search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்காணிப்பு காமிரா"

    • போலீஸ் உதவி கமிஷனர் பார்த்திபன் பேட்டி
    • வீடுகளில் திருட்டு ஏற்பட்டால் உடனே போலீசுக்கு தெரியப்படுத்த வேண்டுகோள்

    குனியமுத்தூர்,

    கோவை மாநகரில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் கோவையில் கொள்ளை சம்பவங்களை தடுத்து நிறுத்துவது குறித்து மாநகர போலீஸ் உதவி கமிஷனர் பார்த்திபன் கூறியதாவது:-

    வீட்டின் வாசலில் இரும்பு கதவு அமைத்து வெளியே செல்லும்போது பூட்டிவிட்டு செல்கிறோம். அப்போது வீட்டு வாசலில் தொங்கும் பூட்டு திருடர்களின் கண்களை உருத்துகிறது. எனவே அவர்கள் வீட்டில் ஆள் இல்லை என்பதை எளிதாக அறிந்து பூட்டை உடைத்து உள்ளே புகுந்து விடுகின்றனர். எனவே உள்தாழ்ப்பாள் மூலம் கதவை பூட்டிவிட்டு செல்லும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் வீட்டில் ஆள் உள்ளனரா? இல்லையா? என்று தெரியாத நிலை ஏற்படும். இதனால் பெரும்பாலான திருட்டுகள் தவிர்க்கப்படும்.

    எனவே புதிதாக வீடு கட்டுபவர்கள் மேற்கண்ட முறையை பயன்படுத்தினால் நல்லது. ஏற்கனவே பூட்டு தொங்கும் முறையை பயன்படுத்துபவர்கள் கூட, இந்த நிலைக்கு மாறினால் தங்களின் உடைமைகளை பாதுகாக்க இயலும். ஒரு இழப்பு ஏற்பட்ட பிறகு கூச்சலிட்டு அழுது பயனில்லை. அதற்கு முன்பாகவே வருமுன் காப்போம் அடிப்படையில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

    குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளின் வாசலில் சி.சி.டி.வி கேமரா அமைக்க வேண்டும். அப்படி செய்தால் திருட்டு சம்பவங்களை பெரியளவில் தவிர்த்து விடலாம்.எத்தனையோ இடங்களில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்படும் இரு சக்கர வாகனங்கள் திருட்டு போகிறது. அங்கு சி.சி.டி.வி கேமரா பொருத்தினால் அத்தகைய திருட்டு சம்பவங்களை தவிர்த்து விடலாம். அப்படியே திருட்டு ஏற்பட்டால் கூட குற்றவாளிகளை எளிதில் பிடித்து விடலாம்.

    குடியிருப்பு பகுதிக்குள் சம்பந்தமில்லாத நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனே காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும். அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் ஏதாவது பிரச்சினை அல்லது திருட்டு ஏற்பட்டால், உடனே காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    பிறருக்கு ஏற்படும் துன்பம் நமக்கு என்று எண்ணி செயல்பட வேண்டும். அப்படியாக ஒவ்வொருவரும் செயல்பட்டால் திருட்டு மட்டுமின்றி குற்ற சம்பவங்களையும் எளிதில் தடுத்து விடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  

    • வனத்துறையினர் எலைட் படையினர் சல்லடை போட்டு தேடும் பணி தீவிரம்
    • மேலும் ஒரு பசுவை புலி தாக்கியது

    நாகர்கோவில் :

    பேச்சிப்பாறை அருகே சிற்றார் ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு மூக்கறைக்கல் பகுதியில் குடியிருப்புகளில் புலிகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது.

    இதனால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் புலி சிக்கவில்லை. அந்த பகுதியில் 25 இடங்களில் கண்காணிப்பு காமிரா அமைக்கப்பட்டு வனத்துறையினர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். ஆனால் புலியை பற்றி எந்த தகவலும் கிடைக்காத நிலையில் தினமும் ஆடு, மாடுகளை கடித்து குதறி வந்தது.

