கங்கள் மற்றும் 8 மாணவர்கள் வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 13 மாணவர்கள் வெண்கல பதக்கங்கள் மற்றும் 12 மாணவ,மாணவிகள் இப்போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஜீ தோ காய் கராத்தே சங்கத்தின் இந்திய தலைவர் தியாகராஜன் மற்றும் இந்திய பொதுச்செயலாளர் முத்துராஜு (உலக கராத்தே நடுவர்) மற்றும் சேலம் மாவட்ட ஜீ தோகு காய்- சிவாலயா ஸ்போர்ட்ஸ் கராத்தே இயக்குனர் சதீஷ்குமார் ராஜி மற்றும் பயிற்சியாளர் சரவணன் வாழ்த்து தெரிவித்தனர்.

    • மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடந்தது.
    • மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே தனியார் கல்லூரியில் உலக சோட்டோகான் கராத்தே பெடரேஷன் அமைப்பின் சார்பில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடந்தது. 6 வயது முதல் 20 வயது வரை பங்கேற்ற மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

    மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்தப் போட்டியை உலக சோட்டோகான் பெடரேஷன் அமைப்பின் தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். செயலாளர் பால்பாண்டி முன்னிலை வைத்தார். துணைத் தலைவர் அவனமுத்து வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கேரளாவைச் சேர்ந்த விபூஷணன் பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

    செயற்குழு உறுப்பினர்கள் நவாஸ்ஷெரிப், சுபாஷ், விக்னேசன், ஹரிகரன் ஆகியோர் நன்றி கூறினர்.

    • தமிழகம், ஆந்திரா,கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
    • 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    பல்லடம் :

    பல்லடத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்றனர்.இதுகுறித்து கராத்தே பயிற்சியாளர் சரவணன் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில்,கோஜிரியோ கராத்தே அமைப்பின் சார்பில், தேசிய கராத்தே போட்டிகள் நடைபெற்றது.இந்தப் போட்டிகளில் தமிழகம், ஆந்திரா,கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கட்டா,குமிட்டோ,உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்லடம் வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு 8 தங்கப்பதக்கம்,10 வெள்ளிப்பதக்கம், 16 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கன்சன் இந்தியா ட்ரஸ்ட் மேலாளர் சதிஷ்குமார், கராத்தே பயிற்சியாளர் சரவணன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உள்பட பலர் மாணவ மாணவிகளை வாழ்த்தினர்.

    • கோவை கராத்தே பள்ளி வீரர், வீராங்கனையர் அதிகப்படியான இடங்களில் வென்றனர்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    உடுமலை :

    உடுமலை ஸ்கூல் ஆப் கோஜூ ரியு கராத்தே பள்ளி சார்பில் தேசிய அளவிலான கராத்தே போட்டி ஸ்ரீ ஹரி நாராயணா திருமணமண்டபத்தில் நடந்தது.பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களைச்சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். உடுமலை சார்பு நீதிமன்ற நீதிபதி மணிகண்டன், குற்றவியல் மாஜிஸ்திரேட் விஜயகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    முன்னதாக கராத்தே பயிற்சியாளர் அருள்குமார் வரவேற்றார். போட்டியை, நகராட்சித்தலைவர் மத்தீன், டி.ஆர்.ஓ., ஜஸ்வந்த்கண்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். அதன்படி 10 முதல் 11 வயது மாணவிகள் சண்டை பிரிவில் ஜெய்சாய்ஸ்ரீ முதலிடம், அக்சயா இரண்டாமிடம், ஹர்சாஸ்ரீ மூன்றாமிடம் வென்றனர்.இதேபோல 11 வயது மாணவர் சண்டைப்பிரிவில் ஜெய்ஆதித்யா முதலிடம், அஸ்வின்ராஜ் இரண்டாமிடம், அபிேஷக் மூன்றாமிடம் பெற்றனர். குறிப்பாக, கோவை ஹாயாஷிகா கராத்தே பள்ளி வீரர், வீராங்கனையர் அதிகப்படியான இடங்களில் வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.வக்கீல் சிதம்பரசாமி, செவ்வேல், டாக்டர் வாசுதேவன், உடுமலை ராயல்ஸ் லயன்ஸ் சங்கத்தலைவர் யோகானந்த், ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் பிரதீபா நன்றி கூறினார்.

    • மாணவர்களுக்கு கலர் பெல்ட் தேர்வுக்கான கராத்தே போட்டி நடைபெற்றது.
    • கேரள மாநில தலைமை பயிற்சியாளர் மாதேஷ் தேர்வினை கண்காணித்தார்.

    திருப்பூர் :

    திருப்பூரில் இன்று ஹிரோசிஹா அமைப்பை சேர்ந்த மாணவர்களுக்கு கலர் பெல்ட் தேர்வுக்கான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் பல்லடம், காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கராத்தே பயிற்சி பெறும் மாணவர்கள் பங்கேற்றனர்.

    இந்நிகழ்ச்சிக்கு ஹிரோசிஹா கராத்தே பயிற்சி பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கேரள மாநில தலைமை பயிற்சியாளர் மாதேஷ் தேர்வினை கண்காணித்தார். கேரளாவில் கடந்த மாதம் நடைபெற்ற கருப்பு பட்டை தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 

    • தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
    • டெல்லி நடைபெறும் தேசிய அளவில் கராத்தே போட்டியில் பங்கு கொள்ள இருப்பதாக தென்னிந்திய கராத்தே அசோசியேஷன் தலைவர் நடராஜ் தெரிவித்தார்.

    தருமபுரி,

    தருமபுரியில் தென்னிந்திய கராத்தே அசோசியேசன் தலைவர் கிராண்ட் மாஸ்டர் கியோ சி நடராஜ் முன்னிலையில் கராத்தே பெல்ட் டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

    போட்டியில் மாணவ, மாணவியர் கலந்து கொண்டு கட்டா டீம், கட்டா மற்றும் குமித்தே பிரிவுகளில் தேர்ச்சி பெற்றனர்.

    தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு கிராண்ட் மாஸ்டர் கியோஷி நடராஜ், கிருஷ்ணகிரி ஷிகான் மாரியப்பன் ஆகியோர் பெல்ட் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

    சென்ற மாதம் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் டெல்லி நடைபெறும் தேசிய அளவில் கராத்தே போட்டியில் பங்கு கொள்ள இருப்பதாக தென்னிந்திய கராத்தே அசோசியேஷன் தலைவர் நடராஜ் தெரிவித்தார்.

    • கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • சென்னை ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

    திருப்பூர் :

    சென்னை ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி சென்னை மான்போர்டு ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இதில் கேரளா , கர்நாடகா,தெலுங்கானா , மகாராஷ்டிரா,பாண்டிச்சேரி , அசாம் போன்ற பல மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் திருப்பூர் பாண்டியன் நகர் அரசு பள்ளி மாணவர்கள் ராகவ் பெருமாள் மற்றும் லலித் குமார் இருவரும் தங்கப்பதக்கம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். இதையடுத்து அவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் அய்யர் மற்றும் கராத்தே பயிற்சியாளர் நாட்ராயன் ,மாணவர்கள் ,பெற்றோர்கள் பாராட்டினர்.

    ×