search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோழர் கால கல்வெட்டு"

    • தென்னை,வாழை போடப்பட்டும், பராமரிக்கப்பட்டும் வருகிறது.
    • பொதுமக்கள் எளிமையாகவும் பாதுகாப்பாகவும் நீராடும் வகையில் படித்துறை கட்டப்பட்டு வருகிறது.

    உடுமலை:

    கொழுமம் வீரசோழி ஸ்வரர் திருக்கோயில் தாண்டேசுவரர் கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவிற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. கோயிலைச் சுற்றிலும் சுமார் 10 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் தென்னை,வாழை போடப்பட்டும் பராமரிக்க ப்பட்டும் வருகிறது.

    வரலாற்றுச்சிறப்புமிக்க ஆன்பொருநை எனும் அமராவதி நதிக்கரையோரம், படித்துறை கட்டுவதற்கா கவும், பொதுமக்கள் எளிமையாகவும் பாதுகாப்பாகவும் நீராடும் வகையில் படித்துறை கட்டப்பட்டு வருகிறது.அவ்வாறு படித்துறை கட்டுவதற்காக அமராவதி ஆற்றங்கரையில் முட்புதர்களும் கால் வைக்க முடியாத அளவிற்கு முள்வேலிகள் இருந்தன. இவையெல்லாம் அகற்றி சுற்றிலும் காம்பவுண்ட் கட்டப்பட்டு வருகிறது.அவ்வாறு நதிக்கரையில் தோண்டும்போது வீரசோழர் காலத்திய கல்வெட்டு ஒன்று கிடைக்கப்பெற்றது. இதனை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் மதிப்புரு தலைவரும் தொல்லியல் ஆய்வறிஞருமான முனைவர் மூர்த்தீஸ்வரி அனுப்பப்பட்டது. முனைவரும் உடனடியாக இந்தக் கல்வெட்டு படித்து செய்தி அனுப்பினார். இந்த கல்வெட்டு குறித்து முனைவர் மூர்த்தீஸ்வரி கூறுகையில்; இங்கு ஏற்கனவே இடங்கை வலங்கை குறித்தான கல்வெட்டுகள் இங்கு தமிழக அரசின் தொல்லியல் துறையால் ஆவணப்படு த்தப்பட்டுள்ளதையும் மீண்டும் இதனை வலியுறுத்தும் பொருட்டு சோழ மன்னனின் ஆட்சியில் இடங்கை தொண்ணூற்று எட்டு பொதுமக்கள், வரி செலுத்து வேண்டும் என்று கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. இறையிலி நிலங்கள், மன்றாட்டு ,கடமை, மஞ்சாடி, இறை, புரவு, சித்தாயம், எல்லை, உகவை, பொலிவு, பொற்பூ, சாமந்தபேறு, மன்றுபாடு, தெண்டக்குற்றம், கீழ்புரவு, மயிற்கானம். ஓட்டச்சு, அந்தராயம், காணிக்கை, மண்டலப்பேறு, முதன்மை ப்பேறு, சந்துவிக்கிரகபேறு, ஓலைகாணம், ஓலைச்சி எனப்பல்வேறு பெயர்களில் இங்கு பொதுமக்களிடம் வரியாக வசூலிக்கப்பெற்றதை கல்வெட்டு வழி அறிய முடிகிறது. மீண்டும் அதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த சோழர்காலத்து கல்வெட்டு நமக்கு உறுதிப்படுத்துகிறது. இதை தொல்லியல் ஆய்வறிஞர் முனைவர் மூர்த்தீஸ்வரி தெரிவித்தார்.

