search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டுபிடிப்பு"

    • தென்னை,வாழை போடப்பட்டும், பராமரிக்கப்பட்டும் வருகிறது.
    • பொதுமக்கள் எளிமையாகவும் பாதுகாப்பாகவும் நீராடும் வகையில் படித்துறை கட்டப்பட்டு வருகிறது.

    உடுமலை:

    கொழுமம் வீரசோழி ஸ்வரர் திருக்கோயில் தாண்டேசுவரர் கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவிற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. கோயிலைச் சுற்றிலும் சுமார் 10 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் தென்னை,வாழை போடப்பட்டும் பராமரிக்க ப்பட்டும் வருகிறது.

    வரலாற்றுச்சிறப்புமிக்க ஆன்பொருநை எனும் அமராவதி நதிக்கரையோரம், படித்துறை கட்டுவதற்கா கவும், பொதுமக்கள் எளிமையாகவும் பாதுகாப்பாகவும் நீராடும் வகையில் படித்துறை கட்டப்பட்டு வருகிறது.அவ்வாறு படித்துறை கட்டுவதற்காக அமராவதி ஆற்றங்கரையில் முட்புதர்களும் கால் வைக்க முடியாத அளவிற்கு முள்வேலிகள் இருந்தன. இவையெல்லாம் அகற்றி சுற்றிலும் காம்பவுண்ட் கட்டப்பட்டு வருகிறது.அவ்வாறு நதிக்கரையில் தோண்டும்போது வீரசோழர் காலத்திய கல்வெட்டு ஒன்று கிடைக்கப்பெற்றது. இதனை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் மதிப்புரு தலைவரும் தொல்லியல் ஆய்வறிஞருமான முனைவர் மூர்த்தீஸ்வரி அனுப்பப்பட்டது. முனைவரும் உடனடியாக இந்தக் கல்வெட்டு படித்து செய்தி அனுப்பினார். இந்த கல்வெட்டு குறித்து முனைவர் மூர்த்தீஸ்வரி கூறுகையில்; இங்கு ஏற்கனவே இடங்கை வலங்கை குறித்தான கல்வெட்டுகள் இங்கு தமிழக அரசின் தொல்லியல் துறையால் ஆவணப்படு த்தப்பட்டுள்ளதையும் மீண்டும் இதனை வலியுறுத்தும் பொருட்டு சோழ மன்னனின் ஆட்சியில் இடங்கை தொண்ணூற்று எட்டு பொதுமக்கள், வரி செலுத்து வேண்டும் என்று கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. இறையிலி நிலங்கள், மன்றாட்டு ,கடமை, மஞ்சாடி, இறை, புரவு, சித்தாயம், எல்லை, உகவை, பொலிவு, பொற்பூ, சாமந்தபேறு, மன்றுபாடு, தெண்டக்குற்றம், கீழ்புரவு, மயிற்கானம். ஓட்டச்சு, அந்தராயம், காணிக்கை, மண்டலப்பேறு, முதன்மை ப்பேறு, சந்துவிக்கிரகபேறு, ஓலைகாணம், ஓலைச்சி எனப்பல்வேறு பெயர்களில் இங்கு பொதுமக்களிடம் வரியாக வசூலிக்கப்பெற்றதை கல்வெட்டு வழி அறிய முடிகிறது. மீண்டும் அதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த சோழர்காலத்து கல்வெட்டு நமக்கு உறுதிப்படுத்துகிறது. இதை தொல்லியல் ஆய்வறிஞர் முனைவர் மூர்த்தீஸ்வரி தெரிவித்தார்.

