மாவட்ட அளவிலான கராத்தே போட்டி

மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடந்தது. மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
மாவட்ட அளவிலான கராத்தே போட்டி
Published on

திருமங்கலம்

திருமங்கலம் அருகே தனியார் கல்லூரியில் உலக சோட்டோகான் கராத்தே பெடரேஷன் அமைப்பின் சார்பில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடந்தது. 6 வயது முதல் 20 வயது வரை பங்கேற்ற மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்தப் போட்டியை உலக சோட்டோகான் பெடரேஷன் அமைப்பின் தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். செயலாளர் பால்பாண்டி முன்னிலை வைத்தார். துணைத் தலைவர் அவனமுத்து வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கேரளாவைச் சேர்ந்த விபூஷணன் பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

செயற்குழு உறுப்பினர்கள் நவாஸ்ஷெரிப், சுபாஷ், விக்னேசன், ஹரிகரன் ஆகியோர் நன்றி கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com