search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடற்கரை"

    • நல்லதை செய்வதற்காக மக்கள் திரளாக வருவார்கள்.
    • மக்களும் குப்பைகளை அப்படியே வீசக்கூடாது.

    சென்னை:

    சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'நேச்சுரலே' நிறுவனம் சார்பில் சென்னை அடுத்த கானத்தூர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    'நேச்சுரலே' நிறுவனம், 'சத்சவ் அறக்கட்டளை' மற்றும் 'எக்னோரா' அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், கடல் அழகை பராமரிப்பது குறித்த அர்ப்பணிப்பை எடுத்துக் கூறும் வகையிலும் சென்னையை அடுத்த கானத்தூர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியை நேற்று நடத்தியது.

    இந்த நிகழ்ச்சியில் 'நேச்சுரலே' நிறுவனத்தின் நிறுவனர் சம்யுக்தா ஆதித்தன், 'தினத்தந்தி' குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், சத்சவ் அறக்கட்டளை உறுப்பினர் கணேஷ், எக்னோரா அமைப்பின் உறுப்பினர் மோகன் உள்பட தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தன்னார்வலர்கள் கடற்கரையில் மலைபோல் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் இல்லாத கழிவுகளை தனித்தனியாக பிரித்து சேகரித்தனர். பின்னர் அவை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த ஊழியர்கள் மூலம் அங்கிருந்து அகற்றப்பட்டது.

    சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு 'நேச்சுரலே' நிறுவனத்தின் இந்த முயற்சி வருங்காலத்திலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக 'நேச்சுரலே' நிறுவனத்தின் நிறுவனர் சம்யுக்தா ஆதித்தன் கூறியதாவது:-

    மனிதர்களால் சேதப்படுத்தப்பட்ட இயற்கையை, மனிதர்களாலேயே மறுசீரமைப்பு செய்தல் மற்றும் நிலைத்தன்மை ஆகிய கொள்கைகளை அடிப்படையாக வைத்துதான் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. நல்லதை செய்வதற்காக மக்கள் திரளாக வருவார்கள். இதனால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.

    கடற்கரையை சுத்தம் செய்ததில், ஏராளமான பிளாஸ்டிக்குகள், பாட்டில்கள், சிகரெட் பாக்கெட்டுகள், காலணிகள் கிடந்ததை அகற்றினோம். இவற்றை அப்படியே போட்டுவிட்டு சென்று விடுகிறார்கள். எனவே குப்பைகளை போடுவதற்காக சிமெண்ட் தொட்டிகளை வைக்க இருக்கிறோம்.

    மக்களும் குப்பைகளை அப்படியே வீசக்கூடாது, குப்பை தொட்டிகளில்தான் போட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும். ஒருவர் இதனை செய்தால், அவரை பின்பற்றி மற்றவர்களும் செய்வார்கள். நாம் அதில் மாற்றத்தை காண முடியும். இதுதான் எங்களுடைய யோசனை. இதனை அனைவரும் இணைந்து செய்ய வேண்டும். இது முதல் திட்டம் என்பதால் சிறிய அளவில் செய்திருக்கிறோம்.

    சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடற்கரையை தொடர்ந்து சுத்தம் செய்தல் உள்ளிட்ட பிற நிகழ்வுகளையும் தொடர்ந்து மேற்கொள்வோம். சென்னையில் உள்ள கடற்கரைகளில் சிமெண்ட் குப்பை தொட்டிகள் வைப்பது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சியிடமும் பேசி வருகிறோம். யோசனை அளவில் இருக்கும் இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்த இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடற்கரை களை கட்டியது
    • ஞாயிற்றுக்கிழமை விடுமுறையான இன்று கூட்டம் கூடியது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் வாரத்தின் கடைசி நாட்க ளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழ மை போன்ற விடுமுறை நாட்களிலும் பண்டிகை கால விடுமுறை நாட்களிலும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது.

    இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரிக்கு வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. இன்று கன்னியா குமரிக்கு வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப் பட்டது. இதனால் இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர்.

