search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karamadai Municipality"

    • அனைத்து வீடுகளுக்கும் இரண்டு வண்ணங்களில் குப்பை கூடைகள் வழங்கப்பட்டது.
    • விலை மதிப்புமிக்க பொருட்களையும், நகைகளையும் வங்கி லாக்கரில் வைத்து பாதுகாக்க வேண்டும்.

    சிறுமுகை,

    காரமடை நகராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு சிவன் புறம் குடியிருப்போர் மக்கள் நல சங்கத்தின் ஆண்டு கூட்டம் வார்டு உறுப்பினர் குரு பிரசாத் தலைமையில் தநடந்தது.

    நிகழ்ச்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை தனித்தனியாக தரம் பிரித்து துப்புரவு பணியாளர்கள் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக அனைத்து வீடுகளுக்கும் இரண்டு வண்ணங்களில் குப்பை கூடைகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ், ஆணையர் பால்ராஜ், சுகாதார ஆய்வாளர் வீரபாகு, காரமடை காவல் ஆய்வாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் காரமடை இன்ஸ்பெக்டர் குமார் பேசியதாவது:-

    பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தங்களது விலை மதிப்புமிக்க பொருட்களையும், நகைகளையும் வங்கி லாக்கரில் வைத்து பாதுகாக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில், தெருமுனைகளில் காமிராக்களை பொருத்தி வெளி நபர் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். காரமடை நகராட்சி முழுவதும் 300 காமிராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இளைஞர்களிடம் மோட்டார் சைக்கிள் மோகம் அதிகரித்துள்ளது. இவர்கள் அதிவேகத்தில் செல்வதால் வாகன விபத்தில் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. மேலும் இளைஞர்களிடம் போதை போன்ற பழக்கங்களும், விலை உயர்ந்த செல்போன்களை பயன்படுத்துவதும் அவர்களை குற்றச்செயல்களில் ஈடுபட வைக்கிறது.

    இளம்பெண்கள் மிகவும் கவனத்துடன் பிற மனிதர்களிடம் பழக வேண்டும், அவர்களுக்கு பெற்றோர்கள் வழங்கும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த கூடாது. மேலும் பெண்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் ஏற்படும்போது 181 எண்ணிற்கு தொடர்பு கொண்டு உதவி கோரலாம்.

    மேலும் வங்கியில் இருந்து பேசுவதாக யாராவது கூறினால் அவர்களிடம் வங்கி கணக்கு சம்பந்தமான எந்த தகவலையும் சொல்லக்கூடாது. மேலும் யாராவது வங்கி கணக்கு எண்ணை வாங்கி மோசடி செய்ய நேரிட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு போன் செய்து வங்கி கணக்கை உடனடியாக நிறுத்தி வைத்து விடலாம். இதனால் பணம் பறிபோவதை தடுக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×