    • ராஜபாளையம் சஞ்சீவி மலையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
    • இத்தகைய பாரம்பரியமிக்க வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகரில் பிரதானமாக அமைந்துள்ள சஞ்சீவி மலை பல்வேறு புராண கதைகளோடு இணைத்து செவிவழி கதையாக கூறப்படுகிறது. ராஜபாளையம் இயற்கை ஆர்வல ர்களான வெங்க டேஷ், பிரகாஷ்குமார் ஆகியோர் சஞ்சீவி மலையில் அமைந்துள்ள பாறை ஓவியங்கள் குறித்து தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியரும், தொல்லியல் ஆர்வலருமான கந்தசாமி தலைமையில் களப்பணி மேற்கொள்ளப்பட்டது.

    இதுகுறித்து பேராசிரியர் கந்தசாமி கூறியதாவது:-

    ராஜபாளையம் நகரின் பிரதானமாக அமைந்துள்ள சஞ்சீவி மலையில் பல மூலிகைகள் நிறைந்த பகுதியாகவும், புராண காலத்தோடு இணைத்து பெருமையுடன் கூறப்பட்டு வருகிறது. மலை உச்சியில் சஞ்சீவிநாதர் மற்றும் முருகன் ஆலயம் அமைந்துள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் மழை பெய்ய ஊர் மக்கள் ஒன்று கூடி சஞ்சீவி மலைக்குச் சென்று மழை பெய்வதற்காக கடவுளைக் வேண்டிக்கொண்டு மேளதா ளத்துடன் ஆரவாரமாக பூஜை செய்து ஒரு கல்லை கீழே உருட்டி விடுவார்கள்.

    பலமுறை அன்று இரவே மழை பெய்ததாகவும் கதைகள் கூறுகின்றன. சஞ்சீவி மலையில் தேன் தட்டுப்பாறையின் அடிவாரத்தில் காணப்படும் பாறை ஓவியங்கள் வெண்சாந்து கொண்டு வரையப்பட்டுள்ளன. பாறை ஓவியத்தில் ஆயுதங்களோடு மனிதன் நிற்பது போன்றும், காட்டெருமை மீது ஒரு மனிதன் அமர்ந்திருப்பது போன்று காணப்படுகிறது. 2, 3 பேருக்கு மேல் குழுவாக நடன காட்சிகள் போன்றும் வரையப்பட்டுள்ளது. மேடையின் மீது அமர்ந்த ஒருவருக்கு நீண்ட உயரமான குடை போன்ற அமைப்புடன் வரையப்பட்டுள்ளது. படங்கள் தெளிவில்லாமல் முழுமை அடையாததால் ஆரம்ப காலத்தில் வரையப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    விலங்குகள் மற்றும் மனிதர்கள் கோட்டு ருவங்களாக வரைய ப்பட்டுள்ளன. இங்கு காணப்படும் பாறை ஓவியங்களில் விலங்குகள் அதிகமாக வரையப்பட்டுள்ளது. அத்துடன் மனிதனின் சண்டை காட்சிகள் குறைவாக வரையப்பட்டுள்ளன. எனவே விலங்குகள் அதிகமாக வரையப்ப ட்டுள்ளதால் தொடக்க காலகட்டமாகும். மனிதனின் சண்டைக் காட்சிகள் அடுத்தடுத்த காலகட்டங்களில் வரைய ப்பட்டிருக்க வேண்டும். பல காலகட்டங்களாக இப்பாறை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவற்றில் முக்கோண அமைப்புகள், குறியீடுகள் மற்றும் பல சின்னங்கள் காணப்படுகின்றன. இவற்றில் குறியீட்டு உருவங்களை முழுமையாக கணிக்க இயலவில்லை. நீண்ட நெடிய பாறை முழுவதும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் பல இடங்களில் அழிந்து காணப்படுகிறது.

    எனவே இந்த வெண்சாந்து பாறை ஓவிய அமைப்பை உற்று நோக்கும் போது காலத்தால் சற்று முற்பட்டதாக தெரிகிறது. தமிழகத்தில் பல இடங்களில் வெண்சாந்து ஓவியங்கள் பெருங்கற்காலத்தில் வரையப்பட்டுள்ளது. எனவே இந்த பாறை ஓவியங்கள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்ப ட்டதாக கருதப்படுகிறது. ஆரம்ப காலகட்டங்களில் செஞ்சாந்து ஓவியங்கள் வரைந்து அதற்கு மேல் வெண்சாந்து ஓவியங்கள் தீட்டப்பட்டு இருக்கிறது.

