search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Crime Scenes"

    • குற்றசம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்காணிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
    • ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக சசாங்சாய் பொறுப்பேற்ற பிறகு குற்றசம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்காணிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.அதன்படி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி, காட்டுப்பகுதிகளில் டிரோன் கேமரா மூலம் கண்காணிக்க உத்தரவி ட்டார். இதையடுத்து திண்டிவனம் அருகேயுள்ள ஆச்சிப்பாக்கம் காட்டுப் பகுதியில் குற்றவாளிகள் நடமாட்டம் குறித்து ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணி இன்று நடைபெற்றது.

    திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மேற்பா ர்வையில் கண்காணிப்பு பணி நடைபெற்றது. அதே சமயத்தில் காட்டுப்பகுதிக்குள் ஓலக்கூர் போலீசார் அனுப்பிவைக்கப்பட்டனர். அப்போது காட்டுப் பகுதியில் கூட்டம் கூட்ட மாக அமர்ந்து மது அருந்திய வர்கள், பணம் வைத்து சூதாடியவர்கள், டிரோன் கேமராவை கண்டவுடன் அலறியடித்து ஓடினர்.இவர்களை மடக்கி பிடித்த ஓலக்கூர் போலீசார், பொது இடங்களில் அமர்ந்து மது அருந்தக்கூடா தெனவும், சூதாட்டம் விளையாடக்கூடாது என்றும் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினர். மேலும், டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • கடலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த 4,685 கண்காணிப்பு காமிரா அமைக்கப்பட்டுள்ளது,
    • மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் மற்றும் வாகன விபத்துக்கள் போன்றவற்றை குறைத்து கட்டுப்படுத்து வதற்கு ஏதுவாக அமையும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கவும் , குற்றம் நடந்த பின் குற்றவாளிகளை அடையாளம் காணவும் மாவட்டத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலூர்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஏற்பாட்டின் பேரில் கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் பரிந்துரையின்பேரில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்த நிதி வழங்க வேண்டும் என விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் ரூ1 கோடியே 30 லட்சம் பெறப்பட்டு அந்த நிதியில் இருந்து 520 கண்காணிப்பு காமிராக்கள்பொருத்தப்பட்டுள்ளது.

    கடலுார் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் 297 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது . இதில் தனியார் நிறுவனங்கள் , வியாபார சங்க பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் மாவட்டத்தில் 3868 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது . கடலூர் பகுதியில் 885, சிதம்பரம் 1040, புவனகிரி 144, நெய்வேலி 589, சேத்தியாத்தோப்பு 445 , காட்டுமன்னார்கோவில் 166, குறிஞ்சிப்பாடி 83, விருத்தாச்சலம் 521 , பண்ருட்டி 487 , திட்டக்குடி 247 மற்றும் வேப்பூர் 78 என மொத்தம் 4685 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணி க்கப்பட்டு வருகிறது . இதன் மூலம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் மற்றும் வாகன விபத்துக்கள் போன்றவற்றை குறைத்து கட்டுப்படுத்து வதற்கு ஏதுவாக அமையும்.

    ×