search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்காணிப்பு காமிரா"

    • அனைத்து வீடுகளுக்கும் இரண்டு வண்ணங்களில் குப்பை கூடைகள் வழங்கப்பட்டது.
    • விலை மதிப்புமிக்க பொருட்களையும், நகைகளையும் வங்கி லாக்கரில் வைத்து பாதுகாக்க வேண்டும்.

    சிறுமுகை,

    காரமடை நகராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு சிவன் புறம் குடியிருப்போர் மக்கள் நல சங்கத்தின் ஆண்டு கூட்டம் வார்டு உறுப்பினர் குரு பிரசாத் தலைமையில் தநடந்தது.

    நிகழ்ச்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை தனித்தனியாக தரம் பிரித்து துப்புரவு பணியாளர்கள் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக அனைத்து வீடுகளுக்கும் இரண்டு வண்ணங்களில் குப்பை கூடைகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ், ஆணையர் பால்ராஜ், சுகாதார ஆய்வாளர் வீரபாகு, காரமடை காவல் ஆய்வாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் காரமடை இன்ஸ்பெக்டர் குமார் பேசியதாவது:-

    பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தங்களது விலை மதிப்புமிக்க பொருட்களையும், நகைகளையும் வங்கி லாக்கரில் வைத்து பாதுகாக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில், தெருமுனைகளில் காமிராக்களை பொருத்தி வெளி நபர் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். காரமடை நகராட்சி முழுவதும் 300 காமிராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இளைஞர்களிடம் மோட்டார் சைக்கிள் மோகம் அதிகரித்துள்ளது. இவர்கள் அதிவேகத்தில் செல்வதால் வாகன விபத்தில் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. மேலும் இளைஞர்களிடம் போதை போன்ற பழக்கங்களும், விலை உயர்ந்த செல்போன்களை பயன்படுத்துவதும் அவர்களை குற்றச்செயல்களில் ஈடுபட வைக்கிறது.

    இளம்பெண்கள் மிகவும் கவனத்துடன் பிற மனிதர்களிடம் பழக வேண்டும், அவர்களுக்கு பெற்றோர்கள் வழங்கும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த கூடாது. மேலும் பெண்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் ஏற்படும்போது 181 எண்ணிற்கு தொடர்பு கொண்டு உதவி கோரலாம்.

    மேலும் வங்கியில் இருந்து பேசுவதாக யாராவது கூறினால் அவர்களிடம் வங்கி கணக்கு சம்பந்தமான எந்த தகவலையும் சொல்லக்கூடாது. மேலும் யாராவது வங்கி கணக்கு எண்ணை வாங்கி மோசடி செய்ய நேரிட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு போன் செய்து வங்கி கணக்கை உடனடியாக நிறுத்தி வைத்து விடலாம். இதனால் பணம் பறிபோவதை தடுக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த 4,685 கண்காணிப்பு காமிரா அமைக்கப்பட்டுள்ளது,
    • மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் மற்றும் வாகன விபத்துக்கள் போன்றவற்றை குறைத்து கட்டுப்படுத்து வதற்கு ஏதுவாக அமையும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கவும் , குற்றம் நடந்த பின் குற்றவாளிகளை அடையாளம் காணவும் மாவட்டத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலூர்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஏற்பாட்டின் பேரில் கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் பரிந்துரையின்பேரில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்த நிதி வழங்க வேண்டும் என விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் ரூ1 கோடியே 30 லட்சம் பெறப்பட்டு அந்த நிதியில் இருந்து 520 கண்காணிப்பு காமிராக்கள்பொருத்தப்பட்டுள்ளது.

    கடலுார் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் 297 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது . இதில் தனியார் நிறுவனங்கள் , வியாபார சங்க பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் மாவட்டத்தில் 3868 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது . கடலூர் பகுதியில் 885, சிதம்பரம் 1040, புவனகிரி 144, நெய்வேலி 589, சேத்தியாத்தோப்பு 445 , காட்டுமன்னார்கோவில் 166, குறிஞ்சிப்பாடி 83, விருத்தாச்சலம் 521 , பண்ருட்டி 487 , திட்டக்குடி 247 மற்றும் வேப்பூர் 78 என மொத்தம் 4685 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணி க்கப்பட்டு வருகிறது . இதன் மூலம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் மற்றும் வாகன விபத்துக்கள் போன்றவற்றை குறைத்து கட்டுப்படுத்து வதற்கு ஏதுவாக அமையும்.

    • பொள்ளாச்சி வனச்சரகத்தை ஒட்டிய பகுதிகளில் அவ்வப்போது வன உயிரினங்கள் வந்து செல்வது வழக்கம்.
    • விவசாய தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாய் ஒன்றை சிறுத்தை கொன்றதாக கூறப்படுகிறது.

    பொள்ளாச்சி:

    ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, ராஜநாகம், பல்வேறு வகையான மான்கள், பறவைகள் உள்ளன. பொள்ளாச்சி வனச்சரகத்தை ஒட்டிய பகுதிகளில் அவ்வப்போது வன உயிரினங்கள் வந்து செல்வது வழக்கம்.

