search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karatae Competation"

    • கோவை கராத்தே பள்ளி வீரர், வீராங்கனையர் அதிகப்படியான இடங்களில் வென்றனர்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    உடுமலை :

    உடுமலை ஸ்கூல் ஆப் கோஜூ ரியு கராத்தே பள்ளி சார்பில் தேசிய அளவிலான கராத்தே போட்டி ஸ்ரீ ஹரி நாராயணா திருமணமண்டபத்தில் நடந்தது.பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களைச்சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். உடுமலை சார்பு நீதிமன்ற நீதிபதி மணிகண்டன், குற்றவியல் மாஜிஸ்திரேட் விஜயகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    முன்னதாக கராத்தே பயிற்சியாளர் அருள்குமார் வரவேற்றார். போட்டியை, நகராட்சித்தலைவர் மத்தீன், டி.ஆர்.ஓ., ஜஸ்வந்த்கண்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். அதன்படி 10 முதல் 11 வயது மாணவிகள் சண்டை பிரிவில் ஜெய்சாய்ஸ்ரீ முதலிடம், அக்சயா இரண்டாமிடம், ஹர்சாஸ்ரீ மூன்றாமிடம் வென்றனர்.இதேபோல 11 வயது மாணவர் சண்டைப்பிரிவில் ஜெய்ஆதித்யா முதலிடம், அஸ்வின்ராஜ் இரண்டாமிடம், அபிேஷக் மூன்றாமிடம் பெற்றனர். குறிப்பாக, கோவை ஹாயாஷிகா கராத்தே பள்ளி வீரர், வீராங்கனையர் அதிகப்படியான இடங்களில் வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.வக்கீல் சிதம்பரசாமி, செவ்வேல், டாக்டர் வாசுதேவன், உடுமலை ராயல்ஸ் லயன்ஸ் சங்கத்தலைவர் யோகானந்த், ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் பிரதீபா நன்றி கூறினார்.

    • மாணவர்களுக்கு கலர் பெல்ட் தேர்வுக்கான கராத்தே போட்டி நடைபெற்றது.
    • கேரள மாநில தலைமை பயிற்சியாளர் மாதேஷ் தேர்வினை கண்காணித்தார்.

    திருப்பூர் :

    திருப்பூரில் இன்று ஹிரோசிஹா அமைப்பை சேர்ந்த மாணவர்களுக்கு கலர் பெல்ட் தேர்வுக்கான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் பல்லடம், காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கராத்தே பயிற்சி பெறும் மாணவர்கள் பங்கேற்றனர்.

    இந்நிகழ்ச்சிக்கு ஹிரோசிஹா கராத்தே பயிற்சி பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கேரள மாநில தலைமை பயிற்சியாளர் மாதேஷ் தேர்வினை கண்காணித்தார். கேரளாவில் கடந்த மாதம் நடைபெற்ற கருப்பு பட்டை தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 

    ×