search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "whale"

    • 100-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கி உயிருக்கு போராட்டம்
    • உயிருடன் உள்ள திமிங்கலங்களை ஆழ்கடலுக்குள் விட முயற்சி

    டால்பின் மீன் வகைகளில் பெரிய மீன் வகையை சேர்ந்தவை பைலட் திமிங்கலங்கள். அவை ஒரு குழுவாக நீந்தி செல்லும்போது, ஒரு திமிங்கலத்தை பின்தொடர்ந்து மற்ற அனைத்தும் ஒன்றாக செல்வதால் இவ்வகை திமிங்கலங்கள் பைலட் திமிங்கலங்கள் என அழைக்கப்படுகிறது.

    நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் திடீரென கரை ஒதுங்க தொடங்கின. அவற்றில் 50-க்கும் மேற்பட்டவை நேற்று உயிரிழந்தது.

    இந்த திமிங்கல குழு முதல் முதலில் மேற்கு ஆஸ்திரேலியாவின் துறைமுக நகரமான அல்பனியின் செய்ன்ஸ் பீச் பகுதியில் காணப்பட்டது. மாலை நெருங்கும்போது கடற்கரை ஓரத்தின் ஒதுங்கின.

    உடனே மேற்கு ஆஸ்திரேலியாவின் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் ஈர்ப்புத்துறை, திமிங்கலங்களை கண்காணிக்க ஒரு இரவு முகாமை அமைத்தது.

    "ஒரே இரவில் 51 திமிங்கலங்கள் இறந்து விட்டன. இன்னும் 46 திமிங்கலங்கள் உள்ளன. அவற்றை மீண்டும் தண்ணீருக்குள் விட்டுவிட்டு, மேலும் ஆழமான பகுதிகளுக்கு நீந்தி செல்ல ஊக்குவிப்பதுதான் தற்போது எங்கள் நோக்கம். எங்களால் முடிந்தவரை எத்தனை திமிங்கலங்களை காப்பாற்ற முடியுமோ காப்பாற்றுவோம்" என அந்த துறையின் மேலாளரான பீட்டர் ஹார்ட்லி கூறினார்.

    திமிங்கலங்களுக்கு உதவும் குழுவில் ஆஸ்திரேலியாவின் பெர்த் மிருகக்காட்சி சாலையின் கால்நடை மருத்துவர்கள் மற்றும் கடல் விலங்கின நிபுணர்கள் உள்ளனர். அவர்கள் கப்பல்கள் மற்றும் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி திமிங்கலங்களை கடலுக்குள் விட போராடி வருகின்றனர்.

    நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும் உதவ முன்வந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த அசாதாரண நிகழ்வுக்கு ஏதேனும் நோய் காரணமாக இருக்கலாம் என வனவிலங்கு நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    • திமிங்கலம் வெள்ளை நிற வயிற்றுடன் சாம்பல் நிறத்தில் இருந்தது.
    • திமிங்கலம் கடந்த 9, 10-ந் தேதிகளில் பார்த்த திமிங்கலங்களில் இருந்து வேறுப்பட்டது.

    சென்னை:

    சென்னை நீலாங்கரை கடற்கரையில் நேற்று திமிங்கலம் ஒன்று காணப்பட்டது. நீலாங்கரையை அடுத்த பனையூர் கடற்கரையில் இருந்து 50 மீட்டர் தொலைவில் வட்டமிட்டது. அந்த திமிங்கலம் வெள்ளை நிற வயிற்றுடன் சாம்பல் நிறத்தில் இருந்தது.

    இதுகுறித்து ட்ரி அறக்கட்டளை தலைவர் சுப்ரஜா தாரினி கூறியதாவது:-

    பனையூர் கடற்கரையில் திமிங்கலம் வந்தது பற்றி தகவல் கிடைத்ததும் அங்கு சென்றோம்.

    நீலாங்கரை கடற்கரையில் சில நாட்களுக்கு முன்பு 20 திமிங்கல சுறாக்கள் காணப்பட்ட நிலையில் 2-வது முறையாக நேற்று மற்றொரு திமிங்கலம் கடற்கரைக்கு வந்துள்ளது.

    அது 15 முதல் 18 அடி நீளம் கொண்டது. கரைக்கு மிக அருகில் வந்த அந்த திமிங்கலத்தை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். உடனே பலர் திமிங்கலத்தை தங்களது செல்போன்களில் வீடியோ, புகைப்படம் எடுத்தனர்.

    திமிங்கலத்தின் முகம், வால், முதுகுத்துடுப்பு ஆகியவை தெரிந்தன. வெள்ளை வயிற்றுடன் சாம்பல் நிறத்தில் இருந்தது. இதன் தோலில் வெளிரி மஞ்சள் புள்ளிகள் மற்றும் கோடுகள் இருந்தன. இந்த திமிங்கலம் கடந்த 9, 10-ந் தேதிகளில் பார்த்த திமிங்கலங்களில் இருந்து வேறுப்பட்டது.