    இந்நிலையில், பொள்ளாச்சி வனச்சரகம் அருகே உள்ள ஆழியாறு அணை புளியங்கண்டி பகுதி அருகே உள்ள விவசாய தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாய் ஒன்றை சிறுத்தை கொன்றதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து விசாரணை நடத்திய வனத்துறையினர் அந்த பகுதியில் 4 தானியங்கி காமிராக்களை நேற்று பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • ஊட்டி ஹில் மௌண்ட் பகுதியில் 2 பசு மாடுகளை வனவிலங்கு தாக்கியதில் படுகாயம் அடைந்தது.
    • வனவிலங்குகளை கண்காணிக்கவும், பொதுமக்களின் நலன்கருதியும் இந்த கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகருக்கு குடிநீர் வழங்கும் மார்லி மந்து ஏரி பகுதியில் புலியின் நடமாட்டத்தை கண்ட அந்த பகுதி மக்கள் அவர்களுடைய செல்போனில் வீடியோ எடுத்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

    அந்த தகவலின் அடிப்படையில் ஊட்டி வடக்கு வனச்சரக உட்கோட்டம் வனச்சரகர்கள் மார்லி மந்துஅணை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட்டனர்

    அதனைத் தொடர்ந்து ஊட்டி ரோஸ் மௌண்ட் அருகில் ஹில் மௌண்ட் பகுதியில் நேற்று இரண்டு பசு மாடுகளை வனவிலங்கு தாக்கியதில் படுகாயம் அடைந்தது.

    அதனை கண்டறியும் விதமாக ஊட்டி வடக்கு வனச்சரக உட்கோட்டம் வனச்சரகர் ரமேஷ் தலைமையில் இன்று 02 கண்காணிப்பு கேமராக்களை அந்தப் பகுதியில் பொருத்தினர்...

    மேலும் வனவிலங்குகளை கண்காணிக்கவும், பொதுமக்களின் நலன் கருதியும் இந்த கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது .வனவிலங்குகள் அந்த பகுதியில் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்டரியவும் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதுகுறித்து வனச்சரகர் தெரிவிக்கையில் மார்லி மந்து பகுதியில் தினமும் கண்காணிப்பு பணியில் வனத்துறை ஈடுபட்டு வருவதாகவும் கால்நடைகளை அணைப்பகுதியில் மேய்க்க வேண்டாம் என கேட்டு கொண்டார்

    • கொள்ளை, வழிப்பறி திருட்டு சம்பவங்களை தடுக்கவும், ரேசன் அரிசி கடத்தலை தடுக்கவும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • கிராம பகுதிகளில் ஒவ்வொரு தெருவிற்கும் நுழைவு வாயில் முன்பு கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும்.

    நெகமம்:

    நெகமம் பகுதியில் கொள்ளை, வழிப்பறி திருட்டு சம்பவங்களை தடுக்கவும், ரேசன் அரிசி கடத்தலை தடுக்கவும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அடிக்கடி வாகன ரோந்து பணியில் ஈடுபட்டு சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிபவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் குற்றச்சம்பவங்களை தடுக்க முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி காண்காணித்து வருகின்றனர். இதை தொடர்ந்து தற்போது நெகமத்தில் நான்கு ரோடு சந்திப்பு, வடசித்தூர், நெகமம் போலீஸ் நிலையம் உள்பட 15- க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    மேலும் காட்டம்பட்டி பிரிவு அருகே நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.இந்த கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    திருப்பூர்- பொள்ளாச்சி மெயின் ரோடு, உடுமலை - திருப்பூர் ரோட்டில் நாளுக்கு நாள் அதிகளவில் வாகனங்கள் சென்று வருவதால் இந்த மெயின் ரோட்டில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் இரு சக்கர வாகனத்தில் 3 பேர், 4 பேர் பயணம் செய்வது போன்ற போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து நெகமம் போலீசார் ஒருவர் கூறியதாவது:-காவல் துறை நவீன மயமாக்கல் திட்டத்தின் மூலம் நெகமம் மற்றும் வடசித்தூர் பகுதியில் 15- க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

    மேலும் கூடுதலாக ஆண்டிபாளையம், செட்டியக்காபாளையம், செங்குட்டைப்பாளையம், பனப்பட்டி, மெட்டுவாவி, கக்கடவு ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் கிராம பகுதிகளில் ஒவ்வொரு தெருவிற்கும் நுழைவு வாயில் முன்பு கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும். இதை அப்பகுதி மக்கள் முன் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்யும் போது கிராமங்களில் திருட்டு சம்பவங்கள், தடுக்க ஏதுவாக இருக்கும். இதை கிராம பகுதி மக்கள் விரைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    குற்றச்செயல்களை கண்காணிக்க வாழப்பாடி பேரூராட்சியில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்த முடிவு செய்யப்பட்டது.
    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பொது மக்கள் கூடும் முக்கிய இடங்களில் குற்றச்செயல்களை தவிர்க்க கண்காணிப்பு காமிரா அமைப்பது குறித்து காவல்துறை மற்றும் வணிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது.

    வாழப்பாடி காவல் நிலையத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் சூர்யமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாழப்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வாழப்பாடி பேரூராட்சியில், பொதுமக்கள் கூடும் பேருந்து நிலையம், சந்தைப்பேட்டை, கடைவீதி, பேளூர் பிரிவு சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தி, குற்றச்செயல்களை தவிர்ப்பது குறித்து, வணிகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது.

    கூட்டத்தில், பொதுமக்கள் வணிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்களிப்புடன் முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்த முடிவு செய்யப்பட்டது.
    ×