search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடியில்  காரில் கடத்திய ரூ.25 கோடி மதிப்புள்ள ஆம்பர் கிரிஷ் பறிமுதல் -6 பேர் கைது
    X

    பறிமுதல் செய்யப்பட்ட ஆம்பர் கிரிஷ் மற்றும் கார்.

    உடன்குடியில் காரில் கடத்திய ரூ.25 கோடி மதிப்புள்ள ஆம்பர் கிரிஷ் பறிமுதல் -6 பேர் கைது

    • நெல்லை பகுதியிலிருந்து குலசேகரன்பட்டிணம் பகுதிக்கு அம்பர்கிரீஷ் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சோதனையில் காரில் இருந்த 3 பிளாஸ்டிக் கவரில் அம்பர்கிரிஷ் இருப்பது தெரியவந்தது.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டிணம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில் போலீசார் உடன்குடி முத்துநகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    ஆம்பர்கிரீஷ்

    அப்போது நெல்லை பகுதியிலிருந்து குலசேகரன்பட்டிணம் பகுதிக்கு விற்பனை செய்வதற்காக வாசனைத்திரவியங்கள் தயாரிக்க பயன்படும் திமிங்கலத்தில் உமில்நீரான அம்பர்கிரீஷ் கடத்தி கொண்டு காரில் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்போது அங்கு வந்த காரை மறித்து போலீசார் சோதனை செய்ததில் காரில் 3 பிளாஸ்டிக் கவரில் திமிங்கலத்தின் எச்சமான அம்பர்கிரிஷ் இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அம்பர்கிரிஷை பறிமுதல் செய்து காரில் வந்த விருதுநகர் மாவட்டம் வடமலைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி, ஆமத்தூர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ், திங்கள்சந்தை பகுதியை சேர்ந்த கிங்ஸ்லி, சூலகரை பகுதியை சேர்ந்த மோகன், தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளம் அருகேயுள்ள ஆசிர்வாதபுரத்தை சேர்ந்த ராஜன் மற்றும் வாகன ஓட்டுநர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசா மி உள்ளிட்ட 6பேரை பிடித்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    25கிலோ எடையுள்ள இந்த அம்பர்கிரீசின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.25கோடியாகும். இதனையடுத்து 6பேரையும் கைது செய்த போலீசார் அம்பர்கிரீஷை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×