    இதையடுத்து புலியை பிடிக்க களக்காட்டில் இருந்து மருத்துவ குழுவினரும், தேனி மாவட்டம் வைகை ஆறு பகுதியில் இருந்து எலைட் படையினரும் குமரி மாவட்டம் வந்தனர்.

    அவர்கள் குமரி மாவட்ட அதிகாரி இளையராஜா உடன் இணைந்து புலியை பிடிக்க புதுவியூகம் வகுத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சிற்றாறு சிலோன் காலனி மூக்கறைக்கல் பகுதியில் வனத்துறையினர் ஆட்டு கொட்டகை போன்று கூண்டு அமைத்து புலியை பிடிக்க முயன்றனர்.

    ஆனால் புலி சிக்கவில்லை. வனத்துறையினரும், எலைட் படையினரும் பழங்குடி மக்களுடன் இணைந்து 2 குழுக்களாக பிரிந்து சென்று தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று புரத்தி மலைப் பகுதியில் மேலும் ஒரு மாட்டை புலி கடித்து உள்ளது. இதில் பசுவிற்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர். புலி சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் சுற்றி வருவது தெரியவந்துள்ளது. அந்த பகுதி முழுவதும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சிற்றாறு பகுதியில் ஒரு குழுவினரும், சிற்றாறிலிருந்து பத்துகாணி வரை மேலும் ஒரு குழுவினரும் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். காட்டுப்பகுதி முழுவதும் சல்லடை போட்டு தேடும் பணி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மேலும் 25 இடங்களில் கண்காணிப்பு காமிராவை அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இன்று காலை அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சிற்றாறு முதல் பத்து காணி வரையில் உள்ள பகுதிகளில் காமிராக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரி இளையராஜா கூறுகையில், புலியை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. வனத்துறையினர் எலைட் படையினரும் காட்டுப்பகுதியில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சிற்றாறு சிலோன் காலனி மற்றும் பேச்சிப்பாறை பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது சிற்றாறில் இருந்து பத்துகாணி வரை தேடும் பணி நடந்து வருகிறது. கூடுதலாக 25 இடங்களில் கண்காணிப்பு காமிராவும் அமைக்கப்பட்டு கண்காணித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை
    • தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான தடயங்களை பதிவு செய்தனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரம் நான்கு வழி சாலை ரவுண் டானா சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் கோபி. கன்னியாகுமரியில் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

    வியாபாரியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் நேற்று காலையில் இவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர். இது பற்றி அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் கன்னியா குமரி டி.எஸ்.பி. மகேஷ் குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் நோட்டமிட்ட யாரோ சில மர்ம நபர்கள் இந்த வீட்டில் ஆட்கள் இல்லாததை பயன்படுத்தி அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளது தெரியவந்தது.

    மேலும் அந்த வீட்டில் உள்ள அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது தெரிய வந்தது. அந்த பீரோவில் இருந்து 4 பவுன் நகை மற்றும் ரூ.48 ஆயிரம் ரொக்க பணம் போன்றவற்றை அந்த மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற தும் தெரியவந்துள்ளது. இந்த கொள்ளை நடந்த வீட்டில் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான தடயங்களை பதிவு செய்தனர்.

    மேலும் போலீஸ் துப்பறியும் நாயும் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடிக்கப்பட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த கண்காணிப்பு காமிராவில் ஒரு சில நபர்களுடைய உருவங்கள் தெரிவதால் அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த பசுமாடு ஒன்றினை சிறுத்தை தாக்கி இழுத்துச்சென்றுள்ளது.
    • கேமரா பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வனத்துறையினர் நடவடிக்கை

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானை,காட்டு மாடு, மான்,சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வசித்து வருகின்றன. உணவுக்காகவும், தண்ணீர் தேவைக்காகவும் அடிக்கடி வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன.