    இப்பாறை ஓவிய ங்கள் எழுத்துக்கள் தோன்றுவதற்கு முன் ஓவிய எழுத்துக்களாக வரையறுக்கப்படுகிறது. தமிழகத்தின் பல இடங்களில் அமைந்துள்ள பாறை ஓவியங்கள் பெரும்பாலும் வழிபாட்டுத் தலங்களாக இருந்து வருகிறது ஏனெனில் வரையப்பட்டுள்ள மனிதர்களை மூதாதையர் வழிபாடாக மக்கள் இன்றளவும் பல்வேறு மலைகளில் வணங்கி வருகிறார்கள். சஞ்சீவி மலை தெற்கு மலையடிப்பட்டி பகுதியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளனர். சஞ்சீவி மலை பாறை ஓவியங்கள் பெருங்கற்கால பண்பாட்டோடு தொடர்பு டையதாக கருதப்படுகிறது.

    முருகன் கோவில் அருகே உள்ள பாறையில் அலங்காரத்துடன் விஷ்ணுவின் முழு கோட்டு ருவம் மிக நேர்த்தியாக வரையப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே பாறை ஒன்றில் சூரிய வட்டம் ஒன்று பெண் உருவில் செதுக்கப்பட்டுள்ளது. சஞ்சீவி மலையில் அமைந்துள்ள இப்பாறை ஓவியத்தை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து ஓவியத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்.

    பரந்துபட்ட இந்த மலையில் மேலும் பல தொல்லியல் தடயங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இத்தகைய பாரம்பரியமிக்க வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருச்சி பாலபாரதி, பாலமுரளி ஆகியோரும் பாறை ஓவியத்தை ஆய்வு செய்தனர்.

    • காணாமல்போன 131 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது
    • ஏமாந்தவர்களின் பணம் ரூ.2,46,100 மீட்டுள்ளனர்

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் செல்போன்கள் காணாமல் போனதாக பொதுமக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் ரூ.26 லட்சம் மதிப்புள்ள 131 போன்களை கரூர் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் செல்போனில் வரும் லிங்க், யூடியூப் விளம்பரம், ஆன்லைன் மூலம் நடந்த மோசடிகளில் ஏமாந்தவர்களின் பணம் ரூ.2,46,100 மீட்டுள்ளனர். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி. சுந்தரவதனம் சம்பந்தப்பட்டவர்களிடம் செல்போன்கள் மற்றும் தொகையை இன்று (ஆக. 30) காலை 11 மணிக்கு உரியவர்களிடம் ஒப்படைக்கிறார்.

    • ஆய்வுக்கூடத்தில் பல்வேறு உபகரண பொருட்கள் தரப்பட்டுள்ளது.
    • அனைத்து பொருட்களையும் கையாள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில் அடல் டிங்கரிங் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.அறிவியல் சார்ந்த பொறியியல், மின்னியல் மற்றும் ரோபோட்டிக் துறையில் மாணவர்களின் சிந்தனைகளை தூண்டவும், பற்பல கண்டுபிடிப்புகளில் ஈடுபட ஊக்கப்படுத்தவும் இந்த ஆய்வுக்கூடத்தில் பல்வேறு உபகரண பொருட்கள் தரப்பட்டுள்ளது.6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இந்த ஆய்வகம் மூலம் உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அனைத்து உபகரணங்களையும் கையாள வழிவகை செய்யப்பட்டுள்ளது.முதல் இரண்டு வகுப்புகளிலேயே மாணவர்கள் சுயமான தானியங்கி சென்சார் மூலம் திறந்து மூடும் கதவுகளை கொண்ட வீடு, தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரம்பியதை அறிவிக்கும் அலாரம், மனிதர்கள் வீட்டுக்குள் நுழைவதை கண்டறியும் தானியங்கி சென்சார் போன்றவற்றை வடிவமைத்துள்ளனர்.