    அதேபோல கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக படகுத்துறையிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    இதனால் சுற்றுலா தலங்கள் களை கட்டியது. மேலும் சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதி கரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது. கடலோர பாதுகாப்பு குழுமபோலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • கடற்கரை ஓரமாக கடல் காத்தாள் படை பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது.
    • கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் திருடிய மர்ம நபரை தேடி வந்தனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடற்கரை சாலையில் காமராஜர் மணிமண்டபத்தின் மேற்கு பகுதியில் கடற்கரை ஓரமாக கடல் காத்தாள் படை பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் மேற்கூரை மற்றும் கதவுகள் இன்றி திறந்து வெளியில் பீடங்களுடன் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் மாதவபுரத்தை சேர்ந்த போத்திராஜா (வயது 43) என்பவர் பூஜைகள் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு பூஜைகள் செய்துவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்த போது பீடத்தில் இருந்த பித்தளை கோ டாரி மற்றும் அரிவாள் திருடப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து போத்திராஜா கன்னியாகுமரி போலீசில் புகார் செய்]தார். அதன்பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் திருடிய மர்ம நபரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் போலீசார் ரோந்து சென்றபோது வாலிபர் ஒருவர் சந்தே கத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்.

    அப்போது அவர் நெல்லை மாவட்டம் பாளை யங்கோட்டை திருமலை கொழுந்து அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த செல்ல துரை (30) என்பதும், கன்னியாகுமரி கடற்கரை யில் உள்ள கடல் காத்தாள் படை பத்திரகாளியம்மன் கோவிலில் திருடியதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் இது தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

    அதன்பிறகு அவரை நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் செய்தனர். அவரை காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் ஜெயிலில் அடைக்கப்பட் டார்.

    • 4-ந்தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது
    • விழாவில் ஏராளமான பலவண்ண பட்டங்கள் பறக்க விடப்படுகின்றன

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்ட சுற்றுலாத்துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து சுற்றுலா பயணிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மற்றும் சொத்தவிளை கடற்கரை பகுதியில் பட்டம் பறக்க விடும் விழாவை வருகிற 4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை 3 நாட்கள் நடத்துகிறது.

    கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் வருகிற 4-ந் தேதி பகல் 12 மணிக்கு நடக்கும் பட்டம் பறக்க விடும் விழாவை குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைக்கிறார். அதனைத்தொடர்ந்து சொத்தவிளை கடற்கரை பகுதியில் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் இந்த பட்டம் பறக்க விடும் விழா நடக்கிறது.

    இந்த விழாவில் ஏராளமான பலவண்ண பட்டங்கள் பறக்க விடப்படுகின்றன. இந்த பட்டங்கள் வானத்தில் வர்ண ஜாலங்கள் காட்டுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார் மற்றும் உதவி சுற்றுலா அலுவலர் கீதா ராணி ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • படகுகளை பழுது பார்க்கும் பணி தீவிரம்
    • மீன்பிடி உபகரணங்களையும் பராமரிப்பு செய்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    மீன்களின் இனப்பெருக்கு பருவகாலத்தில் விசைப் படகுகள் மீன் பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. குமரி மாவட் டத்தில் இந்த தடைக் காலம் 2 பருவ காலமாக உள்ளது.

    குமரி கிழக்கு கடற்கரை பகுதியாகிய கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிகளாகிய மணக்குடி, ராஜாக்க மங்கலம், முட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம், கொல் லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமத்தில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும்.

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு விசைப் படகு ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன் பிடித்து விட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் உயர் ரக மீன்களாகிய கணவாய், இறால், புல்லன், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் ஐஸ் போன்ற அத்தி யாவசிய பொருட்களை விசைப்படகில் எடுத்து செல்வர். இந்த வருடம் குமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் கடந்த மே மாதம் 31-ந்தேதி நள்ளி ரவு முதல் தடைக்காலம் தொடங்கியது.

    இதை யொட்டி குளச்சல் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப் படகுகள் கரை திரும்பி மீன்பிடி துறை முகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன.

    இந்த மீன் பிடி தடைக் காலத்தில் விசைப் படகினர் தங்கள் படகுகளை பழுது பார்த்து வருகின்றனர். மீனவர்கள் வலைகளை பின்னும் பணியில் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர். மீன்பிடி உபகரணங்களையும் பராமரிப்பு செய்து வருகின்றனர்.

    குமரி மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகளுக்கு மீன் பிடி தடைக்கலம் நீங்க இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் விசைப்படகினர் மீண்டும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தங்கள் விசைப்படகுகளை தீவிரமாக பழுது பார்த்து வருகின்றனர்.

