search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எல்.முருகன்"

    • பிரதமர், தமிழக முதல்வரின் முயற்சியால்தான் செஸ் ஒலிம்பியாட் தமிழகத்தில் நடைபெறுகிறது.
    • செஸ் ஒலிம்பியாட் தமிழகத்தில் நடப்பது நமக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு.

    44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சென்னை ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் நரேந்திரமோடி நேற்று தொடங்கி வைத்தார்.

    விழாவில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இணை மந்திரி எல் முருகன், தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய மத்திய இணை மந்திரி எல் முருகன், பிரதமர் நரேந்திரமோடி, 2 மாதங்களுக்கு முன்பு இதே சென்னையில் இருந்து பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கி வைத்ததாக தெரிவித்தார்.

    44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வு தமிழகத்தில் நடப்பது நமக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு என்றும், பிரதமர் மற்றும் தமிழக முதல்வரின் முயற்சியால்தான் செஸ் ஒலிம்பியாட் தமிழகத்தில் நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் மோடி விளையாட்டையும், விளையாட்டு வீரர்களையும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருவதாக அவர் கூறினார்.

    நாட்டின் 75 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வரும் வேளையில், பழங்குடியினத்தை சேர்ந்த திரெளபதி முர்முவை குடியரசுத் தலைவராக்கி 75 வருடங்களில் நிகழாத சாதனையை பிரதமர் செய்துள்ளார் என்றும், ஐ. நா. சபையில் 'யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பிரதமர் பேசியதும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதி இருக்கை உள்பட பல்வேறு நிகழ்வுகளில் தமிழ் மொழியை உலக அரங்கிற்கு பிரதமர் எடுத்துச் சென்றுள்ளதாகவும் எல்.முருகன் குறிப்பிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடற்கரை சாலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தப்படுத்தும் பணி நடந்தது.
    • புதுவையில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் தவிர்க்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா பொறுப்பாளராக மத்திய மந்திரி எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து மத்திய மந்திரி எல்.முருகன் புதுவைக்கு அடிக்கடி வந்து மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

    அதுபோல் 3 நாள் பயணமாக மத்திய மந்திரி எல்.முருகன் புதுவைக்கு நேற்று வந்தார். நேற்று காரைக்கால் மாவட்டத்துக்கு சென்ற அவர் அங்கு காலராவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அரசு ஆஸ் பத்திரியில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

    2-வது நாளாக இன்று புதுவையில் பா.ஜனதா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிககளில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார்.

    கடற்கரை சாலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தப்படுத்தும் பணி நடந்தது. கடற்கரை சாலை தலைமை செயலகம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் குப்பைகளை அள்ளி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இசைஞானி இளைய ராஜாவிற்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுத்திருப்பது நாட்டிற்கே கிடைத்த கவுரவம். இளையராஜாவின் திறமையின் மூலமும், இசையின் சாதனைகள் மூலமும் நாட்டு மக்களை கட்டிப்போட்டவர்.

    புதுவையில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத புதுவையை உருவாக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக துணிபையை பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆன்லைன் சூதாட்டத்தை தடை விதிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
    • ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் விவகாரம், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    காரைக்கால்:

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்த மத்திய தகவல் ஒலிபரப்புப்புத்துறை இணை மந்திரி எல். முருகன் நலம் விசாரித்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும், இது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். ஆன்லைன் சூதாட்ட விவகாரம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அதை தடை செய்வது குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்.

    தொடர்ந்து, காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை ஆய்வு செய்த மத்திய இணை மந்திரி, மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற அவர், மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

    • கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள பள்ளி மைதானத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது.
    • சென்னையில் 7 கட்சி மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் திரள்கிறார்கள்.

    சென்னை:

    மத்திய பா.ஜனதா அரசின் 8 ஆண்டு சாதனையை விளக்கி தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது.

    38 மாவட்டங்களில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேசினார்.

    இதன் நிறைவு பொதுக்கூட்டம் சென்னையில் இன்று மாலை நடை பெறுகிறது.

    இதற்காக கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள பள்ளி மைதானத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் 7 கட்சி மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் திரள்கிறார்கள். மாலை 4 மணி அளவில் கலைநிகழ்ச்சிகள் தொடங்குகிறது. 6 மணிக்கு பொதுக்கூட்டம் தொடங்குகிறது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார்.

    மத்திய மந்திரி எல்.முருகன், சுதாகர் ரெட்டி, அகில இந்திய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், எச்.ராஜா மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துணை தலைவர் கரு.நாகராஜன் மாவட்ட தலைவர்கள் தனசேகர், காளிதாஸ், விஜயானந்த், மனோகரன், சாய்சத்யன், கபிலன், கிருஷ்ணகுமார் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • திரவுபதி முர்மு வேட்பு மனு தாக்கலின்போது ஓ.பி.எஸ், தம்பிதுரை பங்கேற்றனர்
    • எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.

    குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.

    இந்நிலையில் தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை செயலாளரிடம் திரவுபதி முர்மு நேற்று தமது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த வேட்புமனுதாக்கலின்போது அதிமுக சார்பில் ஓ.பி.எஸ், தம்பிதுரை உள்ளிட்டோரும் பாஜக ஆளும் பிற மாநில முதல்வர்களும் பங்கேற்றனர்.

    இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரவுபதி முர்மு சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் சால்வை அணித்து ஆதரவு தெரிவித்தார். இதேபோல் மத்திய இணை மந்திரி எல் முருகனும் திரவுபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

    அப்போது, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி., ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏ பி.எச்.மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    ×