    காரமடையை அடுத்துள்ள முத்துக்கல்லூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(45). விவசாயியான இவர் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் பசு மாடுகளை வளர்த்து பால் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை தான் வளர்த்து வரும் மாடுகளை முத்துக்கல்லூர் பகுதியை ஒட்டியுள்ள தோகை மலை அடிவாரப்பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்துச்சென்றுள்ளார்.

    அப்போது,அங்கு மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த பசுமாடு ஒன்றினை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து பதுங்கி இருந்த சிறுத்தை தாக்கி இழுத்துச்சென்றுள்ளது. மாட்டின் அலறல் சத்தம் கேட்ட கோவிந்தராஜ் மாட்டினை சிறுத்தை தூக்கி சென்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதனையடுத்து அவர் காரமடை வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.விரைந்து வந்த வனத்துறையினர் உதவியுடன் அங்கு சென்று பார்த்த போது அங்குள்ள புதர் பகுதியில் பசுமாடு இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.

    இதனையடுத்து உயிரிழந்த பசுமாட்டினை வனத்துறையினர் ஆய்வு செய்தபோது சிறுத்தை தாக்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும்,காலடித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டும் அது சிறுத்தைதான் என வனத்துறையினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காரமடை வனச்சரகர் திவ்யா கூறுகையில் முத்துக்கல்லூர் பகுதியில் பசு மாட்டினை அடித்துக்கொன்றது குறித்து காலடித்தடங்கள் மற்றும் நகக்கீறல்கள் உள்ளிட்டவற்றை வைத்து அது சிறுத்தை தான் என்பது ஊர்ஜிதமாகி உள்ளது.

    கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின் பெயரில் விவசாயி கோவிந்தராஜின் பட்டா நிலம்,இரவு நேரங்களில் மாடுகளை அடைக்கும் பட்டி சாலை, வனப்பகுதியில் இருந்து சிறுத்தை வெளியேறும் இடம் என 6 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், நடமாட்டம் தெரிய வந்தவுடன் மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் கூண்டு வைத்து பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

    • மோட்டார்சைக்கிள் திருடியவர்களை 2 மணி நேரத்தில் போலீசார் பிடித்தனர்.
    • இருந்த கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தனர்.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணிபுரிபவர் ஆனந்தகுமார். இவர் சம்பவத்தன்று காந்திநகரில் உள்ள ஓட்டல் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

    இதுதொடர்பாக அவர் அருப்புக்கோட்டை நகர் போலீசில் புகார் செய்தார். உதவி போலீஸ் சூப்பிரண்டு கருண்காரட் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ஷோபியா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், உமா மாலினி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். திருட்டு நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளை திருடியது கல்லூரணியை சேர்ந்த பெருமாள் மகன் முரளிதரன், நாகூர் கனி என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், ஆனந்தகுமாரின் மோட்டார் சைக்கிளை மீட்டனர். திருட்டு போன 2 மணி நேரத்திலேயே மோட்டார்சைக்கிளை போலீசார் மீட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் ஆதிகேசவபெருமாளை கும்பிட்ட பிறகு இந்த கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவது வழக்கம்.
    • சம்பவ இடத்திற்கு வந்த திருவட்டார் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டதில் ஆலயத்தின் ஒரு பகுதியில் பெரிய அளவிலான ஏணி வைத்து உள்ளே சென்றுள்ளனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலும் ஒன்று.

    இத்திருக்கோவில் வளாகத்தில் தென்கிழக்கு பகுதியில் நரசிம்மர் மடம் திருக்கோவில் அமைந்துள்ளது. கேரளா மாநிலம் திருச்சூர் நடுவில் மடத்திற்கு சொந்தமான இத்திருக்கோவிலில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் ஆதிகேசவபெருமாளை கும்பிட்ட பிறகு இந்த கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவது வழக்கம்.