    ஒவ்வொரு மாதமும் பிரத்யேகமாக உரிய நிபுணர்கள் மூலம் அனைத்து பொருட்களையும் கையாள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. ஆய்வுக்கூடத்தை முதன்மைக்கல்வி அலுவலர் திருவளர்செல்வி பார்வையிட்டார். புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி, செயல்முறை விளக்கம் அளித்த மாணவர்களை பாராட்டினார்.பள்ளி தலைமையாசிரியர் பழனிசாமி, இயற்பியல்துறை முதுகலை ஆசிரியர் கண்ணன், பள்ளி மேலாண்மைக்குழு துணைத்தலைவர் ஜெயமோகனகிருஷ்ணன், பி.டி.ஏ., துரைசாமி, நஞ்சப்பா பள்ளி முன்னாள் மாணவர்கள் அமைப்பின் நிர்வாகிகள் செந்தில்குமார், கிரீஷ், கிருஷ்ணமூர்த்தி, சண்முகம், ஸ்டாலின் மணிக்குமார், ஜெகன் அலெக்ஸ், ராமசாமி, ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சமணர் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
    • இவ்வழக்கம் 10-ம் நூற்றாண்டுவரை தொடர்ந்தது என்பதற்கு இப்போதைய திருப்ப ரங்குன்றம் கல்வெட்டு கண்டுபிடிப்பு சான்றாக அமைகிறது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் மலை மேல் சிக்கந்தர் தர்காவின் பின்புறம் உள்ள மலைச்சரிவில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணத்துறவியர் வடக்கிருந்து உயிர் நீத்த செய்தியை கூறும் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டு கிரந்தமும் தமிழும் கலந்து எழுதப்பட்டு ள்ளது.

    இதனைப் பாண்டி யநாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் ஆய்வாளர்கள் உதயக்குமார், முத்துபாண்டி, முருகன் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். அரிட்டநேமிபடாரர் என்னும் சமணத்துறவி சல்லேகனை என்று கூறப்படும் வடக்கிருந்து நோன்பு நோற்று உயிர்நீத்த இடம் என்பதைக் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. அரிட்டநேமிபடாரர் நிசிதிகை இது' என்பது இக்கல்வெட்டின் பாடம். முன் இரண்டு வரிகளில் தொடக்கம் சேதம் அடைந்துள்ளதால் எத்தனை நாள் நோன்பு இருந்தார் என்பதை அறிய முடியவில்லை.

    40 அல்லது 50 என்று நாட்கள் இருக்கலாம் முன்னெழுத்துக்கள் இல்லாமல் பது என்ற 2 எழுத்துக்கள் மட்டும் இருப்பதால் 20 முதல் 80 வரையான நாட்களை குறிக்கலாம். நிசிதிகை என்ற சொல் இக்கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது.

    பாண்டியநாட்டில் இந்த சொல் கல்வெட்டுகளில் இதுவரை இடம் பெற்றதி ல்லை. தொண்டைமண்டலம் (திருநாதர்குன்று) கொங்குமண்டலம் (விசயமங்கலம்) ஆகிய ஊர்களில் இப்படிப்பட்ட நிசிதிகை கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. பாண்டியநாட்டில் இதுவே முதலாவதாக அறியப்பட்டு ள்ளது.

    செஞ்சிக்கு அருகில் உள்ள திருநாதர்குன்று மலையில் 57 நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த சந்திரநந்தி எனும் துறவியின் நிசிதிகை உள்ளது. அதன் காலம் கி.பி. 6-ம் நூற்றாண்டாகும்.