    இந்த ஆண்டு டால்பின்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன் கரை ஒதுங்கும் விலங்குகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதை நன்கு புரிந்து கொள்ள ஒரு அறிவியல் ஆய்வை நாம்மேற்கொள்ள வேண்டும். திமிங்கல சுறாவை பற்றி மேலும் அறிய பதிவு செய்யப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல்லை பகுதியிலிருந்து குலசேகரன்பட்டிணம் பகுதிக்கு அம்பர்கிரீஷ் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சோதனையில் காரில் இருந்த 3 பிளாஸ்டிக் கவரில் அம்பர்கிரிஷ் இருப்பது தெரியவந்தது.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டிணம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில் போலீசார் உடன்குடி முத்துநகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    ஆம்பர்கிரீஷ்

    அப்போது நெல்லை பகுதியிலிருந்து குலசேகரன்பட்டிணம் பகுதிக்கு விற்பனை செய்வதற்காக வாசனைத்திரவியங்கள் தயாரிக்க பயன்படும் திமிங்கலத்தில் உமில்நீரான அம்பர்கிரீஷ் கடத்தி கொண்டு காரில் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்போது அங்கு வந்த காரை மறித்து போலீசார் சோதனை செய்ததில் காரில் 3 பிளாஸ்டிக் கவரில் திமிங்கலத்தின் எச்சமான அம்பர்கிரிஷ் இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அம்பர்கிரிஷை பறிமுதல் செய்து காரில் வந்த விருதுநகர் மாவட்டம் வடமலைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி, ஆமத்தூர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ், திங்கள்சந்தை பகுதியை சேர்ந்த கிங்ஸ்லி, சூலகரை பகுதியை சேர்ந்த மோகன், தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளம் அருகேயுள்ள ஆசிர்வாதபுரத்தை சேர்ந்த ராஜன் மற்றும் வாகன ஓட்டுநர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசா மி உள்ளிட்ட 6பேரை பிடித்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    25கிலோ எடையுள்ள இந்த அம்பர்கிரீசின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.25கோடியாகும். இதனையடுத்து 6பேரையும் கைது செய்த போலீசார் அம்பர்கிரீஷை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிலிப்பைன்சின் மபினி நகரில் உள்ள கடலில் 16 அடி நீளம் கொண்ட திமிங்கலத்தின் வயிற்றுக்குள் சுமார் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியிருந்ததை கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ந்து போயினர். #Whale #PlasticWaste
    மணிலா:

    உலகிலுள்ள பெருங்கடல்களில் ஆண்டுக்கு சுமார் 80 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதாகவும், இதே நிலை நீடித்தால் 2050-ல் கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக இருக்கும் எனவும் கடந்த ஆண்டு சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி கழகம் தெரிவித்தது.

    குறிப்பாக சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய 5 ஆசிய நாடுகளில் பிளாஸ்டிக் கழிவுகள் பெரும் பிரச்சினையாக உள்ளது.



    இந்த நிலையில் பிலிப்பைன்சின் படாங்காஸ் மாகாணம் மபினி நகரில் உள்ள கடலில் சுமார் 16 அடி நீளம் கொண்ட திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் அந்த திமிலங்கத்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அப்போது அதன் வயிற்றுக்குள் சுமார் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியிருந்ததை கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ந்து போயினர். பிளாஸ்டிக் கழிவுகள் வயிற்றில் தேங்கியதால் முறையாக இரை உண்ண முடியாமல் தவித்துவந்த அந்த திமிங்கலம் நோய்வாய்பட்டு இறந்ததாக ஆராய்ச் சியாளர்கள் தெரிவித்தனர்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் தாய்லாந்தில் இறந்த திமிங்கலத்தின் வயிற்றில் 80 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.   #Whale #PlasticWaste
    தாய்லாந்து நாட்டில் திமிங்கலம் ஒன்று பிளாஸ்டிக் பைகளை விழுங்கியதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #PlasticPiecesInWhaleStomach #Thailandwhaledies

    பாங்காக்:

    பிளாஸ்டிக் மற்றும் பாலீதின் பயன்பாட்டால் சுற்றுப்புறச்சூழல் மாசு, கடல்வளம், நிலத்தடி நீர்மட்டம், மண்வளம், விலங்கினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இவை கடலில் வீசப்படுவதால் கடல்வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக் பைகளை உட்கொண்டு அதிகளவில் இறந்து வருகின்றன. 

    இந்நிலையில் தாய்லாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சோங்லா மாகாண கடற்கரையில், திமிங்கலம் ஒன்று திடீரென கரை ஒதுங்கியது. அந்த திமிங்கலத்துக்கு அப்பகுதியில் இருந்தவர்கள் உணவு கொடுத்தனர். ஆனால் அந்த திமிங்கலம் உணவு உண்ணாமல் இருந்துள்ளது.

    இதையடுத்து, அந்த திமிங்கலத்தை சோதித்த மருத்துவர்கள், அதன் வயிற்றில் ஏதோ சிக்கி இருப்பதை கண்டுபிடித்தனர். அதனால் தான் திமிங்கலத்தால் உணவு உட்கொள்ள முடியவில்லை என்பதால், அதை அகற்றும் முயற்சியில் இறங்கினர். 5 நாள் சிகிச்சைக்கு பின் திமிங்கலத்துக்கு வாந்தி ஏற்பட்டு 8 கிலோ எடையிலான 80 பிளாஸ்டிக் பைகள் வெளியேறின. 

    சிறிது நேரத்தில் திமிங்கலம் பரிதாபமாக உயிரிழந்தது. பிளாஸ்டிக் பொருட்கள் கழிவால் சுற்றுச்சூழல் சீர்கேடு அதிகரித்துவரும் நிலையில், பிளாஸ்டிக் பைகள் திமிங்கலம் உயிரிழந்த சம்பவம் இயற்கை ஆர்வலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. #PlasticPiecesInWhaleStomach #Thailandwhaledies
    ×