    தினமும் அதிகளவில் பக்தர்கள் வந்து தங்கள் நேர்ச்சைகளை செய்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று காலையில் ஆலய அர்ச்சகர் ஷம்புநாத் ஆலயத்தில் வழக்கமாக நடைதிறப்பதற்காக வந்தார்.

    அப்போது ஆலய உண்டியல் உடைக்கபட்டது இருப்பது தெரியவந்தது. இது குறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவட்டார் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டதில் ஆலயத்தின் ஒரு பகுதியில் பெரிய அளவிலான ஏணி வைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் ஆலயத்தின் மடப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த அரசி பானையை திறந்து அதில் வைக்கபட்டிருந்த சாவிகளை எடுத்துள்ளனர். பின்னர் அங்கிருந்த சிறியதும் பெரியதுமான 2 உண்டியல்கள் உடைத்துள்ளனர். அதிலிருந்த ரூபாய்நோட்டுகளை கொள்ளையர்கள் எடுத்து சென்றுள்ளனர். அதில் இருந்த சில்லறை காசுகளை கொள்ளையர்கள் விட்டுசென்றுள்ளனர் .

    இத்திருக்கோவிலில் அன்னபூர்ணேஸ்வரி, இரண்டு யோகநரசிம்மர் ஸ்ரீதேவி பூதேவி உட்பட 4 பஞ்சலோக விக்ரகங்கள் உள்ள நிலையில் உண்டியலை உடைத்து பணத்தை மட்டும் கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உண்டியல் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர் அங்கு வைக்கபட்டிருந்த சி.சி.டி.வி. காட்சி பதிவு பெட்டியையும் தூக்கிசென்றுள்ளனர். இது குறித்து வழக்குபதிவு செய்த திருவட்டார் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

    பிரசித்திபெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் 1992-ம் ஆண்டு மிகப்பெரிய கொள்ளை சம்பவம் நடைபெற்று கோவிலில் இருந்த பெரும் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்து சென்றனர். இப்போது மீண்டும் கொள்ளை சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கீழக்கரை நகராட்சியில் சிறைபிடித்த மாடுகள் மாயமாகின.
    • கண்காணிப்பு காமிரா உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் ஏராளமானோர் பசு மாடுகளை வளர்த்து வருகின்றனர். காலையில் பசு மாடுகளில் பால் கறந்த பின்பு அவைகளை வெளியே விடும் உரிமையாளர்கள் பின்னர் அதைப்பற்றி கண்டு கொள்வது கிடையாது.

    பகல் நேரங்களில் வெளியில் விடப்படும் இந்த மாடுகள் பஸ் நிலையம், கீழக்கரை சாலைகளில் சுற்றி திரிகின்றன. இரவு நேரங்களில் பஸ் நிலையத்திலேயே தங்கி விடுகின்றன. பஸ் நிலையத்திற்குள் வரும் வாகனங்கள் ஹாரன் அடித்தாலும் ஒதுங்குவது கிடையாது. இதனால் சமீப காலமாக பஸ் டிரைவர்கள் பஸ்களை நிறுத்த முடியாமல் சிரமம் அடைந்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலைகளில் மாடுகள் நடமாட்டம் இருந்தால் கால்நடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் எச்சரித்தார். அது காற்றில் பறந்த உத்தரவாக இருந்து வந்தது.

    கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் நிலையம், சாலைகளில் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர், சமூக நல அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதன் எதிரொலியாக கீழக்கரை நகர் மன்ற தலைவர் செஹானஸ் ஆபிதா ஆலோசனையின்படி துப்புரவு பணியாளர்கள் சாலையில் திரிந்த மாடுகளை பிடித்து நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அடைத்தனர். அபராதம் செலுத்திய பின் உரிமையாளர்களிடம் மாடுகள் ஒப்படைக்க பட்டன.