    • சந்திரயான்-3 விண்கல ராக்கெட்டின் பாகமாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
    • சில ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய விமானத்தில் பாகம் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவின் மேற்கில் உள்ள ஜீரியன் விரிகுடாவுக்கு அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. பெரிய அளவிலான உலோக பாகம் போன்று இருந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். மேலும் அபாயகரமான பொருளில் இருந்து விலகி இருக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தினர்.

    இதுகுறித்து ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் கூறும்போது, மத்திய மேற்கு கடற்கரையில் உள்ள கிரீன் ஹெட் அருகே மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. அது தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு வருகிறோம். இது ஒரு வெளிநாட்டு விண்வெளி ஏவுகணையில் இருந்து வந்திருக்கலாம்.

    மற்ற நாடுகளுடன் நாங்கள் தொடர்பு கொள்கிறோம். அந்த பொருளின் தோற்றம் தெரியாததால் அதை கையாள்வதையோ அல்லது நகர்த்த முயற்சிப்பதையோ மக்கள் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.

    இதற்கிடையே ஆஸ்திரேலிய கடற்கரையில் ஒதுங்கிய அந்த பொருள், சமீபத்தில் இந்தியாவில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கல ராக்கெட்டின் பாகமாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

    மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய விமானத்தில் பாகம் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் கூறும்போது, விசாரணை நடந்து வருவதால், தகவல்கள் கிடைக்கும் வரை முடிவுகளை எடுப்பதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.

    இந்த மர்ம பொருள் 2 மீட்டர் உயரமும், 2 மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது. ராக்கெட் பாகம் போன்று உள்ளது.

    • ஆடி அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.
    • கேரளாவில் இருந்து வந்த பலரும் குழித்துறை தாமிரபரணியாற்றில் பலிதர்ப்பணம் செய்தனர்.

    கன்னியாகுமரி :

    இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் ஆடி அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் இந்துக்கள் அதிகாலை யிலேயே எழுந்து கடல், நதி, ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    குறிப்பாக இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள புண்ணிய தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.

    அதேபோல ஆடி அமாவாசையான இன்று காலை கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரி வேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள். அவர்கள் கடலில் நீராடிவிட்டு வந்து கடற்கரையில் அமர்ந்து இருக்கும் புரோகிதர்கள் மற்றும் வேதமந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்தனர். அவ்வாறு பூஜை செய்த பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்து சென்று கடலில் போட்டுவிட்டு மீண்டும் நீராடி தங்களது முன்னோர்க ளை நினைத்து தர்ப்பணம் செய்தனர்.

    பின்னர் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில், சன்னதி தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவில் மற்றும் விவேகானந்தபுரத்தில் உள்ள சர்க்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த முறை ஆடி மாதம் 2 அமாவாசை நாட்கள் வருகிறது. இந்த ஆடி மாதத்தில் மாத பிறப்பான இன்றும் ஆடி மாதத்தின் கடைசி நாளான அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 16-ந்தேதியும் ஆடி அமாவாசை வருகிறது.

    இதில் 2-வதாக அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 16-ந்தேதி வரும் ஆடி அமாவாசையை தான் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கடைபி டிக்கிறார்கள். இதனால் எந்த ஆடி அமாவாசையை கடைப்பிடிப்பது என்பதில் பக்தர்கள் குழப்பமான நிலையில் இருந்து வந்தனர். இதன் காரணமாக இந்த ஆடி மாதத்தின் முதல் நாளான இன்று வந்த அமாவாசையை பெரும்பாலான பக்தர்கள் கடைபிடிக்கவில்லை. இதனால் ஆடி அமாவாசையான இன்று கன்னியாகுமரி கடலில் குறைந்த அளவு பக்தர்களே புனித நீராடினார்கள். இருப்பினும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டி ருந்தன. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு குறைந்த அளவு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசை விழா இன்று கடைபிடிக்கப்படாததால் கோவில்களிலும் குறைந்த அளவு பக்தர்கள் கூட்டமே காணப்பட்டன.

    குழித்துறை தாமிரபரணி ஆறு, திற்பரப்பு அருவி பகுதிகளில் இன்று பலரும் மறைந்த முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் செய்தனர். இந்த ஆண்டு 2 ஆடி அமாவாசை வருவதால் கேரளா பஞ்சாங்க முறைப்படி கேரளாவில் இருந்து வந்த பலரும் குழித்துறை தாமிரபரணியாற்றில் பலிதர்ப்பணம் செய்தனர்.

    • திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பொதுமக்கள் வேளாங்கண்ணியில் குவிந்தனர்.
    • பேராலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது.

    இங்கு வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கும் வேளாங்கண்ணி கீழை நாடுகளின் 'லூர்து நகர்' என்று அழைக்கப்படுகிறது.

    இந்தியாவில் கட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது.

    இந்த ஆலயமானது வங்கக்கடற்கரையோரம் அமைந்திருப்பது மேலும் சிறப்பம்சமாகும்.

    இங்கு உத்திரிய மாதா ஆலயம் தனியாக அமைந்துள்ளது. இங்கு ஆண்டு திருவிழா மும்பை வசாய் பகுதி மீனவர்கள் சார்பாக நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் வேளாங்க ண்ணியில் குவிந்து வருகின்றனர்.

    இதனால் வேளாங்கண்ணி பேராலய வளாகம், கடைத்தெரு, கடற்கரை உள்ளிட்ட இடங்களில் எங்கு பார்த்தாலும் கூட்டம் அலைமோதியது.

    வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக தென்னங்கன்றுகளை வாங்கி மாதாவுக்கு சமர்ப்பித்தனர்.

    மேலும் உடல்நலம் பாதுகாக்கவும், படித்த மாணவர்கள் வேலை வாய்ப்பை பெறுவதற்காகவும், பல்வேறு குறைகள் தீர பேராலய பகுதியில் அமைந்துள்ள சிலுவை பாதையில் முட்டியிட்டு சென்று பழைய மாதா கோவிலில் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    அதேபோல வேண்டுதல் நிறைவேற வேண்டி 6 அடி உயர மெழுகுவர்த்தியையும் கடைகளில் வாங்கி அதனை ஆலயத்தில் ஏற்றி வழிபட்டு வருகின்றனர்.

    வெயிலின் தாக்கம் குறைந்து இருந்ததால் பகல் முழுவதும் வேளாங்கண்ணியில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. சிறுவர் முதல் பெரியவர் வரை கடலில் ஆனந்த குளியல் நீராடி வருகின்றனர்.

    • குமரி கடற்கரை பகுதியில் 1 லட்சம் பனைவிதைகள் நடவு பணி தொடக்க விழா
    • பனை வளர்ப்பை மேம்படுத்த தமிழக அரசு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு

    குளச்சல், ஜூன்.28-

    2023 - 2024 வேளாண் நிதிநிலை அறிக்கையில் பனை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கும், பனைத் தொழிலாளர்கள் மேம்பாட்டுக்கும் ரூ.17 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கும் பாராட்டு விழா மற்றும் குமரி கடற்கரை பகுதியில் 1 லட்சம் பனைவிதைகள் நடவு பணி தொடக்க விழா தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் எம்.ஏ.தாமோதரன் தலைமையில் ஜாண்ஸ் கல்லூரியில் நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் எட்வின் ஞானதாஸ் வரவேற்று பேசினார். ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குநர் பாபு, வேளாண்மை துறை இணை இயக்குநர் ஆல்பர்ட் ராபின்சன், கல்லூரி நிறுவனர் அருட்தந்தை ஜான் போஸ்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக விஜய்வசந்த் எம்.பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பனை வெறும் மரம் மட்டுமல்ல. தமிழர்களின் வாழ்வியல் சார்ந்த பண்பாட்டுச் சின்னம். தமிழகத்தின் மாநில மரம். நிலத்தடி நீரை பாதுகாக்கவும், மண் அரிப்பை தடுக்கவும், புயல், சூறாவளிகளில் இருந்து மக்களை பாதுகாக்க பனை பெரிதும் உதவுகிறது. பனையிலிருந்து அபூர்வமான மருத்துவ குணமிக்க பதநீர், நுங்கு, பனங்கிழங்கு, பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனம்பாகு போன்ற பொருட்கள் கிடைக்கிறது. பனையிலிருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களுமே மனித குலத்திற்கு பயன் படக்கூடியவை. அதனால்தான் பனையை கற்பக விருட்சம் என்று அழைக்கிறோம். பனை வளர்ப்பை மேம்படுத்த தமிழக அரசு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து சிறப்பாக செயல்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக வெட்டுமடை கடற்கரையில் குமரி மாவட்டத்தில் 1 லட்சம் பனைவிதைகள் நடவுப்பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் பீபீஜான், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சரோஜினி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜான், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, நாட்டு நலப்பணித்திட்ட பேராசிரியர் முனைவர் ஜெய் அருள் ஜோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். தனலட்சுமி, டினோ, இராஜேஸ்வரி, சமூக சேவகி குமாரி கலா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தனர். பேராசிரியர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இவ்விழாவில் ஏராளமான கல்லூரி மாணவ - மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • திமிங்கலம் வெள்ளை நிற வயிற்றுடன் சாம்பல் நிறத்தில் இருந்தது.
    • திமிங்கலம் கடந்த 9, 10-ந் தேதிகளில் பார்த்த திமிங்கலங்களில் இருந்து வேறுப்பட்டது.

