search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொழுமத்தில்  மேலும் ஒரு சோழர் காலத்திய கல்வெட்டு கண்டுப்பிடிப்பு
    X

    கோப்புபடம். 

    கொழுமத்தில் மேலும் ஒரு சோழர் காலத்திய கல்வெட்டு கண்டுப்பிடிப்பு

    • தென்னை,வாழை போடப்பட்டும், பராமரிக்கப்பட்டும் வருகிறது.
    • பொதுமக்கள் எளிமையாகவும் பாதுகாப்பாகவும் நீராடும் வகையில் படித்துறை கட்டப்பட்டு வருகிறது.

    உடுமலை:

    கொழுமம் வீரசோழி ஸ்வரர் திருக்கோயில் தாண்டேசுவரர் கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவிற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. கோயிலைச் சுற்றிலும் சுமார் 10 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் தென்னை,வாழை போடப்பட்டும் பராமரிக்க ப்பட்டும் வருகிறது.

    வரலாற்றுச்சிறப்புமிக்க ஆன்பொருநை எனும் அமராவதி நதிக்கரையோரம், படித்துறை கட்டுவதற்கா கவும், பொதுமக்கள் எளிமையாகவும் பாதுகாப்பாகவும் நீராடும் வகையில் படித்துறை கட்டப்பட்டு வருகிறது.அவ்வாறு படித்துறை கட்டுவதற்காக அமராவதி ஆற்றங்கரையில் முட்புதர்களும் கால் வைக்க முடியாத அளவிற்கு முள்வேலிகள் இருந்தன. இவையெல்லாம் அகற்றி சுற்றிலும் காம்பவுண்ட் கட்டப்பட்டு வருகிறது.அவ்வாறு நதிக்கரையில் தோண்டும்போது வீரசோழர் காலத்திய கல்வெட்டு ஒன்று கிடைக்கப்பெற்றது. இதனை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் மதிப்புரு தலைவரும் தொல்லியல் ஆய்வறிஞருமான முனைவர் மூர்த்தீஸ்வரி அனுப்பப்பட்டது. முனைவரும் உடனடியாக இந்தக் கல்வெட்டு படித்து செய்தி அனுப்பினார். இந்த கல்வெட்டு குறித்து முனைவர் மூர்த்தீஸ்வரி கூறுகையில்; இங்கு ஏற்கனவே இடங்கை வலங்கை குறித்தான கல்வெட்டுகள் இங்கு தமிழக அரசின் தொல்லியல் துறையால் ஆவணப்படு த்தப்பட்டுள்ளதையும் மீண்டும் இதனை வலியுறுத்தும் பொருட்டு சோழ மன்னனின் ஆட்சியில் இடங்கை தொண்ணூற்று எட்டு பொதுமக்கள், வரி செலுத்து வேண்டும் என்று கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. இறையிலி நிலங்கள், மன்றாட்டு ,கடமை, மஞ்சாடி, இறை, புரவு, சித்தாயம், எல்லை, உகவை, பொலிவு, பொற்பூ, சாமந்தபேறு, மன்றுபாடு, தெண்டக்குற்றம், கீழ்புரவு, மயிற்கானம். ஓட்டச்சு, அந்தராயம், காணிக்கை, மண்டலப்பேறு, முதன்மை ப்பேறு, சந்துவிக்கிரகபேறு, ஓலைகாணம், ஓலைச்சி எனப்பல்வேறு பெயர்களில் இங்கு பொதுமக்களிடம் வரியாக வசூலிக்கப்பெற்றதை கல்வெட்டு வழி அறிய முடிகிறது. மீண்டும் அதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த சோழர்காலத்து கல்வெட்டு நமக்கு உறுதிப்படுத்துகிறது. இதை தொல்லியல் ஆய்வறிஞர் முனைவர் மூர்த்தீஸ்வரி தெரிவித்தார்.

    Next Story
    ×