    அபராதம் செலுத்தாத 28 மாடுகள், ஒரு கன்றை பிடித்து தனியார் நிலத்தை வாடகைக்கு எடுத்து அடைத்தனர். மாடுகளை அடைத்து 10 நாட்கள் ஆகியும் உரிமையாளர்கள் வரவில்லை. நகராட்சி மூலம் மாடுகளுக்கு தீவனங்கள் வழங்கப்பட்டு பராமரிக்கப்பட்டன.

    இந்த நிலையில் நகராட்சி ஊழியர்கள் மாடுகளுக்கு தீவனம் வைக்க சென்றுள்ளனர். அப்போது மாடு அடைக்கப்பட்டு இருந்த கதவின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 28 மாடுகளையும் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதைக்கண்ட நகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து நகர்மன்ற தலைவர் மற்றும் ஆணையாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து நகர் மன்ற தலைவர் செகானாஸ் ஆபிதா கூறுகையில், அடைத்து வைக்கப்பட்டிருந்த மாடுகள் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்துள்ளோம். இது குறித்து போலீசார் இன்று விசாரணை நடத்த உள்ளனர். இங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து மாடுகளை மீட்டு சென்றவர்கள் குறித்து அடையாளம் காணப்படும். சம்பந்தப்பட்ட இடத்தில் பணிபுரியும் காவலர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என்றார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெண் தங்களது மகளுக்கு தோஷம் இருப்பதாகவும் தெரிவித்தார்
    • தங்கம் காகத்திற்கு உணவு வைத்துவிட்டு வீட்டிற்கு வருவதற்குள் தங்க நகைகளை மாற்றிவிட்டு அந்த பெண் கவரிங் நகை களை வைத்துள்ளார்

    நாகர்கோவில் :

    கொல்லங்கோடு அருள் குன்று பகுதியைச் சேர்ந்த வர் முருகன். இவர் வெளி நாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தங்கம் (வயது 52). இவர்க ளுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.மகன் வெளியூரில் தங்கி படித்து வருகிறார். மகள் எம்.எஸ்.சி. படித்து வருகிறார்.

    தங்கம் கடந்த 2-ந்தேதி நாகர்கோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக களியக்காவிளையிலிருந்து பஸ்ஸில் நாகர்கோவிலுக்கு வந்தார். அப்போது பஸ்சில் வைத்து பக்கத்தில் இருந்த பெண் ஒருவர் தங்கத்திடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தங்கத்திடம் குடும்ப விவரங்களை கேட்டு அறிந்தார். உடனே அந்த பெண் தங்களது மகளுக்கு தோஷம் இருப்பதாகவும் தெரிவித்தார். நான் களியக்காவிளைக்கு வரும் போது தோஷத்தை சரி செய்வதாக தெரிவித்தார்.

    இதையடுத்து தங்கத்தின் செல்போன் எண்ணை பெண் வாங்கிக் கொண்டார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தங்கத்தை தொடர்பு கொண்டு பேசிய பெண் தான் களியக்காவிளைக்கு வந்திருப்பதாகவும் உங்களது வீட்டின் முகவரியை கூறுங்கள் என்றும் கூறி யுள்ளார்.

    உடனே தங்கம் களியக்கா விளைக்கு சென்று அந்தப் பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீட்டில் வைத்து பரிகார பூஜை நடத்த ஏற்பாடு செய்தனர். வீட்டில் அவரது மகளும் இருந்துள்ளார். மகளும், தங்கமும் பரிகார பூஜையில் இருந்தனர். அப்போது அவர்களை வீட்டிலிருந்து நகை அனைத்தையும் ஒரு துணியில் கட்டி கொண்டு வருமாறு அந்த பெண் தெரிவித்தார்.

