என் மலர்
உள்ளூர் செய்திகள்

தங்கம் வென்ற மாணவ, மாணவிகளை படத்தில் காணலாம்.
மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் 8 மாணவ-மாணவிகள் தங்கம் வென்று சாதனை
- சேலம் மாவட்ட ஜீ தோகு காய்-சிவாலயா ஸ்போர்ட்ஸ் கராத்தே அகாடமியைச் சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
- அதில் 8 மாணவர்கள் தங்கப் பதக்கங்கள் மற்றும் 8 மாணவர்கள் வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 13 மாணவர்கள் வெண்கல பதக்கங்கள் மற்றும் 12 மாணவ,மாணவிகள் இப்போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளனர்.
சேலம்:
சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் சேலம் மாவட்ட ஜீ தோகு காய்-சிவாலயா ஸ்போர்ட்ஸ் கராத்தே அகாடமியைச் சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
இதில் சப்-ஜூனியர் மற்றும் கேடட் ஜூனியர் கட்டா பிரிவில் 41 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அதில் 8 மாணவர்கள் தங்கப் பதக்கங்கள் மற்றும் 8 மாணவர்கள் வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 13 மாணவர்கள் வெண்கல பதக்கங்கள் மற்றும் 12 மாணவ,மாணவிகள் இப்போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஜீ தோ காய் கராத்தே சங்கத்தின் இந்திய தலைவர் தியாகராஜன் மற்றும் இந்திய பொதுச்செயலாளர் முத்துராஜு (உலக கராத்தே நடுவர்) மற்றும் சேலம் மாவட்ட ஜீ தோகு காய்- சிவாலயா ஸ்போர்ட்ஸ் கராத்தே இயக்குனர் சதீஷ்குமார் ராஜி மற்றும் பயிற்சியாளர் சரவணன் வாழ்த்து தெரிவித்தனர்.