மோட்டார்சைக்கிள் திருடியவர்களை 2மணி நேரத்தில் பிடித்த போலீசார்

மோட்டார்சைக்கிள் திருடியவர்களை 2 மணி நேரத்தில் போலீசார் பிடித்தனர். இருந்த கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளுடன்போலீசார்.
பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளுடன்போலீசார்.
Published on

அருப்புக்கோட்டை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணிபுரிபவர் ஆனந்தகுமார். இவர் சம்பவத்தன்று காந்திநகரில் உள்ள ஓட்டல் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இதுதொடர்பாக அவர் அருப்புக்கோட்டை நகர் போலீசில் புகார் செய்தார். உதவி போலீஸ் சூப்பிரண்டு கருண்காரட் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ஷோபியா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், உமா மாலினி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். திருட்டு நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளை திருடியது கல்லூரணியை சேர்ந்த பெருமாள் மகன் முரளிதரன், நாகூர் கனி என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், ஆனந்தகுமாரின் மோட்டார் சைக்கிளை மீட்டனர். திருட்டு போன 2 மணி நேரத்திலேயே மோட்டார்சைக்கிளை போலீசார் மீட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com