    உடனே அவர்கள் வீட்டில் இருந்து 30 பவுன் நகையை துணி ஒன்றில் கட்டிக்கொண்டு அந்த பெண்ணிடம் கொடுத்தனர். பின்னர் வீட்டில் பரிகார பூஜை மேற்கொண்டார். பரிகார பூஜை மேற்கொண்டபோது அந்த பெண் தங்கத்தின் மகளிடம் அவருக்கு பரிகார பூஜைகள் முடிந்து விட்டதாகவும் அவரை வீட்டில் உள்ள அறைக்கு செல்லுமாறும் கூறினார்.உடனே அவர் வீட்டில் உள்ள மற்றொரு அறைக்கு சென்றார். தங்கத்திடம் காகத்திற்கு உணவு வைத்து விட்டு வருமாறு தெரிவித்தார்.

    உடனே தங்கமும் காகத் திற்கு உணவு அளிப்பதற்காக வெளியே சென்று மீண்டும் வீட்டிற்குள் வந்தார். அதன் பிறகு அந்த பெண் பூஜை வைத்து இருந்த நகைகளை உடனடியாக திறந்து பார்க்க கூடாது மாலையில் தான் பார்க்க வேண்டும் அந்த நகைகளை அலமாரியில் கொண்டு வைக்குமாறு கூறினார். உடனே தங்கமும் அந்த நகைகளை வீட்டின் அலமாரியில் கொண்டு வைத்துள்ளார்.

    பின்னர் அந்த பெண்ணை ஆட்டோ ஒன்றில் ஏற்றி நடை காவிற்கு தங்கம் வழிஅனுப்பி வைத்தார். மாலையில் அலமாரியை திறந்து நகையை பார்த்தபோது தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தனர். தங்க நகை களுக்கு பதிலாக கவரிங் நகைகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த தங்கம் இதுகுறித்து கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். தங்கம் காகத்திற்கு உணவு வைத்துவிட்டு வீட்டிற்கு வருவதற்குள் தங்க நகைகளை மாற்றிவிட்டு அந்த பெண் கவரிங் நகை களை வைத்துள்ளார். திட்டமிட்டு இந்த கொள்ளையில் அந்த பெண் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

    போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். நடைக்காவு பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்த பெண் முககவசம் அணிந்து கொண்டு குடையை பிடித்தவாறு செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. எனவே அவரை அடையாளம் காண முடியவில்லை.

    இதையடுத்து போலீசார் தங்கத்திடம் அந்த பெண்ணின் அடையாளங் களை கேட்டறிந்தனர்.இதை தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 30 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார்
    • இருசக்கர வாகனத்தை திருடி சென்ற திருடர்களை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    தெங்கம்புதூர் அருகே உள்ள பணிக்கன் குடியிருப்பை சேர்ந்தவர் கண்ணன் (வயது 39). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை சம்பவத்தன்று வீட்டு காம்பவுண்டுக்குள் நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார்.

    மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை. பல இடங்களிலும் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை‌. உடனே பதறிப்போன கண்ணன் இதுகுறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருசக்கர வாகனம் திருட்டுப் போன இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் ஏதாவது திருடனின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று விசாரணை செய்தனர்.

    அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமிராவில் இருசக்கர வாகனத்தில் மேலே ஒருவன் ஏறி இருந்து 2 நபர்கள் இருசக்கர வாகனத்தை தள்ளுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்தப் பதிவை போலீசார் கைப்பற்றி அதன் அடிப்படையில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட்செல்வசிங் வழக்குப்பதிவு செய்து. இருசக்கர வாகனத்தை திருடி சென்ற திருடர்களை தேடி வருகின்றனர். வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் திருட்டுப் போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நாகர்கோவில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்
    • பின்னால் மோட்டார் சைக்கிள்களில் 2 பேர் வந்தனர். அவர்கள் திடீ ரென பிரபிலாவின் கழுத்தில் கிடந்த தங்க நகையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

    தக்கலை, செப். 9-

    தக்கலை அருகே உள்ள மூலச்சல், வட்டியான் விளையைச் சேர்ந்தவர் பிரபிலா (வயது 37), லேப் டெக்னீசியன்.

    இவர் தனது கணவர் ராஜபாண்டேயுடன், நாகர்கோவில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் மாலையில் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து வீட்டுக்குப் புறப்பட்டனர்.