    திருப்பரங்குன்றம் சங்ககாலத்திலேயே முக்கிய சமணத்தளமாக விளங்கியுள்ளது. மூன்று தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் கி.மு. முதல்நூற்றாண்டைச் சேர்ந்தவை இங்கு காணப்படுகின்றன. அதற்கு அடுத்து கி.பி. 8,9-ம் நூற்றாண்டில் தென்பரங்குன்றம் குடைவரைக்கோவில் சமணத்தீர்த்தங்கரர்க்காக எடுக்கப்பட்டது. பின்னர் கி.பி. 13ம் நூற்றாண்டில் அது சிவன்கோவிலாக மாற்றம் பெற்றது. மதுரைக்கு அருகில் சமணம் செல்வாக்குப் பெற்றிருந்த எண்பெருங்குன்றங்களில் திருப்பரங்குன்றம் முதலாவதாகும். மலை உச்சியில் காசிவிசுவநாதர் கோயில் அருகில் மலைப்பாறையில் கி.பி. 9,–10ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணத்துறவியரின் உருவங்கள் செதுக்கப்பட்டு ள்ளன.

    மலை அடிவாரத்தில் உள்ள பழனிஆண்டவர் கோவிலின் பின்புறம் ஒர் இயற்கையான சுனைக்கு அருகில் இரண்டு பார்ச்சுவநாதர், மகாவீரர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றைச் செதுக்கி யவர்களின் பெயர்களும் கி.பி.10ஆம் நூற்றாண்டின் வட்டெழுத்தில் வெட்டப்பட்டுள்ளன.இவ்வளவு சமணத்தொடர்பு டைய திருப்பரங்குன்றத்தில் முதல்முறையாக நோன்பிருந்து உயிர்நீத்த அரிட்டநேமிப்பெரியார் பற்றிய கல்வெட்டு கிடைத்திருப்பது முக்கி யத்துவம்வாய்ந்ததாகும். மதுரைக்கு அருகில் உள்ள அரிட்டாபட்டி என்னும் சமணத்தலம் அரிட்டநேமிப் பெரியாரின் பெயரில் அமைந்தது என்பர். இவரே அப்பெயருக்குக் காரணமானவராக இருக்கலாம்.

    தமிழகத்தில் சங்க காலத்திலேயே வடக்கிருந்து உயிர் போக்கும் வழக்கம் இருந்தது என்பதனை கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் வரலாறு கூறுகிறது. இவ்வழக்கம் 10-ம் நூற்றாண்டுவரை தொடர்ந்தது என்பதற்கு இப்போதைய திருப்ப ரங்குன்றம் கல்வெட்டு கண்டுபிடிப்பு சான்றாக அமைகிறது.

    மேற்கண்ட தகவலை பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளர் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் தெரிவித்தார்.

    • மதுரை திருமலைநாயக்கர் வழங்கிய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
    • வலையங்குளம் நாடக குழுவினரை பாராட்டி வழங்கப்பட்டது.

    திருமங்கலம்

    திருப்பரங்குன்றம் வட்டம் வலையங்குளம் கிராமத்தில் மன்னர் திருமலை நாயக்கர் வழங்கிய "திருமலை மெச்சினார்" என்ற பெயர் கொண்ட கல்வெட்டு கண்டறியப்பட்டது.

    வலையங்குளத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் வேல்முருகன் இங்கு பழமையான கல்வெட்டு இருப்பதாக கொடுத்த தகவலின்படி மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளருமான முனீஸ்வரன் தலைமையில் மாணவர்கள் அஜித்குமார், தினேஷ்குமார், சூரிய பிரகாஷ் , தர்மர் ஆகியோர் கொண்ட குழுவினர் கள ஆய்வு செய்தனர்.