    • தியாகதுருகம் அருகே 800 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
    • இந்தக் கல்வெட்டின் தொடர்ச்சி தலைகீழாக வெட்டப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் சிங்கார உதியன் தலைமையில்,தொல்லியல் ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், காப்பாட்சியர் ரஷீத்கான், நூலகர் அன்பழகன், பண்ரூட்டி இமானுவேல், ஆசிரியர் உமாதேவி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சோழர்கால வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கல்வெட்டு 5 அடி நீளம் 3.5 அடி அகலத்தில் உள்ள கல்லில் இருபுறமும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இரு பக்கத்திலும் 2-ம் குலோத்துங்க சோழனின் 12 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு. முழுமையாகப் படித்து அறியமுடியாத 44 வரிகளைக் கொண்டது. எழுத்துகள் சிதைந்து உள்ளன. இந்த கல்வெட்டில் 2-ம் குலோத்துங்கசோழனின் "பூமேவி வளர" என்னும் மெய்க் கீர்த்தி முழுமையாக இடம்பெற்றுள்ளது. மேலும் இவ்வூரை பிரமதேயமாகவும், சதுர்வேதி மங்களமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊரின் பெயரை அறியமுடியாதவண்ணம் சிதைந்துள்ளது.

    இங்குள்ள இறைவன் பெயரை அகத்தீஸ்வரமுடைய மகாதேவர் என்று அழைக்கப்படுகிறார். மிலாடு நாட்டுக்கு உட்பட்ட கிளியூரை (இன்றைய கிளியனூர்) தலைநகராகக் கொண்டு கி.பி.1133 முதல் 1150 வரை அரசாண்ட இரண்டாம் குலோத்துங்கசோழன் காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த "திருநீரேற்றான் ராஜேந்திர சோழ மலையகுலராயன்" என்ற சிற்றரசன் காலத்தில் பல்வேறு அளவுகோலால் அளவீடு செய்யப்பட்ட 4004 குழிகள் கொண்ட நிலத்தை அகத்தீஸ்வரர் ஆலயத்திற்கு தினசரி பூசைக்காகத் தானம் அளிக்கபட்ட செய்திக் காணப்படுகிறது. மேற்கண்ட நிலங்களுக்கு எல்லைகள் குறிப்பிடப் பட்டுள்ளன. முன்பக்கத்தில் 20 வரிகளுடன் முடிவடைகிறது. அடுத்தப் பக்கத்தில் 4 வரிகள் மட்டும் இந்தக் கல்வெட்டின் தொடர்ச்சி தலைகீழாக வெட்டப்பட்டுள்ளது. இரண்டாம் பக்கத்தில் மொத்தம் 24 வரிகள் உள்ளது. அதில் 4வரிகள் முன்பக்கத்திற்குரியது. கல்வெட்டின் இறுதியில் வழக்கமாகக் காணப்படும் எச்சரிக்கை வாசகம் இக்கல்வெட்டில் காணப்படவில்லை.

    மேலும் மிகப்பெரிய சிவாலயம் ஒன்று இங்கிருந்ததற்கான ஆதாரமாக இப்பகுதியைச் சுற்றிக் காணப்படும் நேர்த்தியானப் பழமைவாய்ந்த, பல்வேறு அளவுகளில் உள்ள சிலைகளைக் காணலாம். இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் சிங்கார.உதியன் கூறுகையில் எங்களது மையத்தின் சார்பில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய கண்ணாடி மணி உருக்கு உலைக்கலன் வீரபாண்டி கிராமத்தில் புலிக்கல் பகுதியிலும், கல்திட்டை (டால்மன் ) திருக்கோவலூர் வட்டத்தில் உள்ள ஆதிச்சனூரிலும், அந்திலி கிராமத்தில் முதுமக்கள் தாழியையும் கண்டெடுத்துள்ளோம். இப்பகுதியும் வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பகுதி என்று இந்த ஆய்வு மூலம் வெளிப்பட்டு வருகிறது. ஆகவே மத்திய மாநில அரசுகள் இப்பகுதியில் தொல்லியல் அகழாய்வு நடத்தினால் இப்பகுதியின் தொன்மை வரலாறு வெளிப்டும் என கூறினார்.

    ×