    மணலி சந்திப்பில் இருந்து மூலச்சல் சாலைக்கு அவர்கள் திரும்பிய போது, பின்னால் மோட்டார் சைக்கிள்களில் 2 பேர் வந்தனர். அவர்கள் திடீ ரென பிரபிலாவின் கழுத்தில் கிடந்த தங்க நகையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபிலா, தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் 9 பவுன் நகை பறி போனதாக குறிப்பிட்டு இருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி, அதில் ஹெல்மெட் அணிந்து யாராவது தப்பிச் செல்கிறார்களா? அவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டிற்கு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • 40சவரன் நகை,கால் கிலோ வெள்ளி பொருட்கள் பத்தாயிரம் பணம் ஆகியவை திருட்டுப் போனது தெரியவந்தது.

    திண்டிவனம் சாய் லட்சுமி நகரை சேர்ந்தவர் சசிவிக்குமார். இவர் கருவம்பாக்கம் அரசுப் பள்ளியில்ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லதா. விழுக்கத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று சசிவிக்குமார்தனது மனைவி மற்றும் மகள், மகன் ஆகியோர் காலை பள்ளிக்கு சென்று விட்டனர்.நேற்று மாலை 5 மணி அளவில் வீட்டிற்கு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கே படுக்கை அறையில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தது, மேலும், அங்கிருந்த இரண்டு பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 40சவரன் நகை,கால் கிலோ வெள்ளி பொருட்கள் பத்தாயிரம் பணம் ஆகியவை திருட்டுப் போனது தெரியவந்தது. இது குறித்து ஆசிரியர் சசிவிகுமார்.ரோசனை போலீசில் புகார் செய்தார். தகவல் அறிந்த திண்டிவனம் ஏ.எஸ்.பி. அபிஷேக் குப்தா தலைமையிலான போலீசார்அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து தடயவியல் நிபுண ஏடிஎஸ்பி சோமசுந்தரம்,சப் இன்ஸ்பெக்டர்கள் தக்ஷிணாமூர்த்தி,கல்பனா காவலர் சரவணன் கொண்ட குழு வரவழைத்து கொள்ளை நடந்த இடத்தில் கிடைத்த தடயங்களைச் சேகரித்தனர்.

    கொள்ளை நடந்த வீட்டில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு இருந்தது. அதனை கொள்ளையர்கள் துண்டித்து உள்ளனர். விழுப்புரத்தில் இருந்து மோப்பநாய் ராக்கி வர வைக்கப்பட்டுஅங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் திருவள்ளுவர் நகர் வரை சென்று நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இது தவிர அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்கள் மூலம் போலீசார் கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்கி வருகிறார்கள்

    • வடமாநில தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் தொழிலாள ர்கள் அதிகளவில் வேலை பார்த்து வருகின்றனர்.
    • சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து அதனை கூண்டு வைத்துபிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் தேனாடு கம்பை அறக்காடு பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் உள்ளது.

    இந்த தோட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் தொழிலாள ர்கள் அதிகளவில் வேலை பார்த்து வருகின்றனர்.இந்த நிலையில் சம்பவத்தன்று இந்த தோட்டத்தில் பணியாற்றி வரும் நிஷாந்த் என்பவரது 4 வயது மகளை புதர் மறைவில் மறைந்திருந்த சிறுத்தை தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வனத்து றையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டிக்கு அனுப் பினர்.தொடர்ந்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

    சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து அதனை கூண்டு வைத்துபிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை கண்காணிக்க அந்த பகுதியில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். மாவட்ட வன அலுவலர் சச்சின் உத்தரவின் பேரில், உதவி வன பாதுகாவலர் சரவணன் தலைமையில், சிறுத்தை தாக்கி குழந்தை இறந்த அரக்காடு பகுதியில் 2 இடத்தில் கண்காணிப்பு காமிரா பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

    ×