    அப்போது வலையங்குளம் கண்மாய் கரை அருகில் விநாயகர் கோவில் முன்பு திருமலை மெச்சினார் என்ற பெயர் பறைச்சாற்றும் கல்வெட்டு கண்டறியப்பட்டது. இதை படி எடுத்து ஆய்வு செய்த போது 312 ஆண்டுக்கு முன்பு சேர்ந்தது என்பதை அறிய முடிந்தது. இதுகுறித்து உதவி பேராசிரியர் முனீஸ்வரன் கூறியதாவது:-

    தமிழரின் தொன்மையான கலைகளில் ஒன்று நாடகம். கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும், வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால் நாடகம் என பெயர் பெற்றது. குறிப்பாக தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களின் தமிழ் நாடகக்கலை பற்றிய சான்றுகள் உள்ளது.

    மதுரையை ஆண்ட நாயக்கர்கள் கி.பி. 1526 முதல் 1736 வரை நிர்வாகத்திலும் கலாச்சாரத்திலும் சிறப்பு பெற்று விளங்கினர். திருமலை நாயக்கர் ஆட்சி காலம் பொற்காலம். இவர் திருவிழா மற்றும் கலாச்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். குறிப்பாக வலையங்குளம் பகுதியில் திருவிழா காலத்தில் 98 நாட்கள் தொடர்ச்சியாக புராணம் மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் நாடகம் நடைபெறுவது வழக்கம்.

    வலையங்குளத்தை சேர்ந்த நாடகக் குழுவினர் திருப்பரங்குன்றம் கோவில் ராஜ வீதியில் வீர அபிமன்யு சுந்தரி நாடகம் நடத்தினர். திருமலை நாயக்கர் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வருகை தந்த போது நாடகத்தை பார்த்து வியந்தார். நாடகக்குழுவினரை அழைத்து பாராட்டி "திருமலை மெச்சினார்" என்ற சிறப்பு பட்டமாக தன் கையால் செம்பு பட்டயம், 64 உப்பில்லா கட்டிகள் வழங்கினார்.

    மேலும் குதிரை தன் ஆட்சி பகுதி எல்லையில் ஓட விட்டு அந்த குதிரை நிற்குமிடம் வரை நிலத்தில் விளையும் பொருட்களில் ஒரு பங்கு நாடக குழுவினருக்கு வழங்கும்படி கட்டளையிட்டார். குதிரை ஓடிய இடத்தை எல்லையாக குறிக்கப்பட்ட பகுதி தற்போது குதிரை குத்தி என்று அழைக்கப்படுகிறது.

    வலையங்குளம் கண்மாய் அருகே ராணி மங்கம்மாள் சாலையின் ஓரமாக ஆலமரத்தின் அடியில் 3 அடி நீளம் 2 அடி அகலம் 10 வரிகள் கொண்ட தனி கருங்கல்லில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தோம். இதை படி எடுத்து ஆய்வு செய்தோம்.

    இதில் சாலிய வாகன சகாப்தம் 1710 வருடம் 15 திங்கட்கிழமை பூரண நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில் வலையங்குளத்தில் இருக்கும் திருமலை மெச்சினார் பெருமை பெற்ற நாடகக்கலை சங்கமறிய விநாயகர் கோவிலுக்கு திருப்பணி செய்து கட்டி கும்பாபிஷேகம் செய்தது, திருமலை மெச்சன் உபயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மூலம் திருமலை மெச்சினார் வம்சம் வலையங்குளம் விநாயகர் கோவிலுக்கு திருப்பணிகள் செய்ததை அறியமுடிகிறது. தற்போது வரை வலையங்குளத்தில் மட்டுமல்ல சுற்றி இருக்கின்ற கிராமத்தில் நடக்கும் விசேஷங்களில் திருமலை மெச்சினார் வம்சத்திற்கு தனி மரியாதை உண்டு.