    சென்னை:

    சென்னை நீலாங்கரை கடற்கரையில் நேற்று திமிங்கலம் ஒன்று காணப்பட்டது. நீலாங்கரையை அடுத்த பனையூர் கடற்கரையில் இருந்து 50 மீட்டர் தொலைவில் வட்டமிட்டது. அந்த திமிங்கலம் வெள்ளை நிற வயிற்றுடன் சாம்பல் நிறத்தில் இருந்தது.

    இதுகுறித்து ட்ரி அறக்கட்டளை தலைவர் சுப்ரஜா தாரினி கூறியதாவது:-

    பனையூர் கடற்கரையில் திமிங்கலம் வந்தது பற்றி தகவல் கிடைத்ததும் அங்கு சென்றோம்.

    நீலாங்கரை கடற்கரையில் சில நாட்களுக்கு முன்பு 20 திமிங்கல சுறாக்கள் காணப்பட்ட நிலையில் 2-வது முறையாக நேற்று மற்றொரு திமிங்கலம் கடற்கரைக்கு வந்துள்ளது.

    அது 15 முதல் 18 அடி நீளம் கொண்டது. கரைக்கு மிக அருகில் வந்த அந்த திமிங்கலத்தை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். உடனே பலர் திமிங்கலத்தை தங்களது செல்போன்களில் வீடியோ, புகைப்படம் எடுத்தனர்.

    திமிங்கலத்தின் முகம், வால், முதுகுத்துடுப்பு ஆகியவை தெரிந்தன. வெள்ளை வயிற்றுடன் சாம்பல் நிறத்தில் இருந்தது. இதன் தோலில் வெளிரி மஞ்சள் புள்ளிகள் மற்றும் கோடுகள் இருந்தன. இந்த திமிங்கலம் கடந்த 9, 10-ந் தேதிகளில் பார்த்த திமிங்கலங்களில் இருந்து வேறுப்பட்டது.

    இந்த ஆண்டு டால்பின்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன் கரை ஒதுங்கும் விலங்குகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதை நன்கு புரிந்து கொள்ள ஒரு அறிவியல் ஆய்வை நாம்மேற்கொள்ள வேண்டும். திமிங்கல சுறாவை பற்றி மேலும் அறிய பதிவு செய்யப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பைபர் நெட் கேபிள் பதிக்கும் பணி ரூ.3,500 கோடி செலவில் கடலுக்கு அடியில் தீவிரமாக நடந்து வருகிறது.
    • 2 மிதவை கப்பல்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்கள் உதவியுடன் மீண்டும் கடலுக்குள் அந்த கேபிளை பதிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை:

    செயற்கை கோள் உதவியின்றி அதிவேக இணைய வசதி பெறும் வகையில் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடலுக்கு அடியில் பைபர் நெட் கேபிள் பதிக்கும் பணி ரூ.3,500 கோடி செலவில் கடலுக்கு அடியில் 8,100 கிலோ மீட்டர் தூரத்திற்கு பைபர் நெட் கேபிள் எனும் கண்ணாடியிழை வடம் பதிக்கும் பணி சமீபத்தில் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது.