    தொடர்ந்து தொன்று தொட்டு 5-வது தலைமுறையாக வலையங்குளத்தில் முதல் நாள் நாடகம் திருமலை மெச்சினார் நாடகக் குழுவினர் தான் அரங்கேற்றி வருகின்றனர்.தற்போது தான் 428-வது நாடகம் நடைபெற்றது. தமிழகத்தில் அதிகமான நாட்களில் நாடகம் நடக்கும் இடம் வலையங்குளம் என்பது மற்றொரு சிறப்பு.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ரஷிய, ஜப்பான் போரின்போது சுமார் ரூ.13 லட்சம் கோடி தங்கத்துடன் கடலில் மூழ்கடிக்கப்பட்ட ரஷிய போர்க்கப்பல், 113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. #SunkenRussian #Warship
    மாஸ்கோ:

    ரஷியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே 1904-1905 ஆண்டுகளில் போர் நடைபெற்றது.  1905-ம் ஆண்டு மே மாதம், போர் உச்சத்தில் இருந்தபோது, ரஷிய நாட்டுக்கு சொந்தமான ‘டிமிட்ரி டான்ஸ்கோய்’ என்ற போர்க்கப்பலை ஜப்பான் தாக்கி கடலில் மூழ்கடித்து விட்டது.

    அது ரஷியாவுக்கு பேரிழப்பாக அமைந்தது. அந்த போர்க்கப்பலில், 189 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான (சுமார் ரூ.13 லட்சம் கோடி) தங்கக்கட்டிகளும், நாணயங்களும் வைக்கப்பட்டு இருந்தன. இவை 5 ஆயிரத்து 500 பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்தன.



    இந்த தங்க கட்டிகளும், நாணயங்களும் 2 லட்சம் கிலோ எடை உடையதாகும். இந்தக் கப்பலில் இருந்த சிப்பந்திகளில் 60 பேர் கொல்லப்பட்டு விட்டதாகவும், 120 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

    மூழ்கடிக்கப்பட்டு 113 ஆண்டுகள் ஆன நிலையில் இப்போது இந்த போர்க்கப்பல், தென் கொரியாவில் உள்ளேஉங்டோ தீவு கடலில் 420 மீட்டர் ஆழத்தில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    இந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள இடம், கடற்கரையில் இருந்து 1.6 கி.மீ. தொலைவிலேயே உள்ளது.

    தென்கொரியா, இங்கிலாந்து, கனடா நாடுகளை சேர்ந்த வல்லுனர்கள்தான் இந்த கப்பலை இப்போது கண்டுபிடித்து இருக்கிறார்கள். அவர்கள் இந்த கப்பலை 2 நீர்மூழ்கி கப்பல்களை பயன்படுத்தி படம் எடுத்து உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

    அந்தப் படங்களில் இருந்து இந்த போர்க்கப்பல் பெரிதும் சேதம் அடைந்து இருப்பது தெரியவந்து உள்ளது.

    அதில் வைக்கப்பட்டு இருந்த தங்கக்கட்டிகள், தங்க நாணயங்கள் இப்போதும் இருப்பது கண்டறியப்பட்டால் பாதி அளவு ரஷியாவுக்கு வழங்கப்படும் எனவும், அதைப் பயன்படுத்தி வடகொரியா வழியாக தென்கொரியாவை ரஷியாவுடன் இணைக்கும் ரெயில்வே திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் கோரப்படும் என தெரியவந்து உள்ளது.

    10 சதவீதம், போர்க்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள உள்ளேஉங்டோ தீவின் சுற்றுலா திட்டங்களுக்காக செலவிடப்படும்; அந்தக் கப்பலுக்காக ஒரு அருங்காட்சியகமும் நிறுவப்படும் என கூறப்படுகிறது.

    ஆனால் கிரெம்ளினில் உள்ள ரஷிய அதிகாரிகள், இந்தக் கப்பலில் தங்கக்கட்டிகள், தங்க நாணயங்கள் இருந்தால், அவற்றை மொத்தமாக தங்களிடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.  #SunkenRussian #Warship  #tamilnews
    ×