    இதற்காக பட்டினப்பாக்கம் கடலுக்கு தொழில்நுட்ப கப்பல் ஒன்று வந்தது. அது சென்னை பட்டினப்பாக்கம் கடலில் இருந்து மியான்மர் வழியாக சிங்கப்பூருக்கு கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில் பதிக்கப்பட்ட கேபிள் வெளியில் வந்தது. இதையொட்டி 2 மிதவை கப்பல்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்கள் உதவியுடன் மீண்டும் கடலுக்குள் அந்த கேபிளை பதிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்த பணிகள் இன்று மாலைக்குள் முடிவடையும் என்று பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறினர்.

    • சுமார் 20-க்கும் மேற்பட்ட திமிங்கல சுறாக்கள் ஒன்றாக சுற்றி வந்தன.
    • கடலின் மேற்பரப்புக்கு சுறா மீன்கள் வந்து துள்ளி குதித்து சென்றது.

    சென்னை:

    சென்னை நீலாங்கரை கடற்கரையில் இருந்து சில மீட்டர் தூரத்தில் கடந்த சில நாட்களாக அரியவகை திமிங்கல சுறா மீன்கள் அதிக அளவில் காணப்பட்டது.

    சுமார் 20-க்கும் மேற்பட்ட திமிங்கல சுறாக்கள் ஒன்றாக சுற்றி வந்தன. அப்போது கடலின் மேற்பரப்புக்கு சுறா மீன்கள் வந்து துள்ளி குதித்து சென்றது. இதனை அங்கிருந்த மீனவர்கள் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.

    பொதுவாக திமிங்கல சுறா வகைகள் சென்னை கடலோரத்தில் அதிகம் காணப்படுவதில்லை. மேலும் கடந்த சில ஆண்டுகளில் அவை ஒன்று அல்லது இரண்டு என்ற அளவிலேயே இதுவரை பார்த்து உள்ளனர். இந்நிலையில் 20-க்கும் மேற்பட்ட திமிங்கல சுறா மீன்கள் சென்னை கடற்கரை பகுதியில் சுற்றி வருவது அனைவரையும் ஆச்சரியம் அடைய செய்து உள்ளது. இதுபற்றி அறிந்ததும் டிரீ பவுண்டேசன் அமைப்பை சேர்ந்த அதன் நிறுவனர் டாக்டர் சுப்ரஜா தாரினி, மற்றும் டிரீ பவுன்டேசனின் கடல் ஆமை பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த புகழரசன் மற்றும் நிர்வாகிகள் படகு மூலம் திமிங்கல சுறாக்கள் இருந்த கடல்பகுதிக்கு சென்றனர்.

    அப்போது புகழரசன் பாதுகாப்பு உடை அணிந்து கடலுக்குள் குதித்து திமிங்கல சுறாக்களின் செயல்பாட்டை பார்த்தார். இதில் சுமார் 15 அடி முதல் 18 அடிநீலம் உள்ள ஒரு இளம்திமிங்கல சுறா நீந்தி சென்றது. அதனை படம்பிடித்து உள்ளனர்.

    இது போன்று 20-க்கும் மேற்பட்ட திமிங்கல சுறாக்கள் சென்னை கடற்கரை பகுதியில் இருப்பது அரிதானது என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த திமிங்கல சுறாக்களை பழவேற்காடு, செம்மஞ்சேரி, கோவளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்களும் கடலுக்குள் சென்றபோது பார்த்து உள்ளனர்.

    இதுகுறித்து டிரீ பவுன்டேசனின் கடல் ஆமை பாதுகாப்பை சேர்ந்த டி.ஏ.புகழரசன் கூறும் போது, நீலாங்கரை மீனவர்கள் கடந்த 9-ந் தேதி காலை கடற்கரையோரத்தில் 20-க்கும் மேற்பட்ட திமிங்கல சுறா மீன்கள் இருப்பதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அதன் நடமாட்டம் குறித்து பார்வையிட சென்றோம். தண்ணீருக்கு அடியில் சென்று பார்த்தபோது ஒரு திமிங்கல சுறாமீன் சுமார் 15 முதல் 18 அடி நீளம் இருந்தது. அதன் வால் மற்றும் முதுகுத் துடுப்பு தெளிவாகத் தெரிந்தது. அந்த மீனில் எந்த காயமும் இல்லை. வருகிற 14-ந்தேதியுடன் மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீனவர்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குள் செல்வார்கள் என்பதால் இந்த திமிங்கல சுறாக்களை இனிவரும் நாட்களில் பார்ப்பது கடினம் என்றார்.

    ×